லோபெஸ் டி செக்குயிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோபெஸ் டி செக்குயிரா
Diogo Lopes de Sequeira
Diogo Lopes de Sequeira.jpg
லோபெஸ் டி செக்குயிரா; 1666-ஆம் ஆண்டு படம்
கடல்படை தளபதி
பதவியில்
1503? – 1506?
அரசர் மானுவல் I போர்ச்சுகல்
Manuel I Portugal
போர்த்துகேய இந்தியா ஆளுநர்
பதவியில்
1518–1522
தனிநபர் தகவல்
பிறப்பு 1465
அலண்டிரோல், போர்த்துகல்
இறப்பு 1530 (வயது 65)
அலண்டிரோல், போர்த்துகல்
தேசியம் போர்த்துக்கேயர்

லோபெஸ் டி செக்குயிரா (1465–1530) (மலாய் மொழி: Retrato de Diogo Lopes de Sequeira; போர்த்துகீசியம்: Manuel de Faria e Sousa; ஆங்கிலம்: Lopes de Sequeira) என்பவர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மாலுமி. போர்த்துகல் நாட்டின் கடல் தளபதிகள் ஒருவாராகச் சேவை செய்தவர். போர்த்துகேய இந்தியாவில் ஆளுநராகவும் பணிபுரிந்தவர்.

1509-ஆம் ஆண்டில் மலாக்காவிலும் மடகஸ்கார் தீவிலும் போர்த்துகீசியர்கள் வணிகம் செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடி கீழ்க்கரை நாடுகளுக்கு வந்தார்.

மலாக்காவின் செழிப்பைப் பற்றி அறிந்த போர்த்துகல் மன்னர் மானுவல் I (Manuel I Portugal), வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள, லோபெஸ் டி செக்குயிராவை மலாக்காவிற்கு அனுப்பினார். லோபெஸ் டி செக்குயிரா தான் மலாக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு அதிகாரப்பூர்வமாக வந்த முதல் ஐரோப்பியர்.[1]

பொது[தொகு]

இவர் 11 செப்டம்பர் 1509-இல் மலாக்காவிற்கு வந்தார். அடுத்த ஆண்டு அங்கு இருந்து வெளியேறினார். அப்போது மலாக்காவின் அரசராக சுல்தான் மகமுட் ஷா இருந்தார். தொடக்கத்தில் சுல்தான் மகமுட் ஷா கனிவான வரவேற்பையும் விருந்தோம்பலையும் வழங்கினார். இருப்பினும் விரைவில் சிக்கல்கள் ஏற்பட்டன.

போர்த்துகீசியர்கள் கோவாவைக் கைப்பற்றிய பிறகு, லோபெஸ் டி செக்குயிரா மலாக்காவிற்கு வந்தார். மதம் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டன. லோபெஸ் டி செக்குயிராவைக் கொலை செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.

இதை லோபெஸ் டி செக்குயிரா ஒற்றர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டார். அதனால் இரவோடு இரவாக இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார்.

படையெடுப்பு[தொகு]

1511 ஏப்ரல் மாதம் அபோன்சோ டி அல்புகெர்க் (Afonso de Albuquerque) என்பவர் போர்த்துக்கலின் குடியேற்ற நாடான கோவாவில் இருந்து மலாக்காவிற்கு வந்தார். 18 கப்பல்களில் 1200 போர் வீரர்களையும் கொண்டு வந்தார்.[2]

மலாக்காவின் மீது படை எடுத்தார்.[3] போர்த்துக்கீசியர்கள் துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். மலாக்கா கடல்கரையில் ஒரு பெரிய போர் 40 நாட்கள் நடந்தது. 1511 ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி போர் முடிவுக்கு வந்தது. மலாக்கா வீழ்ச்சி அடைந்தது.

செக்குயிரா பின்னர் போர்த்துகேய இந்தியாவின் (1518-1522) கவர்னராக நியமிக்கப்பட்டார். 1520-இல் செங்கடல் பகுதியில் ஓர் இராணுவத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ricklefs, M.C. (1991). A History of Modern Indonesia Since c.1300, 2nd Edition. London: MacMillan. பக். 23–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-57689-6. 
  2. Ricklefs, M.C. (1991). A History of Modern Indonesia Since c.1300, 2nd Edition. London: MacMillan. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-333-57689-6. 
  3. Power Over Peoples: Technology, Environments, and Western Imperialism, 1400 to the present, Daniel R. Headrick, page 63, 2010
  4. Haywood, John (2002). Historical Atlas of the Early Modern World 1492–1783. Barnes & Noble Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7607-3204-3. 

மேலும் படிக்க[தொகு]

  • Ronald Bishop Smith, Diogo Lopes de Sequeira, "Diogo Lopes de Sequeira: Elements on His Office of Almotacé Mor", Silvas, 1975 (Inclui o texto de cinco cartas (Fev.1524-Dez.1524) trocadas entre o rei, D.João III e Diogo Lopes de Sequeira, regulador real de pesos, medidas e preços).
  • David B. Quinn, Cecil H. Clough, Paul Edward Hedley Hair, "The European outthrust and encounter", p. 97, Liverpool University Press, 1994, ISBN 978-0-85323-229-2
  • Henry Morse Stephens, "Albuquerque", p. 97 – the conquest of Malacca
  • James Maxwell Anderson, "The history of Portugal", p. 72, conquest of the city of Malacca, Greenwood Publishing Group, 2000, ISBN 978-0-313-31106-2
  • Sanjay Subrahmanyam, "The Career and Legend of Vasco Da Gama", p. 300, Cambridge University Press, 1997

மேலும் காண்க[தொகு]

முன்னர்
லொப்போ சோரசு டி அல்பர்கார்சியா
Lopo Soares de Albergaria
போர்த்துகேய இந்தியாவின் ஆளுநர்
1518–1522
பின்னர்
டுவார்த்தே டி மென்செசு
Duarte de Menezes
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோபெஸ்_டி_செக்குயிரா&oldid=3454132" இருந்து மீள்விக்கப்பட்டது