உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் தாயிப் மகமூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் தாயிப் மகமூத்
Abdul Taib Mahmud
2016-இல் அப்துல் தாயிப் மகமூத்
7-ஆவது யாங் டி பெர்துவா சரவாக்
பதவியில்
1 மார்ச் 2014 – 26 சனவரி 2024
சரவாக் பிரதமர்அபாங் ஜொகாரி ஒப்பேங்
சரவாக் பிரதமர்
See list
 • அட்னான் சலீம்
 • அபாங் ஜொகாரி ஒப்பேங்
முன்னையவர்அபாங் முகமட் சலாவுடீன்
பின்னவர்வான் சுனைடி துவாங்கு ஜாபார்
4-ஆவது சரவாக் பிரதமர்
பதவியில்
26 மார்ச் 1981 – 28 பிப்ரவரி 2014[1]
ஆளுநர்
See list
 • அப்துல் ரகுமான் யாக்குப்
 • அகமட் சைடி அட்ருஸ்
 • அபாங் முகமட் சலாவுடீன்
2-ஆவது 4-ஆவது தலைவர்
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி
பதவியில்
26 மார்ச் 1981 – 28 பிப்ரவரி 2014
பாரிசான் தலைவர்
முன்னையவர்அப்துல் ரகுமான் யாக்குப்
பின்னவர்அட்னான் சலீம்
பதவியில்
அக்டோபர் 1974 – 1976
முன்னையவர்ஜுகா அனாக் பாரியாங்
பின்னவர்அப்துல் ரகுமான் யாக்குப்
மலேசிய நாடாளுமன்றம்
கோத்தா சமரகான் மக்களவை தொகுதி
பதவியில்
1970 – 13 பிப்ரவரி 2008
பின்னவர்சுலைமான் அப்துல் ரகுமான் தைப்
சரவாக் மாநில சட்டமன்றம்
பாலிங்கியான் சட்டமன்ற தொகுதி
பதவியில்
2001 – 28 பிப்ரவரி 2014
முன்னையவர்அப்துல் அசீஸ் அப்துல் மஜீத்
பின்னவர்யூசிப்னோஷ் பாலோ
பெரும்பான்மை5,154 (2011)
சரவாக் மாநில சட்டமன்றம்
அசாஜெயா சட்டமன்ற தொகுதி
பதவியில்
1987–2001
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்அப்துல் கரீம் ரகுமான் அம்சா
சரவாக் மாநில சட்டமன்றம்
செபான்டி சட்டமன்ற தொகுதி
பதவியில்
1981–1987
பின்னவர்---
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அப்துல் தாயிப் பின் மகமூத்

(1936-05-21)21 மே 1936
மிரி, சரவாக் இராச்சியம்
(தற்போது: சரவாக், மலேசியா)
இறப்பு21 பெப்ரவரி 2024(2024-02-21) (அகவை 87)
கோலாலம்பூர், மலேசியா
அரசியல் கட்சிசரவாக் இன மக்கள் முன்னணி (1963–1968)
சரவாக் பூமிபுத்ரா கட்சி (1968–1973)
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (1973–2014)
துணைவர்கள்
 • லெஜ்லா சாலெக்
  (தி. 1959; இற. 2009)
 • ரகாத் குர்தி தைப் (தி. 2010⁠–⁠2024)
பிள்ளைகள்4
வாழிடம்(s)Demak Jaya, Jalan Bako, கூச்சிங், சரவாக்
முன்னாள் கல்லூரிஅடிலெயிட் பல்கலைக்கழகம் (சட்டம்)
வேலை
 • அரசியல்வாதி
 • வழக்குரைஞர்
 • இணை நீதிபதி
கையெழுத்து

துன் அப்துல் தாயிப் மகமூத் (ஆங்கிலம்; மலாய்: Abdul Taib Mahmud; சீனம்: 泰益瑪目; சாவி: عبدالطيب محمود‎ ; (பிறப்பு: 21 மே 1936; இறப்பு: 21 பிப்ரவரி 2024) என்பவர் மார்ச் 2014 முதல் சனவரி 2024 வரை சரவாக் மாநிலத்தின் ஏழாவது ஆளுநர்; மார்ச் 1981 முதல் பிப்ரவரி 2014 வரை சரவாக் மாநிலத்தின் நான்காவது முதல்வர்; பதவிகளை வகித்த மலேசிய அரசியல்வாதி ஆவார்.[2] இவர் 'நவீன சரவாக்கின் தந்தை' என்று குறிப்பிடப்படுகிறார்.[3]

