உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியக் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலேசிய தேசியக் கொடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலேசியக் கொடி
1963-ஆம் ஆண்டு தொடக்கம்
பிற பெயர்கள் ஜாலோர் கெமிலாங்
Jalur Gemilang
Stripes of Glory
பயன்பாட்டு முறை Civil and state கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 1:2
ஏற்கப்பட்டது 26 மே 1950 (தொடக்கத்தில் 11-புள்ளி நட்சத்திரமும், 11 பட்டைகளும்)
16 செப்டம்பர் 1963 (தற்போதைய 14-புள்ளி நட்சத்திரமும் 14 பட்டைகளும்)
வடிவம் 14 கிடைநிலைப் பட்டைகள் அடுத்தடுத்த சிவப்பு, வெள்ளை நிறங்களில்; மூலையில் உள்ள சதுரத்தில், நீலப் பின்புலத்தில் மஞ்சள் பிறையுடன் 14-புள்ளி நட்சத்திரம்.
வடிவமைப்பாளர் முகமது அம்சா

மலேசியக் கொடி, (மலாய்: Jalur Gemilang (ஜாலோர் கெமிலாங்); ஆங்கிலம்: Stripes of Glory அல்லது Flag of Malaysia (கோடுகளின் புகழ்) என்பது மலேசியாவின் தேசியக் கொடியாகும். இந்தக் கொடியில் 14 சிவப்பு மற்றும் வெள்ளைக் கோடுகள்; ஊதா வண்ணத்தில் பிறையுடன் கூடிய 14 புள்ளி விண்மீன்கள்; (பிந்தாங் பெர்செக்குத்துவான் (Bintang Persekutuan) - கூட்டரசு விண்மீன் (Federal Star) என அமையப் பெற்றுள்ளது.

விண்மீனின் 13 முனைகள் மலேசியாவின் 13 மலேசிய மாநிலங்களையும்; மற்றொன்று மலேசியக் கூட்டரசு பிரதேசங்களையும் குறிக்கின்றன.[1]. பிறை மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமயமான இசுலாத்தையும், ஊதா வண்ணம் மலேசிய மக்களின் ஒருங்கிணைப்பையும், மஞ்சள் விண்மீன் மலாயா அரசர்களின் வண்ணத்தையும் குறிக்கின்றன.[2] சிவப்பு நிறக் கோடுகள் துணிச்சலையும், வெள்ளை நிறக் கோடுகள் தூய்மையையும் குறிக்கின்றன.[3][4]

வரலாறு

[தொகு]

1949-ஆம் ஆண்டு, மலாயா கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட ஓர் ஆண்டு கழித்து, மலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம் ஒரு புதிய தேசியக் கொடியை வடிவமைப்பதற்கான போட்டிக்கு அழைப்பு விடுத்தது. இந்தப் போட்டிக்கு 373 விண்ணப்பங்கள் அனுப்ப்பட்டன. அவற்றில் மூன்று விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டன. பின்னர் அவை பொதுமக்களின் வாக்கெடுப்பிற்காக மலாய் மெயில் (The Malay Mail) நாளிதழுக்கு அனுப்பப்பட்டன.[5]

முதல் கொடியில் நீல நிறப் பின்னணியில் 11 வெள்ளை விண்மீன்கள் கொண்ட வளையம்; நடுவில் இரண்டு சிவப்பு நிற மலாய் கிரிசுக் கத்திகள் (குத்துவாள்கள்) இருந்தன. இரண்டாவது கொடி முதல் கொடியைப் போலவே இருந்தது. ஆனால் 5 மற்றும் 6 விண்மீன்களின் இரண்டு செறிவான வளையங்களைக் கொண்டிருந்தது.

