சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம்
Universiti Pendidikan Sultan Idris Sultan Idris Education University اونيۏرسيتي ڤنديديقن سلطان إدريس | |
குறிக்கோளுரை | அறிவு என்பது தூய குணத்தின் கலங்கரை விளக்கம் |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | (Pengetahuan Suluh Budiman) (Knowledge is the Beacon of Pure Character) |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 29 நவம்பர் 1922 |
வேந்தர் | துவாங்கு சார சலீம் (Tuanku Zara Salim) |
துணை வேந்தர் | டத்தோ டாக்டர் அமீன் தாப் Prof. Dato' Dr. Md. Amin Md. Taff |
அமைவிடம் | 35900 , , , |
வளாகம் | 1. Sultan Abdul Jalil Campus 2. Sultan Azlan Shah Campus |
நிறங்கள் | நீலம், மஞ்சள், சிவப்பு |
சுருக்கப் பெயர் | UPSI |
சேர்ப்பு | ACU |
இணையதளம் | www |
சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் என்பது (ஆங்கிலம்: University Pendidikan Sultan Idris) என்பது ஒரு மலேசிய ஆசிரியர் பல்கலைக்கழகம் ஆகும்.[1] 1922-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓர் ஆரிரையர்ப் பயிற்சிக் கல்லூரியாக தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், மலேசியாவின் பழையாமைன கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.
இங்கு தமிழ்வழி ஆசிரியர் இளங்கலைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.[2]
வரலாறு
[தொகு]மலாயாவின் முதல் ஆசிரியர்ப் பயிற்சி மையம் முதலில் தைப்பிங்கில் இருந்தது. அப்போது அது மாத்தாங் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (Matang Teacher Training College) என்று அறியப்பட்டது. 1913-ஆம் ஆண்டு தைப்பிங் மலாய் நிலக்கிழார், நிகா இப்ராகீம் (Ngah Ibrahim) அவர்களின் மாளிகையில் மலாயாவின் முதல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்டது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கல்லூரி தஞ்சோங் மாலிம் நகருக்கு மாற்றப்பட்டது; மற்றும் அதே நேரத்தில் பேராக் சுல்தான் அவர்களின் பெயரும் அந்த ஆசிரியர்ப் பயிற்சி மையத்திற்கு வழங்கப்பட்டது.
மலாய் ஆசிரியர்களுக்கு பயிற்சிக் கல்லூரி
[தொகு]1922-இல் மலாயா மலாய் பள்ளிகளின் துணை இயக்குநர் ஆர்.ஓ. வின்ஸ்டெட் (R.O. Winstedt) என்பவர் மலாய் ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்ட வேண்டும் எனும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.
பேராக் மாநிலத்தின் 28-ஆவது சுல்தானான சுல்தான் இட்ரிசு முர்சிதுல் ஆசாம் சா (Sultan Idris Murshidul Azzam Shah of Perak) என்பவரின் பெயரால் பெயரிடப்பட்ட இந்தக் கல்லூரி 29 நவம்பர் 1922-ஆம் தேதி மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைமைச் செயலாளர் சர் ஜார்ஜ் மேக்சுவெல் (George Maxwell) அவர்களால் திறக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About UPSI".
- ↑ Hussainmiya, B.A. (2000). "“Manufacturing Consensus”: The Role of the State Council in Brunei Darussalam" (in en). Journal of Southeast Asian Studies 31 (2): 321–350. doi:10.1017/S0022463400017586. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-0680. https://www.cambridge.org/core/journals/journal-of-southeast-asian-studies/article/abs/manufacturing-consensus-the-role-of-the-state-council-in-brunei-darussalam/49BD9E3E073134BE6C7D58652F648F79#article.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Sultan Idris Education University தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Universiti Pendidikan Sultan Idris
- தமிழ் ஆசிரியர் கல்வி