1997 ஆசிய நிதி நெருக்கடி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1997 ஆசிய நிதி நெருக்கடி என்பது கிழக்காசிய நாடுகளில் சூலை 1997 துவக்கத்திலிருந்து ஏற்பட்ட நிதி நெருக்கடிகளைக் குறிக்கிறது. இது பின்னர் பொருளாதாரத் தொற்றாகி (en:Financial contagion) உலகளாவிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டது.
இந்த நெருக்கடி முதலில் தாய்லாந்தில் இருந்து துவங்கியது. தாய்லாந்தின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு முன்பே, வெளிநாட்டுக் கடனால் திவாலாகும் சூழல் ஏற்பட்டது. இந்த நெருக்கடி பிற தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் சப்பான் நாடுகளின் நாணய மதிப்பில் இறக்கம், பங்குச் சந்தை வீழ்ச்சி, மற்றும் தனிநபர் கடன் மதிப்பு உச்சிக்கு சென்றது.