உள்ளடக்கத்துக்குச் செல்

பொந்தியான் மாவட்டம்

ஆள்கூறுகள்: 1°35′N 103°25′E / 1.583°N 103.417°E / 1.583; 103.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொந்தியான் மாவட்டம்
Pontian District
பொந்தியான் மாவட்டம்-இன் கொடி
கொடி
ஜொகூரில் பொந்தியான் மாவட்டத்தின் அமைவிடம்
ஜொகூரில் பொந்தியான் மாவட்டத்தின் அமைவிடம்
பொந்தியான் மாவட்டம் is located in Malaysia District
பொந்தியான் மாவட்டம்
பொந்தியான் மாவட்டம்
மலேசியாவின் பொந்தியான் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 1°35′N 103°25′E / 1.583°N 103.417°E / 1.583; 103.417
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
தொகுதிபொந்தியான் கிச்சில்
உள்ளாட்சி அரசுபொந்தியான் நகராட்சி மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிசுல்கிப்லி முகமட் தாகிர்
பரப்பளவு
 • மொத்தம்932.64 km2 (360.09 sq mi)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்1,44,324
 • அடர்த்தி150/km2 (400/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (ம.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை)
அஞ்சல் குறியீடு
82xxx
தொலைபேசிக் குறியீடு+6-07
போக்குவரத்துப் பதிவெண்J

பொந்தியான் மாவட்டம் (ஆங்கிலம்:Pontian District); மலாய்:Daerah Pontian; சீனம்:笨珍县; ஜாவி:فونتيان)) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தின், தென் மேற்கில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கூலாய் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு நகரங்களின் பெயர்களிலும் பொந்தியான் எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது, பொந்தியான் பெசார் மற்றும் பொந்தியான் கிச்சில். அவற்றுள் பொந்தியான் கிச்சில் நகரம், பொந்தியான் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது.

இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் சதுப்பு நிலங்களால் ஆனவை. முக்கியத் தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

பொந்தியான் மாவட்டம் மீன்பிடி, அன்னாசிப் பண்ணைகள் மற்றும் பனை எண்ணெய் தோட்டங்களின் மையமாக இருந்தது. இருப்பினும் அண்மைய காலமாக விவசாயம், மீன்பிடி, தொழில்துறை மற்றும் சுற்றுலாத் துறையாக வளர்ச்சி கண்டு வருகிறது.[2]

இந்த மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் இயற்கைச் சூழல் சுற்றுலா, மீன்பிடி, கடல்சார் மீன் வளர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் உணவு பதப்படுத்துதல்.[3]

நிர்வாகப் பகுதிகள்[தொகு]

பொந்தியான் மாவட்டம் 10 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

 • அப்பி அப்பி (Api-Api)
 • ஆயர் பாலோய் (Ayer Baloi
 • ஆயர் மாசின் (Ayer Masin
 • பெனுட் (Benut)
 • ஜெராம் பத்து (Jeram Batu)
 • பெங்காலான் ராஜா (Pengkalan Raja)
 • (பொந்தியான் (Pontian)
 • (ரிம்பா தெர்ஜுன் (Rimba Terjun)
 • செர்காட் (Serkat)
 • சுங்கை காராங் (Sungai Karang)
 • சுங்கை பீங்கான் (Sungai Pinggan)

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) பொந்தியான் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P163 பொந்தியான் அகமட் மஸ்லான் பாரிசான் நேசனல் (அம்னோ)
P163 தஞ்சோங் பியாய் வீ செக் செங் (Wee Jeck Seng) பாரிசான் நேசனல் (ம.சீ.ச.)

ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் பொந்தியான் மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்: [4]

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P164 N53 பெனுட் அஸ்னி முகமட் பாரிசான் நேசனல் (அம்னோ)
P164 N54 புலாய் செபாத்தாங் முகமட் தக்கிடின் செ மான் பாக்காத்தான் ஹரப்பான் (அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி))
P165 N55 பெக்கான் நானாஸ் இயோ துங் சியோங் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P165 N56 குக்குப் முகமட் ஓஸ்மான் யூசோப் பாரிசான் நேசனல் (அம்னோ)

பொந்தியான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி[தொகு]

பொந்தியான் மாவட்ட மன்றம்

பொந்தியான் மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி. 1939-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[5]

இந்தப் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை 64. ஆண்கள் 35 பேர்; பெண்கள் 29 பேர். 14 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். பள்ளி தொடர்பான படங்கள்: பொந்தியான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

 1. "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 22 May 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012.
 2. "A positive change in its fortunes". The Star Online. 15 January 2018. பார்க்கப்பட்ட நாள் 23 November 2021.
 3. "Muafakat ke Arah #Johor Berkemajuan" (PDF). Muafakat Johor. பார்க்கப்பட்ட நாள் 23. {{cite web}}: Check date values in: |access-date= (help)
 4. "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்". Archived from the original on 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
 5. Sekolah Jenis Kebangsaan (Tamil) Jalan Parit Ibrahim, Pontian adalah satu-satunya sekolah aliran Bahasa Tamil di Daerah Pontian.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொந்தியான்_மாவட்டம்&oldid=3625580" இலிருந்து மீள்விக்கப்பட்டது