அப்துல் தாயிப் மகமூத் அவர்களின் அரசியல் வாழ்க்கை 33 ஆண்டுகள் நீடித்தது. மலேசிய மாநிலங்களின் ஒரே மாநிலத்தில் மட்டும் மிக நீண்ட காலம் அரசாங்கத் தலைவராகப் பதவி வகித்தவர் இவரே ஆகும். 2014-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தின் ஏழாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2024 வரையில் அவர் அந்த ஆளுநர் பதவியில் இருந்தார். 2024 பிப்ரவரி 21-ஆம் தேதி, தம்முடைய 87 வயதில் அப்துல் தாயிப் மகமூத் காலமானார்.

பொது[தொகு]

அப்துல் தாயிப் மகமூத், மலேசியா, சரவாக், மிரி கம்போங் சுங்கே மெர்பாவ் எனும் கிராமத்தில் 1936 மே 21-ஆம் தேதி, குடும்பத்தின் ஒன்பது உடன்பிறப்புகளில் மூத்த குழந்தையாகப் பிறந்தார். இவர் மெலனாவு வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். தந்தையாரின் பெயர் மகமூத் பின் அஜி அபாங் யாகயா. தாயாரின் பெயர் அஜ்ஜா அமிதா பிந்தி யாகூப்.[4]

தாயிப் மகமூத்தின் தந்தையார் புரூணை அரச குடும்பத்தின் வழித்தோன்றல் ஆகும். இருப்பினும் அவர், ஓர் ஏழ்மையான வாழ்க்கையை கொண்டிருந்தார். ஏனெனில் அவரின் தந்தையார் ஷெல் ஆயில் நிறுவனத்தில் ஒரு தச்சராக பணிபுரிந்தார்.[5] தாயிப் மகமூத்தின் மாமா அப்துல் ரகுமான் யாகூப் சிறுவனாக இருந்த காலத்தில் இருந்தே தாயிப் மகமூத் வளர்த்தார்.[6] அப்துல் ரகுமான் யாகூப், சரவாக்கின் மூன்றாவது முதலமைச்சர்; மற்றும் சரவாக்கின் நான்காவது ஆளுநர் ஆவார்.[7]

இரண்டாம் உலகப் போர்[தொகு]

1941-இல் ஜப்பானிய இராணுவம் மிரியில் தரையிறங்கியபோது தாயிப் மகமூத்திற்கு ஐந்து வயது. தாயிப் மகமூத்தின் தந்தை, ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து தன் குடும்பத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தன் குடும்பத்தை முக்காவில் உள்ள அவரின் மூதாதையர் கிராமத்திற்கு மாற்ற முடிவு செய்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, குடும்பம் மிரிக்குத் திரும்பியது.[7] தாயிப் மகமூத் தன் ஆரம்பப் பள்ளிக் கல்வியை மிரி ஆண்டி மலாய் பள்ளியிலும்; பின்னர் மிரியில் உள்ள செயின்ட் ஜோசப் தொடக்கப் பள்ளியிலும்; பின்னர் கூச்சிங்கில் உள்ள ஜோசப் மேல்நிலைப் பள்ளியிலும் மேற்கொண்டார்.

கொழும்புத் திட்ட உதவித்தொகை[தொகு]

மேல்நிலைப் பள்ளிக்குப் பிறகு, தாயிப் மகமூத் ஒரு மருத்துவராகத் திட்டமிட்டார். ஆனால், அவரின் மாமா அப்துல் ரகுமானால் சட்டப்படிப்பை மேற்கொள்ள வற்புறுத்தப்பட்டார். 1958-இல், எச்.எஸ்.சி. உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழ் தேர்வில் சிறப்பான முடிவு கிடைத்தது. அதனால் அவருக்கு கொழும்புத் திட்ட உதவித்தொகை கிடைத்தது.[8] அதன் பின்னர், தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடர்ந்தார்.[9]

1960-இல் அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார். பட்டப் படிப்புக்குப் பிறகு, அவர் தெற்கு ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி சர் எர்பர்ட் மேயோவிற்குத் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[7] அவரின் தந்தையின் மறைவுக்குப் பிறகு, தாயிப் மகமூத் தன் உடன்பிறந்தவர்களைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அத்துடன் தன் உடன்பிறப்புகளின் படிப்பிலும், குடிம்பத்தைக் கவனிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தினார். பின்னர், தாயிப் மகமூத் 1964-இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார்.[10]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

