மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
University of Technology Malaysia
Universiti Teknologi Malaysia
பல்கலைக்கழக நுழைவாயில்
முந்தைய பெயர்கள்
தொழில்நுட்ப பள்ளி (1904–1941)
தொழில்நுட்ப கல்லூரி (1942–1971)
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (1971–1975)
குறிக்கோளுரைகடவுளின் பெயரால் மனித குலத்திற்கு
(Kerana Tuhan Untuk Manusia)
(In the Name of God for Mankind)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
(ஆய்வுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்14 மார்ச்சு 1972; 52 ஆண்டுகள் முன்னர் (1972-03-14)
வேந்தர்சுல்தானா சரித் சோபியா
(Raja Zarith Sofiah)
துணை வேந்தர்அகமட் பவுசி இசுமாயில்
கல்வி பணியாளர்
2,624[1]
மாணவர்கள்32.325 (2020)[2][1]
பட்ட மாணவர்கள்14,538 (2020)[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்8,775 (2020)[2]
4,555 (2020)[2]
அமைவிடம்
Jalan Iman, 81310 Skudai, Johor, Malaysia
, , ,
நிறங்கள்தங்கப் பழுப்பு; தங்கம்
        
சேர்ப்புதென்கிழக்காசிய உயர் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, இசுலாமிய உலகப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு APUCEN
இணையதளம்www.utm.my

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Teknologi Malaysia; ஆங்கிலம்:University of Technology Malaysia என்பது மலேசியா, ஜொகூர், இசுகந்தர் புத்திரி, சுகூடாய் நகரில் உள்ள ஒரு முதன்மையான பொது ஆய்வு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். உலகப் பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியலில், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தற்போது உலகில் 188-ஆவது இடத்தில் உள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொறியியல் துறையில் மிகவும் பிரபலமான இந்தப் பல்கலைக்கழகத்தின் பயிற்று மொழி ஆங்கிலம் ஆகும்.

பொது[தொகு]

1975 ஏப்ரல் 1-ஆம் தேதி, இந்தப் பல்கலைக்கழகத்தின் பெயர் தேசிய தொழில்நுட்ப் கல்விக் கழகம் என்பதில் இருந்து மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், மாற்றம் செய்யப்படுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே, 14 மார்ச் 1972 -இல், இந்தப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்று விட்டது.

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சுகூடாய் பிரதான வளாகம் 1222 எக்டர் பரப்பளவைக் கொண்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கிளை வளாகம் கோலாலம்பூரில் உள்ளது. அதன் பரப்பளவு 18 எக்டர். பிரதான சுகூடாய் வளாகத்தில் 13 கல்வித் துறைகள்; 17 குடியிருப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் சுகூடாய் பிரதான வளாகத்தின் பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் குடியிருப்புக் கல்லூரிகளில் தங்கிப் பயில்கின்றனர்.

ஆராய்ச்சி மேலாண்மை மையம்[தொகு]

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மேலாண்மை மையம் 1982-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முன்பு இந்த மேலாண்மை மையம்; 'ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைப் பிரிவு' என்றும்; 'ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு' என்றும் அழைக்கப்பட்டது. இறுதியாக 1997-ஆம் ஆண்டில் 'ஆராய்ச்சி மேலாண்மை மையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தர வரிசை[தொகு]

உலகப் பல்கலைக்கழகங்களின் வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையின்படி, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நான்காவது இடத்திலும், மலேசியாவில் முதலிடத்திலும் பட்டியலிடப் படுகிறது.[1][3][4]

2016-ஆம் ஆண்டில் உலகப் பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியலின், பொறியியல் & தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் பிரிவில், இந்தப் பல்கலைக்கழகம் 100-ஆவது இடத்தைப் பிடித்தது.[1] இருப்பினும், உலகளாவிய பல்கலைக்கழகத் தகுதியை அடைவது; மற்றும் 2020-ஆம் ஆண்டளவில் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் 50-ஆவது இடத்திற்குள் தரவரிசைப்படுத்துவது; ஆகியவற்றை மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.[5]

தரவரிசை 2012 2014 2015 2016 2017 2018 2019 2020 2021 2022 2023 2024
உலக பல்கலைகழகங்களின் தரவரிசை[6] 358 355 294 303 288 253 228 217 187 191 203 188

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Universiti Teknologi Malaysia Top Universities". Quacquarelli Symonds(QS). பார்க்கப்பட்ட நாள் 7 March 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 "Facts and Figures – About UTM". Universiti Teknologi Malaysia (UTM). பார்க்கப்பட்ட நாள் 7 March 2017.
  3. "Universiti Teknologi Malaysia". ARWU. பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.
  4. "Universiti Teknologi Malaysia". Times Higher Education. பார்க்கப்பட்ட நாள் 4 August 2023.
  5. Bernama. "UTM Strives to be Among World's Top 50 Universities". Malaysian Digest. Archived from the original on 6 September 2012.
  6. "Universiti Teknologi Malaysia". USNWR. பார்க்கப்பட்ட நாள் 4 August 2023.

வெளி இணைப்புகள்[தொகு]