மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம்
اونيۏرسيتي مليسيا كلنتن | |
குறிக்கோளுரை | தொழில் முனைவு எங்களின் முக்கியத்துவம் Entrepreneurship Is Our Thrust |
---|---|
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2007 |
வேந்தர் | சுல்தான் ஐந்தாம் முகமது (கெடா சுல்தான்) |
துணை வேந்தர் | பேராசிரியர் டத்தோ ரசுலி ரசாக் (Prof. Dato' Dr. Razli bin Che Razak) |
நிருவாகப் பணியாளர் | 1,200 |
மாணவர்கள் | 9,000 |
பட்ட மாணவர்கள் | 6,000 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 500 |
அமைவிடம் | , , |
சுருக்கப் பெயர் | UMK |
இணையதளம் | www |
மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம் (University of Malaysia Kelantan, மலாய்: Universiti Malaysia Kelantan) என்பது மலேசியா, கிளாந்தான், மாநிலத்தில் உள்ள ஒரு பொது பல்கலைக்கழகம்; மற்றும் மலேசியாவில் நிறுவப்பட்ட 19-ஆவது பொது உயர்கல்வி நிறுவனமும் ஆகும். 1 ஜூலை 2007-இல் அதிகாரப்பூர்வமாகத் தன் கல்விச் செயல்பாடுகளைத் தொடங்கியது.[1]
மலேசியாவின் ஒன்பதாவது திட்டத்தின் (Ninth Malaysia Plan) கூறுகளில் ஒன்றாக மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
பொது
[தொகு]மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமது படாவி மார்ச் 31, 2006 அன்று, மலேசிய மக்களவையில் 9-ஆவது மலேசியத் திட்டத்தை அறிவித்த போது, கிளாந்தானில் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அரசாங்கத்தின் ஒப்புதலைத் தெரிவித்தார். சூன் 14, 2006 அன்று, பல்கலைக்கழகம் அமைப்பதற்கு மலேசிய அமைச்சரவை ஒருமித்த ஒப்புதலை வழங்கியது.
வரலாறு
[தொகு]மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகம், 1 சூலை 2007 அன்று, கோத்தா பாரு, பெங்காலான் செப்பா புறநகர்ப் பகுதியில், ஒரு தற்காலிக வளாகத்தில் 295 மாணவர்களுடன் அதன் முதல் செயல்பாட்டைத் தொடங்கியது.[2]
தற்ப்போது இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மேலும் இரண்டு துணை வளாகங்கள் உள்ளன. ஒரு வளாகம் பாச்சோக் நகரில் உள்ளது. மற்றொரு வளாகம் ஜெலியில் உள்ளது.[3]
வளாகங்கள்
[தொகு]- முதனமை வளாகம், பாச்சோக்
- கோதா வளாகம், பெங்காலான் செப்பா
- ஜெலி வளாகம், ஜெலி
துறைகள்
[தொகு]- ஜெலி வளாகம்
- வேளாண் சார்ந்த துறைகள் (Faculty of Agriculture-Based Industry)
- புவி அறிவியல் துறை (Faculty of Earth Sciences)
- உயிர்-பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Faculty of Bio-Engineering and Technology)
* பெங்காலான் செப்பா வளாகம்
- தொழில்முனைவு மற்றும் வணிகத் துறை (Faculty of Entrepreneurship and Business)
- கால்நடை மருத்துவத் துறை (Faculty of Veterinary Medicine)
- சுற்றுலா மற்றும் பொதுநலத் துறை (Faculty of Hospitality, Tourism and Wellness)
- பாச்சோக் வளாகம்
- படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத் துறை (Faculty of Creative Technology and Heritage)
- மொழி ஆய்வுகள் மற்றும் மனித மேம்பாட்டுத் துறை (Faculty of Language Studies and Human Development)
- கட்டிடக்கலைத் துறை (Faculty of Architecture)
காட்சியகம்
[தொகு]-
பெங்காலான் செப்பா வளாகம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Universiti Malaysia Kelantan: Sekapur Sirih (in Malay)
- ↑ Universiti Malaysia Kelantan: Maklumat Kampus (in Malay)
- ↑ Bernama: UMK Foundation Stone To Be Laid Soon