பெரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரா
நகரம்
Bera
Map of Bera District, Pahang.svg
ஆள்கூறுகள்: 3°15′54″N 102°26′28″E / 3.26500°N 102.44111°E / 3.26500; 102.44111ஆள்கூறுகள்: 3°15′54″N 102°26′28″E / 3.26500°N 102.44111°E / 3.26500; 102.44111
நாடு மலேசியா
மாநிலம்Flag of Pahang.svg பகாங்
மாவட்டம்பெரா மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்பெரா மாவட்ட மன்றம்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)கண்காணிப்பு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு28000
மலேசியத் தொலைபேசி எண்+609
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்C

பெரா (மலாய்: Bandar Bera; ஆங்கிலம்: Bera Town) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், பெரா மாவட்டத்தில் (Bera District) உள்ள ஒரு நகரம். அந்த மாவட்டத்தின் தலைப்பட்டணம். பகாங் மாநிலத்தில் தென் மேற்கில் உள்ளது.

இந்த நகரம் முன்பு தெமர்லோ மாவட்டத்தில் இருந்தது. 1992-ஆம் ஆண்டு பெரா மாவட்டம் உருவாக்கப் பட்டது. அதன் பின்னர் இந்தப் பெரா நகரம் அந்த மாவட்டத்தின் தலைப் பட்டணம் ஆனது.

சொற்பிறப்பியல்[தொகு]

மலேசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான பெரா ஏரி (Lake Bera) இந்த நகரத்தில்தான் உள்ளது. 1994 நவம்பர் மாதம் முதல் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் அந்த ஏரி பாதுகாக்கப் படுகிறது.

அந்த ஏரியின் பெயரே இந்த நகரத்திற்கும் வைக்கப்பட்டது. பெரா ஏரிப் பகுதியில் செமலை (Semelai) எனும் ஒராங் அஸ்லி பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, பெரா அதன் பெயரை ரெபா (Reba) எனப்படும் ஒரு வகை கடல் பாசியில் இருந்து பெறப்பட்டது.

மக்கள்தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
2000 77,685 —    
2010 94,105 +21.1%
2020 98,137 +4.3%
1992-க்கு முந்தைய புள்ளிவிவரங்கள் தெமர்லோ மாவட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
Source: [1]

பின்வருபவை 2010-ஆம் ஆண்டு மலேசிய புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.

பெராவில் உள்ள இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 60,696 67.2%
சீனர்கள் 24,511 27.1%
இந்தியர்கள் 4,739 5.2%
இதர மக்கள் 358 0.4%
மொத்தம் 90,304 100%

மேற்கோள்கள்[தொகு]

  1. "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. 15 December 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]


மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரா&oldid=3532623" இருந்து மீள்விக்கப்பட்டது