18 அக்டோபர் 2012-இல் கூச்சிங் நகரில் நடந்த போர்னியோ எரிசக்தி மாநாட்டில் தாயிப் மகமூத்

அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தாயிப் மகமூத், தன்னுடன் படித்த போலந்து நாட்டுப் பெண்ணான லைலா தைப் (நீ லெஜ்லா சாலெக்) என்பவரைச் சந்தித்தார். பின்னர் அவர்களுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகளைப் பெற்றனர்.[11]

பட்டப்படிப்பு முடிந்ததும், அவர்கள் இருவரும் சரவாக்கிற்குத் திரும்பினர். தாயிப் மகமூத், சரவாக் மாநிலச் சட்ட அலுவலகத்தில் வழக்கறிஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1963-இல் அவர் சரவாக் மாநிலத்தின் தகவல் தொடர்பு மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சராக, முதல்வர் இஸ்டீபன் காலோங் நிங்கான் மூலம் நியமிக்கப்பட்டார்.[12]

அமைச்சர் பதவிகள்[தொகு]

தாயிப் மகமூத்தின் அரசியல் பணிகள் 1964-இல் தீவிரம் அடைந்தன. அவர் ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (பெர்ஜாசா) கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்னர் அவர் 1967-இல் சரவாக் மாநில வளர்ச்சி மற்றும் வனத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அதன் பின்னர் மலேசிய மத்திய அரசின் கூட்டாட்சி அரசியலுக்குச் சென்றார். 1970-இல் கோத்தா சமரகான் மக்களவை தொகுதியின் மலேசிய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப் பெற்றார்.

தாயிப் மகமூத்தின் நாடாளுமன்ற வாழ்க்கை 1968 முதல் 1981 வரை நீடித்தது. மலேசியப் பிரதமர்கள் துங்கு அப்துல் ரகுமான், அப்துல் ரசாக் உசேன், உசேன் ஓன் மற்றும் மகாதீர் பின் முகமது ஆகியவர்களின் கீழ் மலேசிய மத்திய அரசில் பல அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

சரவாக் மாநில நிர்வாகம்[தொகு]

சரவாக் நதிக்கரையில் தாயிப் மகமூத்தின் தனிப்பட்ட மாளிகை
2011-ஆம் ஆண்டில் தாயிப் மகமூத் தன் சிரியா நாட்டு மனைவியுடன்

1981-இல், தாயிப் மகமூத், சரவாக் மாநிலத்தின் முதல்வரானார். அவரின் மாமா அப்துல் ரகுமான் யாக்குப் தாயிப் மகமூத்திற்கு முன்னர், சரவாக் மாநிலத்தின் முதல்வர் பதவியை வகித்தார். அப்துல் ரகுமான் யாக்குப்பிற்கு பதிலாக தாயிப் மகமூத் பதவிக்கு வந்தார். தாயிப் மகமூத்தின் தலைமைத்துவத்தில், பற்பல ஊழல் குற்றச்சாட்டுகள் தோன்றின. சரவாக்கின் அபரிமிதமான இயற்கை வளங்களால் தனிப்பட்ட ஆதாயம் பற்றிய குற்றச்சாட்டுகளும் அவரின் நற்பெயரைச் சிதைத்தன.[13][14][15]

இருப்பினும், சரவாக் மாநிலத்தின் வறுமை நிலையை 70 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாகக் குறைத்த பெருமையை தாயிப் மகமூத்தின் நிர்வாகம் பெற்றது. தாயிப் மகமூத் பொதுவாக பாக் உபான் என்று சரவாக் ம்க்களால் அழைக்கப்பட்டார். சரவாக்கில் சீன மொழி பேசும் சமூகங்களில், அவர் பெக் மோ என்று அழைக்கப்பட்டார்.

முறைசாரா முறையீடு[தொகு]

19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சரவாக் மீது வெள்ளை ராசாக்கள் எனும் புரூக் குடும்பம் நடத்திய ஆட்சியில் நடந்த தன்னாதிக்கம் போன்று மற்றொரு முறைசாரா முறையீடும் தாயிப் மகமூத் மீது சுமத்தப்பட்டது.[16][17]

மலேசிய நாடாளுமன்றத்தில் ஏறக்குறைய நான்கு பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2008-இல், தாயிப் மகமூத் தன் நாடாளுமன்ற பதவியைத் துறந்தார்; மலேசியாவில் அதிக காலம் பணியாற்றிய இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பெயரையும் பெற்றார்.[18]

இறப்பு[தொகு]

