மலேசிய திரங்கானு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய திராங்கானு பல்கலைக்கழகம்
University Malaysia Terengganu
Universiti Malaysia Terengganu
பல்கலைக்கழகச் சின்னம்
முந்தைய பெயர்
•1979 (மலேசிய வேளாண், மீன்வளம், கடல்சார் அறிவியல் பல்கலைக்கழகம் (UPM)
•1999 (திராங்கானு பல்கலைக்கழக கல்லூரி (KUT)
•2001 மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் கல்லூரி மலேசியா (KUSTEM)
•2007 (மலேசிய திராங்கானு பல்கலைக்கழகம் (UMT)
குறிக்கோளுரைஉலகளாவிய நிலைத்தன்மைக்கான கண்டுபிடிப்புகளின் பெருங்கடல்
(Ocean of Discoveries For Global Sustainability)
Terokaan Seluas Lautan Demi Kelestarian Sejagat
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்20 சூன் 2001[1]
வேந்தர்திராங்கானு சுல்தானா நூர் சகிரா
(Sultanah Nur Zahirah)
துணை வேந்தர்பேராசிரியர் மசுலான் அப்டுல் காபார்
(Professor Dr. Mazlan bin Abd Ghaffar)[2]
அமைவிடம்,
வளாகம்நகர்ப்புறம்
நிறங்கள்செம்மஞ்சள், வெள்ளை, செவ்வூதா, சிவப்பு, சாம்பல்[3]
சேர்ப்புASAIHL[4]
இணையதளம்umt.edu.my
2011-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், மலேசிய திராங்கானு பல்கலைக்கழகத்தின் வேந்தர் திராங்கானு சுல்தானா நூர் சகிரா
மலேசிய திராங்கானு பல்கலைக்கழகத்தின் கடல் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் ரோந்துக் கப்பல்

மலேசிய திராங்கானு பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Malaysia Terengganu; ஆங்கிலம்: University Malaysia Terengganu; (UMT) சீனம்: 馬來西亞登嘉樓大學 என்பது மலேசியா, திராங்கானு, கோலா நெருசு மாவட்டம், கோலா திராங்கானு நகர்ப்புறத்தில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும்.

முன்னர் இந்தப் பல்கலைக்கழகம் மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் கல்லூரி மலேசியா (KUSTEM) என்று அழைக்கப்பட்டது. இது 1 பிப்ரவரி 2007 அன்று மலேசிய அரசிதழில் அதிகாரப்பூர்வமாகப் பட்டயப்படுத்தப்பட்டது.

பொது[தொகு]

மலேசிய திராங்கானு பல்கலைக்கழகம் என்பது 1979-ஆம் ஆண்டில், மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் மீன்வளம் மற்றும் கடல் அறிவியலுக்கான மையமாகத் தொடங்கியது. அப்போதைய அந்த மையம் கோலா திராங்கானுவில் உள்ள மெங்காபாங் தெலிபோட் எனும் கடற்கரை கிராமப் பகுதியில் அமைந்து இருந்தது.[5]

மீன்வளம் மற்றும் கடல்சார் அறிவியல் திட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு அவர்களின் நடைமுறை ஆராய்ச்சிகளை நடத்துவதற்கான வசதிகளை வழங்கி வந்தது.[6]

இறுதியில், செர்டாங்கில் இருந்த மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் மீன்வளம் மற்றும் கடல் அறிவியலுக்கான மையம் கோலா திராங்கானுவுக்கு மாற்றப்பட்டது. அதே கட்டத்தில் அந்த மீன்வள மையம் கிளை வளாகமாக மாற்றப்பட்டது.

1996 சூன் மாதம், மலேசிய திராங்கானு வேளாண் பல்கலைக்கழகம் (UPMT) என மறுபெயரிடப்பட்டது. மேலும் அப்போதைய அந்தப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக அறிவியல் மற்றும் தொழில்முறை இலக்கியத் துறை எனும் ஒரு புதிய பிரிவும் உருவாக்கப்பட்டது.[7]

மலேசிய அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி[தொகு]

பின்னர், 5 மே 1999-இல் திராங்கானு பல்கலைக்கழகக் கல்லூரியை (KUT), மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் இணை வளாகமாக நிறுவுவதற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.[8] பின்னர் திராங்கானு பல்கல்கலைக்கழகக் கல்லூரிக்கு 1 மே 2001-இல் தன்னாளுமைத் தகுதி வழங்கப்பட்டது.[9]

மற்றும் 20 சூன் 2001-இல் மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் கல்லூரி (KUSTEM) என மறுபெயரிடப்பட்டது.[10]

பிப்ரவரி 1, 2007-இல், மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு, முழு அளவிலான பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்டது. அந்தத் தகுதி உயர்வுடன், அந்தக் கல்லூரிக்கு மீண்டும் பெயர் மாற்றப்பட்டு; இன்றுவரை மலேசிய திராங்கானு பல்கலைக்கழகம் (UMT) என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் பழைய பல்கலைக்கழகச் சின்னமும் மாற்றப்பட்டது.[11]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. PKK. "Portal Rasmi Universiti Malaysia Terengganu - UMT". www.umt.edu.my.
  2. PKK. "Portal Rasmi Universiti Malaysia Terengganu - UMT". www.umt.edu.my.
  3. PKK. "Portal Rasmi Universiti Malaysia Terengganu - UMT". www.umt.edu.my.
  4. "The Association of Southeast Asian Institutions of Higher Learning". www.seameo.org.
  5. Pekan Kecil Mengabang Telipot Bakal Lenyap ‘Ditelan Laut’
  6. "History of Universiti Malaysia Terengganu". www.umt.edu.my.
  7. "Universiti Pertanian Malaysia Terengganu". upmt.edu.my. Archived from the original on 30 April 1998.
  8. "Kolej Universiti Terengganu". www.uct.edu.my. Archived from the original on 5 April 2001.
  9. "Logo". www.kustem.edu.my. Archived from the original on 18 April 2006.
  10. "Universiti Pertanian Malaysia Terengganu". upmt.edu.my. Archived from the original on 30 April 1998.
  11. "Logo". www.umt.edu.my.

வெளி இணைப்புகள்[தொகு]