மலேசிய நாட்டுப்பண்
ஆங்கில மொழி: My Country (Negaraku) | |
---|---|
![]() | |
நாட்டு | ![]() |
இயற்றியவர் | பலர் (முதல் பாடலாசிரியர்: சயிபுல் பாகிரி), 1957 |
இசை | பியர்-யோன் பெரெஞ்சே (1780-1857) |
சேர்க்கப்பட்டது | 1957 |
இசை மாதிரி | |
|
![]() |
|
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். |
மலேசிய நாட்டுப் பண், நெகாராக்கு (தமிழ்: எங்கள் நாடு) என்று தொடங்கும் பாடலாகும். 1957ல் பிரித்தானியாவிடம் இருந்து மலாயக் கூட்டரசு விடுதலை பெற்ற போது நாட்டுப்பண்ணாகத் தெரிவு செய்யப்பட்டது. இப்பாடலின் மெட்டு முதலில் மலாயக் கூட்டரசின் ஒரு பகுதியான பெராக் அரசின் நாட்டுப்பண்ணுக்குரிய மெட்டாகப் பயன்படுத்தப்பட்டது.[1] இதுவும், பாடலாசிரியரான பியர்-யோன் பெரெஞ்சே (Pierre-Jean de Béranger) எழுதிய லா ரோசலி (La Rosalie) என்னும் பிரஞ்சுப் பாடலுக்கான மெட்டைத் தழுவி உருவாக்கப்பட்டது.
பாடல் வரிகள்[தொகு]
ரூமி [2] | ஆங்கில மொழிபெயர்ப்பு | தமிழ் மொழிபெயர்ப்பு[3] | மாண்டரின் மொழிபெயர்ப்பு |
---|---|---|---|
Negaraku |
Oh my motherland, |
என்றன் நாடே |
我的國家,
我生長的地方。 各族團結 前途無限無量。 但願上蒼, 福佑萬民安康。 祝我君王, 國祚萬壽無疆。 但願上蒼, 福佑萬民安康。 祝我君王, 國祚萬壽無疆。 |
வரலாறு[தொகு]
போட்டி[தொகு]
நாடு விடுதலை பெற்ற காலத்தில், மலாயக் கூட்டரசுக்குள் அடங்கியிருந்த 11 அரசுகளும் தனித்தனியாக நாட்டுப்பண்களைக் கொண்டிருந்தன. கூட்டரசுக்கான நாட்டுப்பண் இருக்கவில்லை. அக்காலத்தில் முதலமைச்சராகவும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த துங்கு அப்துல் ரகுமான், பொருத்தமான நாட்டுப்பண் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தனது தலைமையில் குழுவொன்றை அமைத்தார். இவரது ஆலோசனையின்படி பன்னாட்டுப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. 514 பண்கள் கிடைத்தன. எனினும் எதுவும் பொருத்தமாக அமையவில்லை.
இதைத் தொடர்ந்து உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் தெரிவுசெய்யப்பட்ட சிலரிடமிருந்து இசையமைப்புக்களைக் கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. பெஞ்சமின் பிரிட்டன், இரண்டாம் எலிசபெத் அரசியின் முடிசூட்டலுக்கான அணிவகுப்பு இசையை உருவாக்கிய சர். வில்லியம் வால்ட்டன், அமெரிக்க ஒப்பேரா இசையமைப்பாளர் கியான் கார்லோ மெனோட்டி, பின்னாளில் சிங்கப்பூரின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்த சுபிர் சயித் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டவர்களுள் அடங்குவர். இவர்களது இசையமைப்புக்களையும் குழுவினர் புறந்தள்ளிவிட்டனர்.
பெராக் நாட்டுப்பண்ணின் தெரிவு[தொகு]

இறுதியாகக் குழுவினர் அக்காலத்தில் மலேசியக் கூட்டமைப்பின் உறுப்பு நாடான பெராக்கின் நாட்டுப்பண்ணின் மெட்டைப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தனர். அதன் மரபுசார்ந்த தன்மைக்காக அந்த மெட்டையே பயன்படுத்துவது என 1957 ஆகத்து 5 ஆம் தேதி முடிவானது. துங்கு அப்துல் ரகுமானும், நடுவர்களும் இணைந்து நாட்டுப்பண்ணுக்கான பாடல் வரிகளை எழுதினர்.
பெராக்கின் நாட்டுப்பண்ணாக இருந்த அல்லா லஞ்சுத்கான் உசியா சுல்தான் என்னும் பாடல், சிசெல்சின் மாஹேத் தீவில் புகழ் பெற்றிருந்தது. இவ்விடத்திலேயே பெராக்கின் சுல்தான் ஒரு காலத்தில் நாடுகடந்து வாழ்ந்தார். அங்கிருந்த காலத்தில் பியர்-யோன் பெரங்கே என்னும் பாடலாசிரியர் இசையமைத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு பிரெஞ்சு மெல்லிசைப் பாடலை ஒரு பொது இசை நிகழ்ச்சியில் சுல்தான் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், பெரங்கே இதற்கு இசையமைத்ததற்கான சான்றுகள் எதுவும் காணப்படவில்லை. இவர் ஒரு பாடலாசிரியர் என்பதால் பிற இசையமைப்பாளர்களே இவரது பாடல்களுக்கு இசையமைப்பது வழக்கம். நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்ட இவரது பாடல் தொகுப்பில் இப்பாடல் இடம்பெறவில்லை. இவர் தனது பாடல்களுக்குப் பயன்படுத்திய மெட்டுக்களின் தொகுதியிலும் இது இல்லை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Unity and progress are anthem themes. The Sunday Times. 25 August 1957
- ↑ http://www.mdlg.gov.my/en/audio/-/asset_publisher/9eWW/content/lagu-negaraku
- ↑ "நாட்டுக்கொரு பாட்டு 8: மலேசியாவில் பிரெஞ்சுக்கு மரியாதை". தி இந்து (தமிழ் ) (2016 சூன் 1). பார்த்த நாள் 17 சூன் 2016.