2017-ஆம் ஆண்டு சரவாக் ஆளுநரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற அணிவகுப்பின் போது, சரவாக் முதல்வர் அபாங் ஜொகாரி, சரவாக் ஆளுநர் தாயிப் மகமூத்

இருதயப் புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய அவரின் மனைவி லெஜ்லா சாலெக்; 2009-ஆம் ஆண்டில் இறந்தார். அதன் பின்னர் சிரியாவில் பிறந்த ராகத் வலீத் அல்குர்தி என்ற பெண்ணை தாயிப் மகமூத் மணந்தார். தொடர்ந்து, 2014-இல், தாயிப் மகமூத் சரவாக் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக அட்னான் சலீம் சரவாக் முதல்வர் பதவிக்கு வந்தார்.

தாயிப் மகமூத் பல ஆண்டுகளாக குடல் புற்று நோயினால் அவதிப்பட்டு வந்தார். 2023-ஆம் ஆண்டில், துருக்கி இசுதான்புல் மாநகரில் சிகிச்சை பெற்றார்.[19] பின்னர் 2024 சனவரி மாதத்தில், கூச்சிங் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 7 பிப்ரவரி 2024-இல் கோலாலம்பூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.[20][21]

இருப்பினும் சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை. 21 பிப்ரவரி 2024 அதிகாலை 4:40 மணிக்கு அவர் கோலாலம்பூரில் காலமானார். அவருக்கு வயது 87. சரவாக் அரசாங்கம் இரண்டு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரித்தது; மற்றும் சரவாக் மாநிலக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.[22][23]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Tawie, Sulok (21 March 2016). "After 43 years, Sarawak deputy CM Alfred Jabu to quit politics". Malay Mail இம் மூலத்தில் இருந்து 6 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160406091142/http://www.themalaymailonline.com/malaysia/article/after-43-years-sarawak-deputy-cm-alfred-jabu-to-quit-politics. 
 2. "Taib to vacate Balingian seat on February 28". The Malay Mail. 26 February 2014 இம் மூலத்தில் இருந்து 23 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240223163411/https://www.malaymail.com/news/malaysia/2014/02/26/taib-to-vacate-balingian-seat-on-feb-28/625503. 
 3. "Tun Abdul Taib Mahmud — the Father of Modern Sarawak". Bernama (The Edge (Malaysia)). 21 February 2024 இம் மூலத்தில் இருந்து 23 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240223163747/https://theedgemalaysia.com/node/701718. 
 4. Goh, Pei Pei (21 February 2024). "Taib passes away at age 87". New Sarawak Tribune. https://www.newsarawaktribune.com.my/taib-passes-away-at-age-87/. 
 5. Rentap, L. "How About Auditing Bigger Fish Instead?". Aliran Monthly. Archived from the original on 18 January 2015. பார்க்கப்பட்ட நாள் 29 November 2015. Abdul Taib Mahmud insists his family made their money via hard work in business. But many observers remain sceptical and wonder how his siblings and children came into all that wealth, both locally and overseas.
 6. Michael, L. Ross (8 January 2001). Timber Booms and Institutional Breakdown in Southeast Asia. Cambridge University Press. pp. 149–151, 153, 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139432115. பார்க்கப்பட்ட நாள் 29 November 2015.
 7. 7.0 7.1 7.2 S. Hazis, Faisal (2012). Domination and Contestation: Muslim Bumiputera Politics in Sarawak. Institute of Southeast Asian Studies. pp. 114–120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814311588. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015). {{cite book}}: Check date values in: |access-date= (help)
 8. "New court honours chief minister". Archived from the original on 27 February 2011. பார்க்கப்பட்ட நாள் 10 December 2011.
 9. "Abdul Taib Mahmud: Remembering Sarawak's greatest statesman". 21 February 2024. https://www.theborneopost.com/2024/02/21/abdul-taib-mahmud-remembering-sarawaks-greatest-statesman. 
 10. Pehin Sri Haji Abdul Taib Mahmud – Profile of the Chief Minister பரணிடப்பட்டது 4 சனவரி 2012 at the வந்தவழி இயந்திரம் Chief minister official website. Retrieved 11 December 2011
 11. "A dedication to the memory of Datuk Patinggi Dr Hajah Laila Taib". The Borneo Post. 8 May 2022. https://www.theborneopost.com/2022/05/08/love-compassion-that-never-wane. 
 12. "Previous Chief Ministers of Sarawak". 12 February 2014. https://www.theborneopost.com/2014/02/12/previous-chief-ministers-of-sarawak. 
 13. Ready to ride out the storm The Star (Malaysia) Accessed on 10 December 2011
