தியோமான் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோமான் தீவு
உள்ளூர் பெயர்:
Tioman Island
Tioman island (3679435126).jpg
தியோமான் கடற்கரை
தியோமான் தீவு is located in மலேசியா
தியோமான் தீவு
தியோமான் தீவு
      தியோமான் தீவு
      மலேசியா
புவியியல்
அமைவிடம்தென்சீனக் கடல்
ஆள்கூறுகள்2°49′N 104°11′E / 2.817°N 104.183°E / 2.817; 104.183ஆள்கூறுகள்: 2°49′N 104°11′E / 2.817°N 104.183°E / 2.817; 104.183
தீவுக்கூட்டம்தீபகற்ப மலேசியா; மலேசியா
பரப்பளவு136 km2 (53 sq mi)
கரையோரம்245 km (152.2 mi)
உயர்ந்த ஏற்றம்1,038 m (3,406 ft)
உயர்ந்த புள்ளிகுனோங் காஜாங்
(Gunung Kajang)
(Gunung Ribu)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை2023 (2016-ஆம் ஆண்டு)

தியோமான் தீவு (மலாய்: Pulau Tioman; ஆங்கிலம்: Tioman Island; சீனம்: 刁曼岛; ஜாவி: ڤولاو تياومن) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், ரொம்பின் மாவட்டத்தில் தென்சீனக் கடலில் அமைந்து உள்ள ஒரு தீவு. இந்தத் தீவு ஒரு முக்கிம் எனும் துணை மாவட்டம் ஆகும்.[2]

பகாங் மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்தத் தீவு 39 கி.மீ. நீளமும் 12 கி.மீ. அகலமும் கொண்டது. 1970-களில், உலகின் மிக அழகான தீவுகளில் ஒன்றாகத் தியோமான் தீவை டைம் (பத்திரிகை) (Time (magazine) தேர்ந்தெடுத்தது.

பொது[தொகு]

இந்தத் தீவில் ஏழு கிராமங்கள் உள்ளன. கம்போங் தெக்கேக் (Kampung Tekek) மிகப்பெரிய தீவு. அதிக மக்கள்தொகை கொண்டது. அடர்ந்த காடுகள் நிறைந்த இந்தத் தீவில் மக்கள் தொகை குறைவாகவே உள்ளது. மேலும் இந்தத் தீவு ஏராளமான பவளப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.

பிரபலமான நீரடி நீந்தல் (Scuba Diving; Snorkelling) போன்ற கேளிக்கை நடவடிக்கைகளுக்கு சிறந்த இடமாக உள்ளது. தீவைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளுக்காக பல ஓய்வு விடுதிகள் உள்ளன. இருப்பினும் தியோமான் தீவில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை.

சட்டப் பிரச்சினை[தொகு]

பகாங் மாநிலம், தியோமான் தீவின் சட்டப்படியான உரிமையாளராகும். ஆனால் 1950-ஆம் ஆண்டில் ஜொகூர் மாநிலம் பறித்துக் கொண்டது. இருப்பினும் பல சட்ட வாதங்களுக்குப் பின்னர், 1965-ஆம் ஆண்டில், ஜொகூர் சுல்தான் அந்தத் தீவை பகாங் மாநிலத்திடமே மீண்டும் ஒப்படைத்தார்.

தியோமான் தீவு பகாங் மாநிலத்தின் ஒரு பகுதியாகும். இருப்பினும், புவியியல் ரீதியாகப் பார்த்தால், பகாங்கை விட ஜொகூர் நிலப்பகுதிக்குத் தான் மிக அருகில் உள்ளது. அதனால் ஜொகூர் கடற்கரை நகரமான மெர்சிங் நகரில் இருந்து தான் படகுப் பயணத்தின் மூலம் இந்தத் தீவிற்குச் செல்ல முடியும்.

கிராமங்கள்[தொகு]

தியோமான் தீவின் தென்பகுதி மலைகள்

தியோமான் தீவில் ஏழு கிராமங்கள் உள்ளன:

  • சாலாங் - Salang
  • ஆயர் பாத்தாங் - Air Batang
  • தெக்கேக் - Tekek
  • பாயா - Paya
  • கெந்திங் - Genting
  • முக்குட் - Mukut
  • ஜுவாரா - Juara

ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனியாகத் தொலைப்பேசி அழைப்பு எண்கள் வழங்கப்பட்டு உள்ளன.

தியோமான் தீவில் உள்ள தொலைபேசி எண்கள் 09-413, 09-419, 09-582, 09-583, 09-584 எனும் முன் ஒட்டில் தொடங்குகின்றன.

