மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
University of Putra Malaysia
Universiti Putra Malaysia
புத்ரா பல்கலைக்கழகத்தின் அடையாளச் சின்னம்
முந்தைய பெயர்கள்
வேளாண் கல்லூரி
(1931–1947)
மலாயா வேளாண் கல்லூரி
(1947–1971)
மலேசிய வேளாண் பல்கலைக்கழகம்
(1971–1997)
குறிக்கோளுரைஅறிவுடன் சேவை செய்வோம்
( Berilmu Berbakti)
(With Knowledge We Serve)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
(ஆய்வுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்29 அக்டோபர் 1971
வேந்தர்சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன்
துணை வேந்தர்அகமது போர்கான் முகமது சாதுல்லா
கல்வி பணியாளர்
1,759 (Dec 2022)[1]
நிருவாகப் பணியாளர்
4,809 (Dec 2022)[1]
மாணவர்கள்29,060 (Dec 2022)[1]
பட்ட மாணவர்கள்16,797 (Dec 2022)[1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்12,263 (Dec 2022)[1]
அமைவிடம்
Persiaran Universiti, Serdang, Selangor, 43400, Malaysia
,
நிறங்கள்சிவப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை
              
சேர்ப்புASAIHL, ஆஸ்திரிய-தென்-கிழக்கு ஆசிய கல்வி பல்கலைக்கழக கூட்டமைப்பு[2] ஆசியா மற்றும் பசிபிக் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு[3] ஆசியான் பல்கலைக்கழக கூட்டமைப்பு, இசுலாமிய உலக பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,[4] பல்கலைக்கழக திறமை கல்வி வளர்ச்சிகளின் கூட்டணி
இணையதளம்upm.edu.my

மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Putra Malaysia; ஆங்கிலம்: University of Putra Malaysia; (UPM) சீனம்: 马来西亚博特拉大学) என்பது மலேசியா, சிலாங்கூர், செரி கெம்பாங்கான் வனப்பகுதியில் அமைந்துள்ள வேளாண் துறை பல்கலைக்கழகம் ஆகும். கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம், மலேசிய வேளாண் பல்கலைக்கழகம் (Agricultural University of Malaysia) என்று முன்பு அழைக்கப்பட்டது. தற்போது வேளாண்மை தொடர்பான துறைகளின் உயர்க்கல்விக் கூடமாக விளங்குகின்றது.

மலாயாவை பிரித்தானியர்கள் ஆட்சி செய்யும் போது, 1931-ஆம் ஆண்டு சான் ஸ்காட் எனும் பிரித்தானியரால் இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. சிலாங்கூர் மாநிலத்தில் செர்டாங் என்று முன்னர் அழைக்கப்பட்ட இடத்தில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் தோற்றம் கண்டது. 1947-ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் ஆளுநராக இருந்த சர் எட்வர்ட் ஜெண்ட், அதற்கு மலாயா வேளாண்மை கல்லூரி என்று பெயர் சூட்டினார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் வேளாண்மை துறையும், செர்டாங் வேளாண்மை கல்லூரியும் ஒரே கல்விக் கூடமாக இணைக்கப்பட்டதும், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் எனும் பெயரில் இப்போதைய பல்கலைக்கழகம் உருவாக்கம் பெற்றது.[6] டாக்டர் முகமது ரசுடான் அஜி பாபா என்பவர் இந்தப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர் ஆவார்.

பொது[தொகு]

1990-களில் இருந்து, மனிதச் சூழலியல், மொழிகள், கட்டிடக்கலை, மருத்துவம், கணினி அறிவியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வுத் துறைகள் விரிவடைந்து உள்ளன. தற்போது வேளாண்மை, வனவியல், கால்நடை மருத்துவம், பொருளாதாரம், பொறியியல், அறிவியல் மற்றும் கல்வியியல் ஆகியவற்றை உள்ளடக்கிய 15 துறைகள், 11 கல்விக் கழகங்கள் மற்றும் 2 வேளாண் பள்ளிகள்; இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ளன.

2006-ஆம் ஆண்டு முதல் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் ஓர் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களில் இந்தப் பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.[7] 2010-ஆம் ஆண்டில், மலேசியத் தகுதிகள் முகமையால் (Malaysian Qualifications Agency),[8] இந்தப் பல்கலைக்கழகத்திற்கு சுய-அங்கீகாரத் தகுதி வழங்கப்பட்டது.

மலேசியாவில் 3-ஆவது இடம்[தொகு]

இந்த அங்கீகாரத் தகுதி, மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்டங்களை அங்கீகரிக்கும் நடைமுறையை எளிதாக்குகிறது. உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்கு இடையே போட்டியிடும் வகையில், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், அதன் சொந்த உள் தர உறுதி அமைப்பையும் (Internal Quality Assurance) மேம்படுத்தி வருகிறது.[9]

2024-ஆம் ஆண்டு உலக பல்கலைகழகங்களின் தரவரிசையில், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், உலகில் 152-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசியா பல்கலைக்கழகங்களில் 22-ஆவது இடத்தையும், மலேசியாவில் 3-ஆவது இடத்தையும் பிடித்து, சிறந்த பல்கலைக்கழகமாக உருவெடுத்துள்ளது.[10] உயர்கல்விக்கான மலேசிய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மதிப்பீட்டில் (Integrated Rating of Malaysian Institutions of Higher Education), மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், தனது ஆறு நட்சத்திர மதிப்பீட்டைத் தக்க வைத்து வருகிறது.[11]

துறைகள்[தொகு]

2024 பிப்ரவரி மாத நிலவரப்படி, மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் 15 துறைகள், 11 கல்விக் கழகங்கள் மற்றும் 2 கல்லூரிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Facts & Figures". Universiti Putra Malaysia. பார்க்கப்பட்ட நாள் 5 March 2023.
  2. "ASEAN-European Academic University Network". பார்க்கப்பட்ட நாள் 22 August 2022.
  3. "Association of Universities of Asia and the Pacific".
  4. "Federation of the Universities of the Islamic World". பார்க்கப்பட்ட நாள் 22 August 2022.
  5. "Facts & Figures". Official portal of UPM. Archived from the original on 5 October 2022. பார்க்கப்பட்ட நாள் 5 October 2022.
  6. The establishment of Universiti Pertanian Malaysia came about when the College of Agriculture in Serdang merged with the Faculty of Agriculture, University of Malaya.
  7. Sheriff, Nooraini Mohamad; Abdullah, Noordini (December 2017). "Research Universities in Malaysia: What Beholds?". Asian Journal of University Education (UiTM Press) 13 (2): 35–50. https://eric.ed.gov/?id=EJ1207763. பார்த்த நாள்: 22 August 2022. 
  8. "List of HEP (Self-Accredited)". MQA. பார்க்கப்பட்ட நாள் 22 August 2022.
  9. "Frequently Asked Questions (FAQs)". MQA. பார்க்கப்பட்ட நாள் 22 August 2022.
  10. "UPM QS World Ranking". Quacquarelli Symonds. பார்க்கப்பட்ட நாள் 9 November 2023.
  11. "KEPUTUSAN PENARAFAN IPT MALAYSIA 2018/2019". Archived from the original on 19 December 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.

வெளி இணைப்புகள்[தொகு]