காபோல்டு ஆணையம்
காபோல்டு ஆணையம் வடக்கு போர்னியோ சரவாக், 1962 | |
காபோல்டு ஆணையத்தின் உறுப்பினர்கள்
| |
உருவாக்கப்பட்டது | 17 சனவரி 1962 |
நிறைவேற்றம் | 21 சூன் 1962 |
இடம் | தேசிய ஆவணக் காப்பகம், கியூ, ரிச்மண்ட், சர்ரே TW9 4DU, ஐக்கிய இராச்சியம் |
வரைவாளர் | விசாரணை ஆணையம், வடக்கு போர்னியோ மற்றும் சரவாக், 1961-1962 |
கைச்சாத்திட்டோர் | கேமரன் கோபோல்டு ஓங் பாவ் நீ கசாலி சாபி அந்தோனி அபெல் டேவிட் வாதர்சுடன் |
நோக்கம் | மலேசிய ஒப்பந்தம், 1961–1963 |
காபோல்டு ஆணையம் (ஆங்கிலம்: Cobbold Commission; மலாய்: Suruhanjaya Cobbold இந்தோனேசியம்: Komisi Cobbold) என்பது வடக்கு போர்னியோ (சபா) மற்றும் சரவாக் மாநிலங்களில் வாழும் மக்கள் மலேசியா கூட்டமைப்பு (Federation of Malaysia) உருவாக்கத்தை ஆதரிக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ஓர் ஆணையம் (Commission of Enquiry) ஆகும்.[1]
மலேசியா கூட்டமைப்பு என்பது அப்போதைய நிலையில் மலாயா, புரூணை, சிங்கப்பூர், வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கியது.
1963-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா உருவாவதற்கு முன்னர் மலேசிய அரசியலமைப்பு (Constitution of Malaysia) வரைவு தயாரிப்பிற்கும் இந்த ஆணையம் பொறுப்பு வகிக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது. இந்த ஆணையத்திற்கு இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் காபோல்டு பிரபு தலைமை தாங்கினார்.[2]
உறுப்பினர்கள்
[தொகு]ஆணையத்தின் உறுப்பினர்கள்:
- காபோல்டு பிரபு (Cameron Cobbold), இங்கிலாந்து வங்கி, முன்னாள் ஆளுநர், ஆணையத்தின் தலைவர்
- ஓங் பாவ் நீ (Wong Pow Nee), பினாங்கு முதலமைச்சர்
- கசாலி சாபி (Ghazali Shafie), மலேசிய வெளியுறவுத் துறை நிரந்தர செயலாளர்
- அந்தோனி அபெல் (Anthony Abell), சரவாக் முன்னாள் ஆளுநர்
- டேவிட் வாதர்சுடன் (David Watherston), மலாயாவின் முன்னாள் தலைமைச் செயலாளர்
அறிக்கை
[தொகு]காபோல்டு ஆணையம் அதன் கண்டறிதல்கள், அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை 1962 ஆகத்து 1-ஆம் தேதி வெளியிட்டது. மலேசியாவின் உருவாக்கம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆணையம் முடிவு செய்தது.
எவ்வாறு ஆயினும், அனைத்துக் கட்சிகளும் சம பங்காளிகளாகக் கூட்டமைப்பிற்குள் இணைய வேண்டும் என்றும் காபோல்டு பிரபு வலியுறுத்தினார். காபோல்டு பிரபு 21 ஜூன் 1962-இல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் அரோல்டு மேக்மில்லனுக்கு (British Prime Minister Harold Macmillan) தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி இருந்தார்:
"சிங்கப்பூரும் சேரும் என்ற அனுமானத்தில் நான் மலேசியா உருவாக்கத்தை ஆதரித்தேன் ... சிங்கப்பூர் வெளியேறினால் ... மலாயா மற்றும் போர்னியோ பிராந்தியங்களுக்கு இடையிலான ஒரு கூட்டமைப்பில் ... சிங்கப்பூர் இல்லாவிட்டால் ... ஈர்ப்பு இருக்காது."