வரலாறு[தொகு]

1665-இல் வரையப்பட்ட "Paulo Tymon", Nieuhof: Ambassade vers la Chine, எனும் தலைப்பைக் கொண்ட படம்.
தியோமான் தீவிற்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட எச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ் போர்க்கப்பல்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆஸ்ட்ரோனேசிய மீனவர்கள் தியோமான தீவைத் தங்களின் உறைவிடமாகப் பயன்படுத்தி உள்ளார்கள். தங்களின் படகுகளுக்கும் கப்பல்களுக்கும் வழிகாட்டும் புவியல் புள்ளியாகத் தியோமான தீவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.[2]

புதிய நீர் பெறுவதற்கும்; காட்டு மரங்களின் தேவைக்கும்; புயல் காலங்களில் ஓய்வு எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சீன, அரேபிய வர்த்தகக் கப்பல்கள்[தொகு]

கடந்த ஆயிரம் ஆண்டுகளில், சீன, அரேபிய மற்றும் ஐரோப்பிய வர்த்தகக் கப்பல்களுக்கு உறைவிடமாக விளங்கியுள்ளது. தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் பழங்காலத்து சீனப் பீங்கான் துண்டுகள் கிடைத்துள்ளன. எடுத்துக்காட்டாக இந்தப் பகுதியில் மூழ்கிய இரு போர்க் கப்பல்களைச் சொல்லலாம்.

1941 டிசம்பர் 9-ஆம் தேதி, எச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ் (HMS Prince of Wales); மற்றும் எச்.எம்.எஸ். ரிபல்ஸ் (HMS Repulse) ஆகிய இரு போர்க் கப்பல்கள் மலாயாவின் கிழக்கு கடற்கரை வழியாகக் குவாந்தான் துறைமுகத்திற்குச் சென்றன.

இரு போர்க் கப்பல்களின் எச்சங்கள்[தொகு]

தியோமான் தீவிற்கு அருகில், வான் பாதுகாப்பு இல்லாததால், இரண்டு கப்பல்களும் ஜப்பானிய விமானங்களின் குண்டு வீச்சுகளுக்கு இலக்காகி தென்சீனக் கடலில் மூழ்கின.[3] அந்தக் கப்பல்களின் எச்சங்கள் இன்றும் இந்தத் தீவின் கடல்பகுதியில் காணப்படுகின்றன.

இயற்கை[தொகு]

தியோமான் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியும்; அதன் அருகிலுள்ள எட்டு தீவுகளும் கடல் பூங்காக்கள் (Marine Parks) என அறிவிக்கப்பட்டு உள்ளது.[2]

பல்வேறு கடல்வாழ் உயிரினங்களும்; தியோமான் தீவின் மழைக்காட்டுப் பகுதியும்; 1972-ஆம் ஆண்டில் தியோமான் தீவு வனவிலங்கு காப்பகமாக (Pulau Tioman Wildlife Reserve) அறிவிக்கப்பட்டது.[4]

இருப்பினும், அசல் காட்டுப் பகுதியின் பெரும்பகுதி 1984-இல் விவசாயம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு விட்டது. ஏறக்குறைய 8296 எக்டர் (Hactre) பரப்பளவு எஞ்சி உள்ளது. பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

அரிதான உயிரினங்கள்[தொகு]

பிந்துராங் (Binturong); நண்டு உண்ணும் நீண்ட வால் மக்கா குரங்கு (Crab-eating Long-Tailed Macaque); பெரிய தேவாங்கு (Slow Loris); பெரிய கருப்பு அணில் (Black Giant Squirrel); பறக்கும் சிவப்பு பெரும் அணில் (Red giant flying squirrel); சருகுமான் (Mouse Deer); ஆசிய தூரிகை-வால் முள்ளம்பன்றி (Asiatic brush-tailed porcupine); ஆசிய மரநாய் (Palm Civet) போன்ற பல பாலூட்டிகள் தீவில் உள்ளன.[5]

இங்கு மொத்தம் 45 வகையான பாலூட்டிகள் மற்றும் 138 வகையான பறவைகள் உள்ளன. கப்பற்பறவை (Majestic Frigatebird) எனும் மிக அரிதான பறவை இனமும் உள்ளது. [6]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Pulau Tioman". 19 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 Abdul, Jasmi (1999). "An Introduction to Pulau Tioman". The Raffles Bulletin of Zoology (National University of Singapore) Supplement No. 6: 3–4. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s6/s6rbz003-004.pdf. பார்த்த நாள்: 2022-06-06. 
  3. "On December 10, 1941, the battlecruiser HMS Repulse and battleship HMS Prince of Wales sank off the east coast of Malaysia". History Of Diving Museum. 31 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Tioman Islands Wildlife Sanctuary/Reserve - (Pulau Tioman, Pulau Tulai, Pulau Chebeh) Gazetted under the Wild Animals and Birds Protection Ordinance 1955 (Section 7(i))". Malaysia Biodiversity Information System (MyBIS) (ஆங்கிலம்). 6 June 2022 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Jungle trekking in Tioman". Tioman Ferry Tickets, Singapore. 19 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. Stuart, Simon (2006). "Leptolalax kajangensis". IUCN Red List of Threatened Species 2006: e.T61840A12566282. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T61840A12566282.en. https://www.iucnredlist.org/species/61840/12566282. பார்த்த நாள்: 27 December 2017. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தியோமான்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோமான்_தீவு&oldid=3585336" இருந்து மீள்விக்கப்பட்டது