மலேசிய மரபுச்சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய
மரபுச்சின்னம்
விபரங்கள்
பாவிப்போர்மலேசியாவின் யாங் டி பெர்துவான் அகோங்
உள்வாங்கப்பட்டது1963
Crestமஞ்சள் பிறையும் மஞ்சள் நிற 14 முனை கூட்டாட்சி நட்சத்திரமும்
விருதுமுகம்நான்கு சம பிரிவுகள், அதன் மேல் ஒரு வரிசையில், ஐந்து கத்திகள். இடப் பக்கத்தில் பினாங்கு பனை மரங்களும், பினாங்கு பாலமும், வலப்பக்கம் மலாக்கா மரங்களும் காணப் படுகின்றன.
Supportersஇரண்டு சினம் கொண்ட புலிகள்
குறிக்கோளுரைBersekutu Bertambah Mutu (Malay)
"ஒற்றுமையே பலம்"

மலேசிய மரபுச் சின்னம், (மலாய்: Jata Negara Malaysia; ஆங்கிலம்: Coat of arms of Malaysia) என்பது மலேசியாவின் பாரம்பரியச் சின்னமாகும். மத்தியில் ஒரு சின்னம் பொறித்த கேடயம்; இரண்டு புலிகள்; ஒரு பிறை; பதினான்கு முனை கொண்ட நட்சத்திரம்; குறிக்கோளுரை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மரபுச் சின்னம்.

மலேசியாவின் தற்போதைய சின்னம் பிரித்தானியக் குடியேற்றவாத ஆட்சியின் கீழ் இருந்த மலாய் நாடுகளின் கூட்டமைப்பின் மரபுச் சின்னத்தின் வழி வந்தது ஆகையால், தற்போதைய சின்னம் ஐரோப்பிய கட்டிய நடைமுறைகளை ஒத்துள்ளது.

மலேசிய மரபுச் சின்னம், இரண்டு புலிகளால் பாதுகாக்கப்பட்ட கேடயத்தைக் கொண்டுள்ளது. அதன் மேலே 14 புள்ளிகள் கொண்ட "கூட்டரசு நட்சத்திரம்"; மஞ்சள் நிற பிறை கொண்ட ஒரு முகடு; உள்ளன. மேலும் கீழே ஒரு பொன்மொழி பொறிக்கப்பட்டு உள்ளது.

வரலாறு[தொகு]

ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ், கூட்டரசு மலாய் மாநிலங்கள் (Federated Malay States (FMS) உருவானதில் இருந்து, மலேசிய மரபுச் சின்னத்தின் தோற்றம் அறியப்படுகிறது.

1895-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் கொடி அறிமுகமானது. அப்போது அந்தச் சின்னம் மலேசிய மரபுச் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்தச் சின்னம் 1895 முதல் 1948 வரையில்; அதாவது மலாயா கூட்டமைப்பு உருவாக்கம் வரை பயன்பாட்டில் இருந்தது.

காட்சியகம்[தொகு]