உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய சபா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய சபா பல்கலைக்கழகம்
University of Malaysia Sabah
Universiti Malaysia Sabah
மலேசிய சபா பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைசிறந்த உறுதிப்பாடு
(Bertekad Cemerlang)
(Strive to Excel)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்24 நவம்பர் 1994
வேந்தர்சுகார் மகிருடின்
(யாங் டி பெர்துவா சபா)
துணை வேந்தர்டாக்டர் காசிம் அஜி மன்சூர்
(Dr. Kasim Hj Mansor)
கல்வி பணியாளர்
1,056 (2020)
மாணவர்கள்14,637 (2020)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்2,939 (2020)
அமைவிடம்
Jalan UMS, 88400 Kota Kinabalu, Sabah, Malaysia
கோத்தா கினபாலு, சபா, மலேசியா
இணையதளம்www.ums.edu.my

மலேசிய சபா பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Malaysia Sabah; ஆங்கிலம்: University of Malaysia Sabah; (UMS) சீனம்: 马来西亚沙巴大学) என்பது மலேசியா, சபா, கோத்தா கினபாலு மாநகரில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். 24 1994 நவம்பர் 24-ஆம் தேதி; பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பல்கலைக்கழகச் சட்டம் 1971-இன் பிரிவு 6 (1)-இன் கீழ், மலேசிய நாட்டின் ஒன்பதாவது பொது பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது.[1][2]

இந்தப் பல்கலைக்கழகம் கோத்தா கினபாலுவின் செபாங்கர் விரிகுடாவில் 999 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கினபாலு மலை மற்றும் தென் சீனக் கடலின் பின்னணியில், அமைந்து இருக்கும் இந்தப் பல்கலைக்கழகம், பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவின் மிக அழகான பல்கலைக்கழக வளாகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[3]

பொது

[தொகு]

1995-ஆம் ஆண்டில், முதன்முதலில் இந்தப் பல்கலைக்கழகம் சபா, லிக்காஸ் நகரில் உள்ள சபா அறக்கட்டளை சமூகக் கல்லூரி வளாகத்தில் இளங்கலை துறையின் மூலமாகத் தொடங்கப்பட்டது. அப்போது அது ஒரு தற்காலிக இடமாக இருந்தது. 1996-ஆம் ஆண்டில், மெங்கத்தால் டெலிகாம் பயிற்சிக் கல்லூரியில், கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது.

1999 சூன் மாதம் தொடங்கி 2000 மே மாதம் வரையில், மலேசிய சபா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், செபாங்கர் விரிகுடாவில் உள்ள அதன் நிரந்தர வளாகத்திற்கு படிப்படியாக மாற்றப்பட்டன. 1999 சனவரி மாதம், லபுவான் தீவில் அதன் பன்னாட்டு வளாகத்தை நிறுவியது. அதன் மூலம் இந்தப் பல்கலைக்கழகம் அதன் கல்வி வரம்பை லபுவான் கூட்டரசு பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தியது.

லபுவான் தீவில் உள்ள அதன் பன்னாட்டு வளாகம் லபுவான் நகரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. 1 சனவரி 1999-இல், 356 மாணவர்களுடன் அந்தப் பன்னாட்டு வளாகம் செயல்படத் தொடங்கியது.[4]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Abdullah, Salfarah (28 May 2015). "UMS was established on 24 November 1994 under Section 6 (1) of the University and College University Act 1971. UMS is the ninth public university in Malaysia". www.ums.edu.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.
  2. "Universiti Malaysia Sabah (UMS) was established on 24 November 1994. His Royal Highness the Yang DiPertuan Agong proclaimed the establishment of UMS under Section 6(1) of the Universities and University Colleges Act 1971". Universiti Malaysia Sabah. பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.
  3. "The Most Beautiful University In Sabah - EcoCampus". Tripadvisor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.
  4. "UMS Labuan International Campus (UMS KAL) located approximately 18km from downtown Labuan is the first branch campus of Universiti Malaysia Sabah (UMS). On 1 January 1999, UMS KAL began operating with the recruitment of 356 students from the first batch in May 1999". LABUAN MALAYSIA. 11 January 2012. பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]