 14. "Activists challenge 'corrupt' government in the battle for Sarawak's rainforests; Land seizures, rampant logging and oil palm expansion have decimated Sarawak's forests. But now an invigorated reform movement is fighting back - accusing the government and its chief minister Abdul Taib Mahmud of duplicity". theecologist.org (in ஆங்கிலம்). 10 August 2011. பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.
 15. Report, Sarawak. "Sarawak Report can reveal that the Chief Minister, Abdul Taib Mahmud, has a major personal shareholding in Sarawak's highly controversial Royal Mulu Resort, a project that has received huge injections of cash from the State". Sarawak Report. பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.
 16. "More on Sarawak's White Rajah (Taib Mahmud): And now comes another White Rajah who has been around for nearly 30 years. In that period, he grew powerful and became well-heeled. He ruled the state like as if it is his fiefdom. No one dared stepped on his toes, not even the federal masters, past or present". Din Merican: the Malaysian DJ Blogger (in ஆங்கிலம்). 18 August 2010. பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.
 17. Huat, W.C. (3 April 2009). "The Last Rajah's Battlefield". The Nut Graph இம் மூலத்தில் இருந்து 28 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230528093019/https://www.thenutgraph.com/the-last-rajahs-battlefield/. 
 18. New ministry, seven new faces in Sarawak cabinet reshuffle பரணிடப்பட்டது 19 ஏப்பிரல் 2023 at the வந்தவழி இயந்திரம், Borneo Post. Accessed on 10 December 2011
 19. Lim How Pin (16 September 2023). "Taib back in Sarawak after recuperating in Türkiye". The Borneo Post இம் மூலத்தில் இருந்து 24 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230924095412/https://www.theborneopost.com/2023/09/16/taib-back-in-sarawak-after-recuperating-in-turkey/. பார்த்த நாள்: 21 February 2024. 
 20. Sudirman Mohd Tahir (18 February 2024). "Raghad filed a police report denying Taib's claim that he was taken away". Harian Metro இம் மூலத்தில் இருந்து 21 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240221003706/https://www.hmetro.com.my/mutakhir/2024/02/1061868/raghad-buat-laporan-polis-tolak-dakwaan-taib-dilarikan. பார்த்த நாள்: 21 February 2024. 
 21. "Taib being treated at private hospital in KL, IGP confirms". Bernama (The Star (Malaysia)). 10 February 2024 இம் மூலத்தில் இருந்து 21 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240221005457/https://www.thestar.com.my/news/nation/2024/02/10/taib-being-treated-at-private-hospital-in-kl-igp-confirms. பார்த்த நாள்: 21 February 2024. 
 22. "Former Sarawak governor Taib Mahmud dies aged 87". The Borneo Post (Malay Mail). 21 February 2024 இம் மூலத்தில் இருந்து 20 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240220232651/https://www.malaymail.com/news/malaysia/2024/02/21/former-sarawak-governor-taib-mahmud-dies-aged-87/119120. பார்த்த நாள்: 21 February 2024. 
 23. LING, SHARON (21 February 2024). "Sarawak declares two days of mourning for Taib Mahmud". The Star (Malaysia) (in ஆங்கிலம்). Archived from the original on 21 February 2024. பார்க்கப்பட்ட நாள் 21 February 2024.
 24. 24.0 24.1 24.2 "Awards". tyt.sarawak.gov.my. Archived from the original on 8 March 2023. பார்க்கப்பட்ட நாள் 8 March 2023.
 25. "Taib heads Sarawak Governor's honours list". The Star. 13 September 2003 இம் மூலத்தில் இருந்து 8 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230308043635/https://www.thestar.com.my/news/nation/2003/09/13/taib-heads-sarawak-governors-honours-list. 
 26. "Penang Yang di-Pertua Negri's 67th Birthday Honours list". The Star. 10 July 2005 இம் மூலத்தில் இருந்து 8 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230308045137/https://www.thestar.com.my/news/nation/2005/07/10/penang-yang-dipertua-negris-67th-birthday-honours-list. 
 27. "Johor Sultan's Birthday Honours List 2007". The Star. 17 April 2007 இம் மூலத்தில் இருந்து 28 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230928231457/https://www.thestar.com.my/news/nation/2007/04/17/johor-sultans-birthday-honours-list-2007. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_தாயிப்_மகமூத்&oldid=3901816" இலிருந்து மீள்விக்கப்பட்டது