மெரம்போங் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெரம்போங் தீவு
Pulau Merambong
ڤولاو مرمبوڠ
சிங்கப்பூரின் துவாஸ் நகரிலிருந்து புலாவ் மெரம்போங்
சிங்கப்பூரின் துவாஸ் நகரிலிருந்து புலாவ் மெரம்போங்
Map
புவியியல்
அமைவிடம்ஜொகூர் நீரிணை, பொந்தியான் மாவட்டம்
ஜொகூர்
 மலேசியா
தென் கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்1°18′54″N 103°36′36″E / 1.31500°N 103.61000°E / 1.31500; 103.61000
தீவுக்கூட்டம்தீபகற்ப மலேசியா; மலேசியா
மொத்தத் தீவுகள்1
நிர்வாகம்
2014-ஆம் ஆண்டில் மெரம்போங் தீவு

மெரம்போங் தீவு அல்லது புலாவ் ஊலார் (மலாய்: Pulau Merambong; ஆங்கிலம்:Pulau Merambong அல்லது Pulo Ular) என்பது மலேசியா, ஜொகூர், பொந்தியான் மாவட்டத்தின் ஜொகூர் நீரிணையில் உள்ள ஒரு தீவாகும்.

சிங்கப்பூரின் துவாஸ் கடற்கரையிலிருந்து 1 கிலோமீட்டர் (0.62 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. தீவின் பெரும்பாலான பகுதி சதுப்பு நிலத்தைக் கொண்டது. இந்தத் தீவு மலேசியா, ஜொகூர், பொந்தியான் மாவட்ட நகராட்சியின் பராமரிப்பில் உள்ளது.

பொது[தொகு]

மெரம்போங் தீவு, நாட்டிலேயே மிகப்பெரிய கடல் புல்வெளியில் அமைந்துள்ளது. இந்தக் கடல் புல்வெளிப் படுகை, இந்தத் தீவில் இருந்து ஜொகூரில் உள்ள பூலாய் ஆற்றின் முகத்துவாரம் வரை நீண்டுள்ளது.

கடற்புல்களை உண்ணும் டுகோங் எனும் கடற்பசுக்கள்; மற்றும் கடல் குதிரைகள், அருகிலுள்ள பவளப்பாறைகளில் தங்களின் வாழ்விடங்களை உருவாக்கிக் கொள்கின்றன.[1]

தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் உருவாகிவரும் மேம்பாட்டுத் திட்டங்களினால், கடல் குதிரைகள், கடற்பசுக்கள்; மற்றும் ஆமைகளின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தத் தீவை இயற்கை பூங்காவாக அரசிதழில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[2][3]

இறையாண்மை சர்ச்சை[தொகு]

2008 மே 23-ஆம் தேதி அனைத்துலக நீதிமன்றத்தின் (International Court of Justice) தீர்ப்பின்படி பெத்ரா பிராங்கா (Pedra Branca) தீவின் இறையாண்மை சிங்கப்பூருக்கு வழங்கப்பட்டது. பெத்ரா பிராங்கா தீவு சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இருந்து 24 கடல் மைல்கள் (44 கிமீ) தொலைவிலும்; மலேசியக் கடற்கரையில் இருந்து தென்கிழக்கே 7.7 கடல் மைல்கள் (14.3 கி.மீ.) தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த பெத்ரா பிராங்கா பிரச்சினைக்குப் பின்னர், புலாவ் மெரம்போங் மீதான மலேசிய இறையாண்மை குறித்த கவலைகள் மலேசியாவில் எழுப்பப்பட்டன. இருப்பினும், புலாவ் மெரம்போங் பற்றி சிங்கப்பூர் அதிகமாகப் கவலை கொள்ளவில்லை[4] 1995-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் மலேசியா - சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே ஓர் எல்லை வரையறுக்கப்பட்டது.

பெட்ரா பிராங்கா[தொகு]

அதன் பின்னர் அந்த இரு நாடுகளும் அவற்றின் பொதுவான எல்லைகளை வரையறுக்க இன்னும் முறையான ஒப்பந்தம் எதையும் செய்து கொள்ளவில்லை. சிங்கப்பூர் மூன்று கடல் மைல் (6 கி.மீ.) கடல் எல்லையைக் கோருகிறது, மலேசியா 12 கடல் மைல் (22 கி.மீ.) கடல் எல்லையைக் கோருகிறது.[5]

ஜொகூர் நீரிணையின் மேற்கு நுழைவாயிலில் சிங்கப்பூர் மேற்கொண்ட நிலச் சீரமைப்புப் பணிகள் மூலம் மலேசிய கடல் எல்லைக்குள் சிங்கப்பூர் ஊடுருவியதாகக் கூறப்படும் சர்ச்சைகள் இன்னும் உள்ளன. அந்தச் சர்ச்சை இன்று வரையில் தீர்க்கப்படவில்லை.[6]

காட்சியகம்[தொகு]

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் இருந்து மெரம்போங் தீவு

மேற்கோள்கள்[தொகு]

  1. Thing, Siew Shuen (21 November 2007). "Save mangroves in Sungai Pulai". The Star (Malaysia). 
  2. Chai, Mei Ling (10 March 2008). "Save our seahorses". New Straits Times. 
  3. "The proposal that Marambong Island near Gelang Patah here, be used as a base for the Malaysian Maritime Enforcement Agency". New Straits Times Press. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.
  4. Charney, Jonathan I (2005). International Maritime Boundaries. Martinus Nijhoff Publishers. pp. 2345–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-411-0345-7.
  5. "One such dispute exists between Singapore and Malaysia, which (re)emerged unexpectedly in October last year. This dispute concerns the maritime area in the Johor Strait, which is off the coast of Singapore's reclaimed land area known as Tuas". www.lowyinstitute.org. பார்க்கப்பட்ட நாள் 3 October 2022.
  6. Charney, Jonathan I (2005). International Maritime Boundaries. Martinus Nijhoff Publishers. pp. 2345–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-411-0345-7.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரம்போங்_தீவு&oldid=3910797" இலிருந்து மீள்விக்கப்பட்டது