மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்[1] (ஆங்கிலம்: Putra University Malaysia சுருக்கம்: UPM), தீபகற்ப மலேசியாவில் அமைந்துள்ள பல்லாய்வுத்துறைப் பல்கலைக்கழகம் ஆகும். கோலாலம்பூர் மாநகரத்திற்கு அருகில் உள்ளது. முன்பு இந்தப் பல்கலைக்கழகம் மலேசிய விவசாயப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டது. (ஆங்கிலம்: Agricultural University of Malaysia). விவசாயம் தொடர்பான துறைகளின் உயர்க்கல்விக் கூடமாக விளங்குகின்றது.

மலாயாவை பிரித்தானியர்கள் ஆட்சி செய்யும் போது, 1931ஆம் ஆண்டு ஜான் ஸ்காட் எனும் ஆங்கிலேயரால் இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் செர்டாங் எனும் நகரில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் தோற்றம் கண்டது. 1947ஆம் ஆண்டு ஐக்கிய மலாயாவின் ஆளுநராக இருந்த சர் எட்வர்ட் ஜெண்ட், அதற்கு மலாயா விவசாயக் கல்லூரி என்று பெயர் சூட்டினார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் விவசாயத் துறையும், செர்டாங் விவசாயக் கல்லூரியும் ஒரே கல்விக்கூடமாக இணைக்கப்பட்டதும், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் எனும் பெயரில் இப்போதைய பல்கலைக்கழகம் உருவாக்கம் பெற்றது.[2] டாக்டர் முகமட் ரஸ்டான் ஹாஜி பாபா என்பவர் முதலாவது துணைவேந்தர் ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]