மூன்றாவது கொடியின் வடிவமைப்பில் 11 நீலம் மற்றும் வெள்ளைக் கோடுகள் இருந்தன. மேல் இடது மூலையில் ஒரு சிவப்பு நிறப் புலம் இருந்தது. அதில் ஒரு வெள்ளை நிறப் பிறை மற்றும் ஐந்து புள்ளிகள் கொண்ட விண்மீன் இருந்தன. இந்தக் கடைசி கொடி வடிவமைப்புதான் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தேர்வு

[தொகு]

திசம்பர் 1949-இல், வெற்றி பெற்ற கொடியின் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்ய மலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம் முடிவு செய்தது. மலேசியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ஒன் ஜாபார் அறிவுரையின் பேரில், சிவப்பு மற்றும் நீல நிறங்கள் மாற்றப்பட்டன. பிறை மற்றும் விண்மீன்கள் வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்குமாற்றப்பட்டன. மேலும் விண்மீன்களுக்கு பதினொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.[6][7]

மலாயா கொடியின் இறுதிப் பதிப்பு 1950 மே 19-ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மலாயா கொடி, முதன் முதலில் 1950 மே 26-ஆம் தேதி, சிலாங்கூர் சுல்தானின் இல்லத்தின் முன் உயர்த்தப்பட்டது.[8] பின்னர் 1957 ஆகத்து 31-ஆம் தேதி, மலாயா விடுதலை அடைந்தது நாளில், ஐக்கிய இராச்சியத்தின் கொடிக்குப் பதிலாக மெர்டேக்கா சதுக்கத்தில் உயர்த்தப்பட்டது.

வடிவமைப்பாளர்

[தொகு]
மலாயா கொடி வடிவமைப்பாளர் முகமது அம்சா
Flag of Johor
Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag ஜொகூர் மாநிலக் கொடி

மலாயா கொடியை ஜொகூர், ஜொகூர் பாரு பொதுப்பணித் துறையில் (JKR) பணிபுரிந்த 29 வயதான கட்டிடக் கலைஞர் முகமது அம்சா, 1950-ஆம் ஆண்டில் வடிவமைத்தார். அவர் மூன்று நாட்களில் உருவாக்கிய நான்கு கொடிகளுடன் மலாயா தேசியக் கொடி வடிவமைப்புப் போட்டியில் கலந்துகொண்டார்.

மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், ஜொகூர் மாநிலத்தின் கொடியால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜொகூர் மாநிலத்தின் கொடியில் நீல நிறக் களத்தில் ஐந்து வெள்ளைக் கோடுகளைச் சேர்த்து அந்தக் கொடியைப் போட்டிக்கு அனுப்பினார்.[9] நாடளாவிய நிலையில் நடத்தப்பட்ட மலாயா கொடி வடிவமைக்கும் போட்டியில் 373 பேர் கல்ந்து கொண்டனர். வெற்றி பெற்ற முகமது அம்சாவிற்கு, 1955-ஆம் ஆண்டில், ஜொகூர் மாநிலத்தின் உயரிய விருதான சுல்தான் இபுராகிம் அல் மசூர் விருது (Sultan Ibrahim Diamond Jubilee Medal) வழங்கப்பட்டது.

வரலாற்று கொடிகள்

[தொகு]

உருவாக்கம்

[தொகு]
கொடி உருவாக்க அளவுமுறை
கொடி உருவாக்க அளவுமுறை
கொடி உருவாக்க அளவுமுறை


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Malaysia Flag". TalkMalaysia.com. Archived from the original on 2010-10-15. Retrieved 2009-09-15.
  2. Flags Of The World Malaysia: Description
  3. "Flag of Malaysia". MyGOV. Retrieved 4 September 2024.
  4. "Bendera Malaysia – Maksud Warna, Lambang, Muat Turun Gambar" (in மலாய்). eCentral. 2 August 2023. Retrieved 4 September 2024.
  5. Sonia Ramachandran. Golden Merdeka Memories: National flag chosen by people in one of country's first public polls. New Straits Times. 18 August 2006.
  6. "Federal Flag". The Straits Times. 6 March 1950. p. 5 இம் மூலத்தில் இருந்து 20 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221220192235/https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19500306-1.2.69.2. , via "The History and Design Chronology of Jalur Gemilang" (PDF). Malaysia Design Archive. 2012. p. 16. Retrieved 25 May 2018.
  7. Alan Teh Leam Seng (20 September 2021). "Birth of the flag that unites us". New Straits Times. Archived from the original on 4 September 2022. Retrieved 3 September 2022.
  8. "Federation Flag Hoisted at Istana". The Malay Mail. 27 May 1950. 
  9. Muhamad Razif Nasruddin; Zarul Nazli bin Zulkhurnain (2012). "The History and Design Chronology of Jalur Gemilang" (PDF). Malaysia Design Archive. Make Condition Design. p. 23.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியக்_கொடி&oldid=4403955" இலிருந்து மீள்விக்கப்பட்டது