உள்ளடக்கத்துக்குச் செல்

செராத்திங்

ஆள்கூறுகள்: 4°07′45.4″N 103°23′13.1″E / 4.129278°N 103.386972°E / 4.129278; 103.386972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செராத்திங்
Cherating
பகாங்
Map
ஆள்கூறுகள்: 4°07′45.4″N 103°23′13.1″E / 4.129278°N 103.386972°E / 4.129278; 103.386972
நாடு மலேசியா
மாவட்டம்குவாந்தான்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
25xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-09
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்C

செராத்திங் (மலாய் மொழி: Cherating; ஆங்கிலம்: Cherating; சீனம்: 珍拉丁) என்பது மலேசியா, பகாங், குவாந்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம். மலேசியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கடற்கரை நகரங்களில் இந்த நகரமும் ஒன்றாகும். குவாந்தான் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இந்தக் கடற்கரை நகரம் உள்ளது.[1]

தென்சீனக் கடலை எதிர்நோக்கியவாறு அமைந்து இருக்கும் இந்தக் கடற்கரை; உலகம் முழுமைக்கும் சுற்றுலா பயணிகளால் நன்கு அறியப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது. மலேசியாவில் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட சுற்றுலா தளங்களில் இதுவும் ஒன்றாகும்.

பொது

[தொகு]

இங்குள்ள செண்டோர் கடற்கரையில் உள்ள கடற்கரைகள்; தங்கும் விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகள் போன்றவை பிரபலமான சுற்றுலா இடங்களாகக் கருதப் படுகின்றன. தென்னை மரங்கள் சூழ்ந்த வெள்ளை கடற்கரையுடன், விருந்தினர் மாளிகைகள் மற்றும் சிறு சிறு கடைகளைக் கொண்டது இந்தச் சிறிய கிராமம். [1]

தீபகற்ப மலேசியாவில் மிகவும் விரும்பப்படும் கடலோர கடற்கரைகளில் செராத்திங் ஒன்றாகும். அருகிலுள்ள தீவுகளான பெர்கெந்தியான் தீவு, லாங் தெங்கா தீவு மற்றும் ரெடாங் தீவு ஆகியவற்றில் சுற்றுலாத் தொழில் தொடங்குவதற்கு முன்பே, செராத்திங் கடற்கரை; சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக விளங்கியது.

ஆமைகள் சரணாலயம்

[தொகு]

ரெடாங் தீவு மற்றும் பெர்கெந்தியான் தீவுகளில் உள்ள படிகத் தெளிவான வெள்ளை மணல் கடற்கரைகளுடன் செராத்திங் கடற்கரையை ஒப்பிட முடியாது என்றாலும்; செராத்திங் கடற்கரையின் எளிமை மற்றும் குறைந்த விலையிலான தங்கும் விடுதிகள் காரணமாக இந்தக் கடற்கரை பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது.[2]

பாரம்பரிய உடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் கலாசார கிராமம் செராத்திங்கில் உள்ளது. செராத்திங் கடற்கரையில் ஆமைகள் சரணாலயம் உள்ளது. ஆமைகள் சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் முட்டையிடுவதற்கு கடற்கரைக்கு வருவது வழக்கம்.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. 1.0 1.1 "With a sweeping white beach bordered by coconut palms, this small village of guesthouses and shops is a very popular spot for surfing, windsurfing and general beachfront slacking". Lonely Planet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 July 2023.
  2. "Cherating Beach - Wander traditional teak buildings and listen out for macaques and gibbons in the surrounding trees. Relax to the sounds of the ocean as you enjoy a massage in our open-air pagoda by the sea". Club Med (in ஆங்கிலம்). 3 July 2023. பார்க்கப்பட்ட நாள் 7 July 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செராத்திங்&oldid=4091581" இலிருந்து மீள்விக்கப்பட்டது