மலேசிய சாலை போக்குவரத்து துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய சாலை போக்குவரத்து துறை
Road Transport Department Malaysia
Jabatan Pengangkutan Jalan Malaysia

(JPJ)
மலேசிய சாலை போக்குவரத்து துறை சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்பு1 ஏப்ரல் 1946
ஆட்சி எல்லை மலேசியா
தலைமையகம்No. 26, Level 1-5, Block D4,
Jalan Tun Hussein, Persiaran Perdana, Presint 4,
62100 புத்ராஜெயா
2°54′20.4732″N 101°40′50.538″E / 2.905687000°N 101.68070500°E / 2.905687000; 101.68070500
குறிக்கோள்ஒருமைப்பாட்டை
நோக்கி இலக்கவியல்
Digitalisation Towards Integrity
பணியாட்கள்8,793 (2023)[1]
ஆண்டு நிதிMYR 697,663,100 (2023)[1]
அமைச்சர்
துணை அமைச்சர்
  • * அசுபி அபிபுல்லா
    (Hasbi Habibollah)
அமைப்பு தலைமை
  • * சனசந்திரன் முனியன்
    (Jana Santhiran Muniayan)
மூல நிறுவனம்மலேசிய போக்குவரத்து அமைச்சு
வலைத்தளம்www.jpj.gov.my
அடிக்குறிப்புகள்
சாலை போக்குவரத்து சட்டம்
(Road Transport Act)

மலேசிய சாலை போக்குவரத்து துறை (மலாய்: Jabatan Pengangkutan Jalan Malaysia (JPJ); ஆங்கிலம்: Road Transport Department Malaysia); என்பது மலேசிய போக்குவரத்து அமைச்சின் (Malaysian Ministry of Transport) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.[2]

மலேசியாவில் உள்ள அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் வாகனம் செலுத்துவதற்கான உரிமம் (Licensing of Drivers) வழங்குவது; மற்றும் அனைத்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான உரிமம் (Licensing of Motor Vehicles and Trailers in Malaysia) வழங்குவது; போன்ற பொறுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் மலேசியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்துப் பதிவெண்களை (Malaysian Number Plates) வழங்குவதும் இந்தத் துறையின் பொறுப்பாகும்.

பொது[தொகு]

சாலை போக்குவரத்து சட்டத்தின்படி (Road Transport Act) சட்டவிதிகளை அமலாக்கம் செய்வது; மற்றும் ஒழுங்குமுறை கடமைகளை (Enforcement and Regulatory Duties) நிறைவேற்றுவது; போன்ற முக்கியமான செயல்பாடுகள், மலேசிய சாலை போக்குவரத்து துறையின் கீழ் உள்ளன.

வரலாறு[தொகு]

1937-ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டம் 1937-இன் கீழ் (Traffic Enactment 1937) மலாயா கூட்டமைப்பு மாநிலங்களில் மலேசிய சாலை போக்குவரத்து துறை நிறுவப்பட்டது. அப்போது பிரித்தானிய இராணுவச் சட்டம் அமலில் இருந்தது.

அந்த நேரத்தில் பிரித்தானிய மலாயா (British Malaya) நிர்வாகம் பொது நிறுவனங்களைக் கட்டுப் படுத்தவும் உரிமம் வழங்கவும்; சாலைப் போக்குவரத்து வாரியம் (Road Transport Authority) எனும் ஓர் வாரியத்தைத் தோற்றுவித்தது.

போக்குவரத்து சட்டங்கள்[தொகு]

ஏப்ரல் 1946-இல் மலாயா ஒன்றியம் (Federation of Malaya) நிறுவப்பட்டது. அதன் பின்னர் சாலைப் போக்குவரத்து வாரியத்தின் அதிகாரம்; மலாயா முழுவதும் உள்ளடக்கிய மோட்டார் வாகனங்களின் பதிவாளர் மற்றும் சோதனையாளர் அலுவலகத்தால் (Office of the Registrar and Inspection of Motor Vehicles) கையகப் படுத்தப்பட்டது.

சாலைப் போக்குவரத்து சட்டம் 1953[தொகு]

போக்குவரத்துச் சட்டம் 1937-க்குப் பதிலாக, 1953-ஆம் ஆண்டில் சாலைப் போக்குவரத்து சட்டம் 1953 (Road Traffic Ordinance 1953) என்ற ஒரு புதிய சாலைச் சட்டம் இயற்றப்பட்டது. சட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வணிக வாகனங்களுக்கு என ஓர் அமலாக்கப் பிரிவு (Enforcement Division) உருவாக்கப்பட்டது.

சாலைப் போக்குவரத்து சட்டம் 1987[தொகு]

ஏப்ரல் 1, 1946-இல், சாலைப் போக்குவரத்துத் துறை (Jabatan Pengangkutan Jalan) நிறுவப்பட்டது. இத்துறை நிறுவப் பட்டதன் தொடர்பாக, 1958-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் (Road Traffic Ordinance of 1958); 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் (Road Transport Act of 1987); போன்ற சாலைப் போக்குவரத்துச் சட்டங்கள் இயற்றப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Ministry of Transport (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 May 2023.
  2. "Background." Road Transport Department. Retrieved on 5 April 2012. "Level 1-5, Block D4, Complexs D, Federal Government Administrative Centre"
  • Kurikulum Pendidikan Pemanduan (KPP), Panduan Pembelajaran - textbook by Malaysian Road Transport Department (JPJ)

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]