காபோல்டு ஆணைய அறிக்கை சுருக்கம்
[தொகு]ஒவ்வொரு பிரதேசத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அதிக அக்கறை கொள்ளாமல், முன்கூட்டியே உணர்ந்து கொள்வதைத் தவிர்த்து; மலேசியா உருவாக்கப் படுவதை வலுவாக ஆதரிக்கின்றனர்.
மூன்றில் இரண்டாவது பகுதியினர், மலேசியா அமைப்புத் திட்டத்திற்குச் சாதகமாக உள்ளனர். இருப்பினும் பல்வேறு அளவிற்கு வலியுறுத்தல்கள்; எதிர்பார்ப்புகள்; பாதுகாப்புகளைக் கோருகின்றனர்.
மீதமுள்ள மூன்றாவது பகுதியினர், மலேசியா உருவாக்கப்படுவதற்கு முன்பு சுதந்திரத்தை வலியுறுத்துகிறார்கள். பிரித்தானிய ஆட்சி இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றும் வலுவாக விரும்புகின்றார்கள். அவர்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகள் கணிசமாக நிறைவேற்றப்பட வேண்டும்.
— காபோல்டு பிரபு, காபோல்டு ஆணையம்
உள்ளடக்க அட்டவணை
[தொகு]- ஆணையத்தின் அமைப்பு
- மேற்கோள் குறிப்புகள்
- அறிமுகம்
- 1. சரவாக்கில் தகவல் அறிதல்
- 2. வடக்கு போர்னியோவில் தகவல் அறிதல்
- 3. சான்றுகளின் மதிப்பீடு
- 4. பரிந்துரைகள்
- A— சில பொதுவான விசயங்களில் பரிந்துரைகள்
- B— சர் அந்தோனி அபெல் மற்றும் சர் டேவிட் வாதர்சுடன் ஆகியோரின் பரிந்துரைகள்
- C— டத்தோ வோங் பாவ் நீ மற்றும் துவான் முகமது கசாலி பின் சாபியின் பரிந்துரைகள்
- D— பி மற்றும் சி பிரிவில் உள்ள பரிந்துரைகளின் சுருக்கம்; மற்றும் தலைவரின் கருத்துகள்
- 5. மற்ற விசயங்கள்
- 6. நன்றி
- பின் இணைப்புகள்
- A. பயணத்திட்டம்
- B. மக்கள் தொகை கணக்கெடுப்பு சுருக்கம்
- C. ஐக்கிய இராச்சிய அரசர் ஆட்சியின் ஒன்பது அடிப்படை கோட்பாடுகள்
- D. "பூர்வீகம்" என்ற வார்த்தையின் சட்டப்பூர்வமான பொருள்
- E. வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் அரசாங்கங்களின் மலேசியா பற்றிய ஆவணங்கள்
- F. மலேசியா ஒற்றுமை ஆலோசனைக் குழு சமர்ப்பித்த "மலேசியா பற்றிய குறிப்பாணை"
- போர்னியோ பிரதேசங்களின் வரைபடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Call to raise it in p'ment". Daily Express. 28 September 2013. பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
- ↑ "The Greater Malaysia scheme II: the Cobbold Commission and the Borneo territories". Conflict and Confrontation in South East Asia, 1961–1965: Britain, the United States, Indonesia and the Creation of Malaysia. Cambridge University Press. 2001. pp. 79–97. பார்க்கப்பட்ட நாள் 15 February 2023.
மேலும் காண்க
[தொகு]- மலேசிய சட்டம் 1963
- சிங்கப்பூர் காலனி
- மலாயா கூட்டமைப்பு
- இந்தோனேசியா - மலேசியா மோதல்
- 18-அம்ச உடன்படிக்கை