மாரான் மாவட்டம்

ஆள்கூறுகள்: 3°35′N 102°46′E / 3.583°N 102.767°E / 3.583; 102.767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாரான் மாவட்டம்
Maran District
Daerah Maran
மாரான் மாவட்டம்
மாரான் மாவட்டம்
மாரான் மாவட்டம் is located in மலேசியா
மாரான் மாவட்டம்
மாரான் மாவட்டம்
      மாரான் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°35′N 102°46′E / 3.583°N 102.767°E / 3.583; 102.767
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம் மாரான்
தொகுதிமாரான்
உள்ளூராட்சிமாரான் நகராண்மைக் கழகம்
பரப்பளவு
 • மொத்தம்1,995.59 km2 (770.50 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,11,192
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு26500
மலேசியத் தொலைபேசி+6-09
மலேசியப் போக்குவரத்து எண்C

மாரான் மாவட்டம் (ஆங்கிலம்: Maran District; மலாய்: Daerah Maran; சீனம்: 马兰县; ஜாவி: مارن ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் மாரான்.

முன்பு மாரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பெரா மாவட்டம் 1981-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.[1]

பொது[தொகு]

இந்த மாவட்டம் பகாங் மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதைச் சுற்றி குவாந்தான் மாவட்டம், பெக்கான் மாவட்டம், ரொம்பின் மாவட்டம், பெரா மாவட்டம், தெமர்லோ மாவட்டம், ஜெராண்டுட் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

முன்பு மாரான் மாவட்டம், பெக்கான் மாவட்டத்தின் கீழ் ஒரு நகராண்மைக் கழகமாக இருந்தது.[2]

1981 ஜனவரி மாதம்; மாரான் நகரம், தெமர்லோ மாவட்டத்தின் புக்கிட் செகும்பல் (Mukim Bukit Segumpal), செனோர் (Chenor), கெர்த்தாவ் (Kertau) ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு புதிய மாரான் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

மாரான் மாவட்டத்தில் நான்கு முக்கிம்கள் உள்ளன:

  • புக்கிட் செகும்பால் - Bukit Segumpal
  • செனோர் - Chenor
  • கெர்த்தாவ் - Kertau
  • லூயிட் - Luit

மக்கள்தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1991 1,10,264—    
2000 1,12,606+2.1%
2010 1,11,056−1.4%
2020 1,12,330+1.1%

பின் விவரங்கள் மலேசிய புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.

மாரான் இனக்குழுக்கள் 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம் மக்கள்
தொகை
விழுக்காடு
பூமிபுத்ரா 106,406 95.7%
சீனர் 3,406 3.1%
இந்தியர் 1,219 1.1%
மற்றவர் 161 0.1%
மொத்தம் 111,192 100%

மேற்கோள்[தொகு]

  1. "Pemasyhuran". pdtmaran.pahang.gov.my. Archived from the original on 2018-03-17. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.
  2. "Lembaga Bandaran Kecil Maran". Laman Web Rasmi Majlis Daerah Maran. பார்க்கப்பட்ட நாள் 18 February 2016.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரான்_மாவட்டம்&oldid=3591047" இலிருந்து மீள்விக்கப்பட்டது