மலேசிய சரவாக் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய சரவாக் பல்கலைக்கழகம்
University of Malaysia Sarawak
Universiti Malaysia Sarawak
மலேசிய சரவாக் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைசமகாலத்தில் முன்னோக்கு
(Unimas Gemilang)
(Contemporary and Forward Looking)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்24 டிசம்பர் 1992
வேந்தர்அப்துல் தாயிப் மகமூத்
(யாங் டி பெர்துவா சரவாக்)
துணை வேந்தர்அகமத் அதா ரசித்
கல்வி பணியாளர்
2,206 (2024)[1]
மாணவர்கள்17,163 (2024)[1]
அமைவிடம்
Jln Datuk Mohammad Musa, 94300 Kota Samarahan, Sarawak, Malaysia
,
இணையதளம்www.unimas.my

மலேசிய சரவாக் பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Malaysia Sarawak; ஆங்கிலம்: University of Malaysia Sarawak; (UNIMAS) சீனம்: 马来西亚砂拉越大学) என்பது மலேசியா, சரவாக், கோத்தா சமரகான் வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். 1992 டிசம்பர் 24-ஆம் தேதி, மலேசியப் பலகலைக்கழகங்களின் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில், மலேசிய சரவாக் பல்கலைக்கழகம் முதல் 200-ஆவது இடத்தில் இடம் பெற்றுள்ளது.[2] 1993-ஆம் ஆண்டில், மலேசிய சரவாக் பல்கலைக்கழகம், அதன் சமூக அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் 118 மாணவர்களுடன் தொடக்கவிழா கண்டது.

பொது[தொகு]

1994-ஆம் ஆண்டு வரையில் பல்கலைக்கழக மாணவர்கள், கூச்சிங் சிம்பாங் தீகா கிராமப் பகுதியில் இருந்த டெலிகாம் பயிற்சிக் கல்லூரியில் தற்காலிகமாகப் பயிற்சி பெற்றனர். பின்னர் கோத்தா சமரகான் நகர்ப்பகுதியில் உள்ள அதன் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டனர். கோத்தா சமரகானில் உள்ள பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் கிழக்கு வளாகம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வளாகம் மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களால் 1993 ஆகஸ்டு 31-ஆம் தேதி, மலேசிய சுதந்திர தினத்தன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

தற்போது, இந்தப் பல்கலைக்கழகத்தில் 50 துறைகள், 3 கல்விக் கழகங்கள் மற்றும் 60 கல்வி மையங்கள் உள்ளன அவற்றுள் மொழி மற்றும் தொடர்பு துறை மட்டும் அண்மையில் உருவாக்கப்பட்ட கல்வித்துறை ஆகும். மலேசியாவின் தரநிலை மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (Standard and Industrial Research Institute of Malaysia) (SIRIM) 2008-ஆம் ஆண்டுக்கான தரச் சான்றிதழை 13 மே 2010-இல் வழங்கி உள்ளது.[3]

புதிய பல்கலைக்கழக திறப்புவிழா[தொகு]

1995-ஆம் ஆன்டில், பல்கலைக்கழகத்திற்கான நிரந்தர வளாக வடிவமைப்பு போட்டி, பன்னாட்டு அளவில் நடத்தப்பட்டது. முன்மொழியப்பட்ட வடிவமைப்புகளில் பன்னாட்டுக் கட்டிடக் கலைஞரும் நகரத் திட்டமிடுபவருமான பீட்டர் வெரிட்டி என்பவரின் வடிவமைப்பு, புதிய பல்கலைக்கழகத்திற்கான வடிவமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[4][5]

புதிய மேற்கு வளாகத்தை மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமது படாவி 18 ஏப்ரல் 2006 அன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவில் 10,000 மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு மலேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.[6]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Corporate Info". UNIMAS Official Website (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 March 2024.
  2. "Universiti Malaysia Sarawak (UNIMAS)". Times Higher Education (THE) (in ஆங்கிலம்). 24 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2 March 2024.
  3. QAD. "UNIMAS MS ISO Expansion". பார்க்கப்பட்ட நாள் 31 December 2012.
  4. Peter Verity, Universiti Malaysia Sarawak, Development Plan, PDRc 1995.
  5. "World Architecture".
  6. BERNAMA. "Lessons Through Teleconferencing For Schools In Remote Areas". பார்க்கப்பட்ட நாள் 31 December 2012.

வெளி இணைப்புகள்[தொகு]