பெரா ஏரி

ஆள்கூறுகள்: 3°5′15″N 102°36′55″E / 3.08750°N 102.61528°E / 3.08750; 102.61528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரா ஏரி
பெரா ஏரி is located in மலேசியா
பெரா ஏரி
பெரா ஏரி
அமைவிடம்பெரா, பகாங், மலேசியா
ஆள்கூறுகள்3°5′15″N 102°36′55″E / 3.08750°N 102.61528°E / 3.08750; 102.61528
முதன்மை வெளியேற்றம்பகாங் ஆறு
வடிநில நாடுகள்மலேசியா
அதிகபட்ச நீளம்35 km (22 mi)
அதிகபட்ச அகலம்20 km (12 mi)
அலுவல் பெயர்Tasek Bera
தெரியப்பட்டது10 November 1994
உசாவு எண்712[1]

பெரா ஏரி (மலாய்: Tasik Bera; ஆங்கிலம்: Bera Lake; சீனம்: 百乐湖); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், பெரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரியாகும்.[2]

தீபகற்ப மலேசியா வின் கிழக்குக் கரை மலைத் தொடரில் இந்த ஏரி அமைந்து உள்ளது. இதன் சகோதர ஏரி என்று அழைக்கப்படும் சினி ஏரி; பெரா ஏரியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.

பொது[தொகு]

இந்த ஏரியின் நீளம் 35 கி.மீ.; அகலம் 20 கி.மீ. இந்த ஏரியில் கொள்ளப்படும் நீர், பகாங் ஆற்றில் கலக்கிறது. இதன் ஆழம் சராசரியாக 5 மீட்டர் அளவு.

பெரா ஏரியின் பெயர்தான் பெரா மாவட்டத்திற்கும்; பெரா நகரத்திற்கும்; மற்றும் பெரா நாடாளுமன்றத் தொகுதிக்கும் வைக்கப்பட்டு உள்ளது.

ராம்சர் உடன்படிக்கை[தொகு]

தீபகற்ப மலேசியாவின் மிகப் பெரிய நன்னீர் சதுப்பு நிலமாக விளங்குகிறது. தவிர இந்த ஏரி ஒரு தனித்துவமான ஈரநில வனப் பகுதியாகவும் உள்ளது.

1994 நவம்பர் மாதம் முதல் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் அந்த ஏரி பாதுகாக்கப் பட்டு வருகிறது.[3]

பெரா ஏரிப் பகுதியில் செமலை (Semelai) எனும் ஒராங் அஸ்லி பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, பெரா எனும் பெயர் ரெபா (Reba) எனப்படும் ஒரு வகை கடல் பாசியில் இருந்து பெறப்பட்டது. பெரா ஏரியில் அந்த வகையான கடல்வாழ் பாசிகள் உள்ளன.[4]

அமைவு[தொகு]

இதன் பரப்பளவு ஏறக்குறைய 24,000 ஹெக்டர். பல்வேறு வகையான மழைக்காட்டுத் தாவரங்கள் மற்றும் பல்வேறு வகையான விலங்கினங்களும் உள்ளன. படர்ந்த சதுப்பு நிலக் காடுகளில், புலிகள், தபீர்கள், யானைகள், சிறுத்தைகள், அரிதான மலாய் முதலைகள் வாழ்கின்றன.

இங்கு பொழுது போக்கு அம்சங்களாக மீன்பிடித்தல், படகு சவாரி மற்றும் பறவைகள் பார்ப்பது போன்றவை உள்ளன.

ஏரிக்கரையில் பார்க் லேக் ரிசார்ட் எனும் விடுதி உள்ளது. நான்கு அறைகளைக் கொண்ட விடுமுறைக் காலக் குடிசைகள் உள்ளன. 40 பேர் தங்குவதற்கான தங்குமிட வசதிகளை அந்த விடுதி வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரா_ஏரி&oldid=3427739" இருந்து மீள்விக்கப்பட்டது