திரிங்காப்
திரிங்காப் Tringkap Town Bandar Tringkap | |
---|---|
ஆள்கூறுகள்: 3°31′N 101°55′E / 3.517°N 101.917°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 39100 |
தொலைபேசி | +6-09 |
வாகனப் பதிவெண்கள் | C |
இணையதளம் | www |
திரிங்காப் (ஆங்கிலம், மலாய் மொழி: Tringkap) என்பது மலேசியா, பகாங், கேமரன் மலையில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். தாப்பா நகரில் இருந்து 72 கி.மீ. தொலைவிலும், கோலாலம்பூரில் இருந்து 215 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. இந்த நகருக்கு மிக அருகாமையில் இருப்பது பிரிஞ்சாங் நகரம். திரிங்காப்பில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது.[1]
முதன் முதலில் தேயிலை பயிர் செய்வதற்காக வந்த பிரித்தானியர்கள், இங்குதான் முதன்முதலில் தங்களுடைய அலுவலகங்களை அமைத்துக் கொண்டனர். போ தேயிலை நிறுவனத்தின் அலுவலகங்கள் முன்பு இங்குதான் இருந்தன. அதனால், சீனர்கள் இந்த இடத்தை டாய் கோங் சி (Dai Gong Si) என்று அழைக்கின்றனர்.
பொது
[தொகு]திரிங்காப் தேனீப் பண்ணை
[தொகு]இங்கு தியோங்ஹுவா பிரிவைச் சேர்ந்த சீனர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் காய்கறி பயிர் செய்கின்றனர் அல்லது சிறிய அளவிலான மலர்ப் பண்ணைகளை வைத்து இருக்கின்றனர். இங்கு பல காய்கறித் தோட்டங்கள் உள்ளன. திரிங்காப்பில் உள்ள தேனீப் பண்ணை (Tringkap Bee Farm) பிரசித்தி பெற்றது.[2]
கேமரன் மலைக்குச் செல்வதற்கு இரு சாலைகள் உள்ளன. முதல் வழி தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்குச் செல்லும் வழி. மற்றொன்று சிம்பாங் பூலாய், குவா மூசாங் வழியாகக் கேமரன் மலைக்குச் செல்லும் வழி. இந்த வழிகளில் இரண்டாவது வழியைப் பயன்படுத்துபவர்கள் கம்போங் ராஜா, ரோஸ் வெளி எனும் ரோஜா பண்ணை (Rose Valley), தேனீப் பண்ணையைத் தாண்டி திரிங்காப் நகரத்திற்கு வர வேண்டும்.[3]
திரிங்காப் ரோஜா பண்ணை
[தொகு]இங்குள்ள ரோஜா பண்ணை மிகவும் பிரசித்தி பெற்றது. 450 வகையான் ரோஜாக்கள் உள்ளன. இந்த பண்ணையில் நுழைந்ததுமே ரோஜா வாசனை மூக்கைத் துளைக்கும். இங்கே அரிய கேமரன் மலை காட்டு ரோஜாக்களும் உள்ளன.[4]
திரிங்காப் நகரத்திற்கு அருகாமையில் உள்ள மற்ற நகரங்கள் ரிங்லெட், தானா ராத்தா, திரிங்காப், கோலா தெர்லா, கம்போங் ராஜா.
மேற்கோள்
[தொகு]- ↑ Cameron Tringkap Bee Farm is an apiary at Tringkap town, located along the main road about 7km north of Brinchang.
- ↑ Want to learn interesting facts about bees and different types of bees? Have a look at Cameron Tringkap Bee Farm located in Tringkap within the vegetable markets.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Cameron Tringkap Bee Farm at Tringkap.
- ↑ http://rosesrosasifu.blogspot.com/2011/02/rose-valley-at-cameron-highlands.html Situated at Tringkap, Cameron Highland, Rose Valley boasts an amazing 450 varieties of roses in all shapes and sizes.