உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய அரசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யாங் டி பெர்துவான் அகோங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாட்சிமை தங்கிய அரசர்
Yang di-Pertuan Agong
يڠدڤرتوان أݢوڠ
மாமன்னரின் கொடி
பேரரசர் சின்னம்
வகைசட்டப்படியான முடியாட்சி; தேர்வு முறை; கூட்டரசு முடியாட்சி
வாழுமிடம்இசுதானா நெகாரா மலேசியா
கோலாலம்பூர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
அரசமைப்புக் கருவிமலேசிய அரசியலமைப்பு
Constitution of Malaysia#Article 32
உருவாக்கம்31 ஆகத்து 1957; 68 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
முதலாமவர்துவாங்கு அப்துல் ரகுமான்
துணை மாட்சிமை தங்கிய அரசர்துணைப் பேரரசர்
Timbalan Yang di-Pertuan Agong
ஊதியம்ரிங்கிட் ஆண்டுக்கு 1,054,560[1]
இணையதளம்www.istananegara.gov.my

மலேசிய அரசர் அல்லது யாங் டி பெர்துவான் அகோங் (ஆங்கிலம்: The Yang di-Pertuan Agong; மலாய்: Yang di-Pertuan Agong) என்பவர், மலேசியா நாட்டின் பேரரசர் ஆவார். 1957-ஆம் ஆண்டு, பிரித்தானியாவிடம் இருந்து மலாயா கூட்டரசு தன்னுரிமை பெற்ற போது, பேரரசர் பதவி உருவாக்கப்பட்டது.

அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில், தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். உலக நாடுகளில் தேர்வு மூலமாக அரசராகிறவர்களில், யாங் டி பெர்துவான் அகோங் அவர்களும் ஒருவராவார். யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் துணைவியார், மலேசிய அரசி, இராஜா பரமேசுவரி அகோங் என அழைக்கப் படுகிறார்.[2]

மாமன்னரின் அதிகாரங்கள்

[தொகு]

மலேசியாவின், அரச அமைப்புக்கு உட்பட்ட முடியரசில், பேரரசருக்கு, அரசியலமைப்பில் மிகுந்த அதிகாரங்கள் உள்ளன. கூட்டரசின் நிருவாக அதிகாரம், பேரரசரிடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதை அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படுத்த முடியும் என்றும் மலேசிய அரசியலமைப்பு குறிப்பிடுகிறது.[2]

அமைச்சரவைக்குத் தலைமை வகிக்கும் பிரதமரை, பேரரசர்தான் நியமனம் செய்வார். நாட்டின் பொதுத் தேர்தலில், தேர்வு பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

அதே சமயத்தில், யாரைப் பிரதமராகத் தேர்வு செய்வது எனும் விருப்புரிமை அதிகாரம், பேரரசர் அவர்களிடம் மட்டுமே உள்ளது. இருப்பினும், பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்திற்கு அவரிடம் அனுமதி வழங்கப்படவில்லை.[2]

அரசியலமைப்பு விதி 55

[தொகு]

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கோரிக்கையை பேரரசர் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயத்தில் நிராகரிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. (அரசியலமைப்பு விதி 55) நாடாளுமன்றத்தினால் புதிதாக நிறைவேற்றப்படும் மசோதக்களை ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.

எனினும், அரசியலமைப்பு விதி 55-இன் படி, அந்த மசோதக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தால், 30 நாட்களுக்குப் பிறகு அவை தானாகவே சட்டங்களாக மாறிவிடும்.[3]

மலேசியாவின் 17-ஆவது பேரரசர்

[தொகு]

தற்சமயம், மலேசியாவின் பேரரசர் பதவியில் இருப்பவர் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரம் சுல்தான் இசுகந்தர். இவர் மலேசியாவின் 17-ஆவது பேரரசர் ஆகும். 2023 அக்டோபர் 26 இல் மலேசிய மாநிலங்களின் ஆட்சியாளர்களின் மாநாட்டில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.[4] இவருடைய ஆட்சிக்காலம் 31 சனவரி 2024-இல் தொடங்கியது.

மலேசிய பேரரசர்கள் பட்டியல்

[தொகு]

பின்வரும் ஆட்சியாளர்கள் யாங் டி பெர்துவான் அகோங் எனும் பேரரசராகப் பணியாற்றி உள்ளனர்:[5]

# படிமம் பெயர் நிலை ஆட்சி பிறப்பு இறப்பு ஆட்சியின் காலம்
1 துவாங்கு அப்துல் ரகுமான் நெகிரி செம்பிலான்31 ஆகஸ்டு 1957 – 1 ஏப்ரல் 1960 24 ஆகத்து 1895 1 ஏப்ரல் 1960(1960-04-01) (அகவை 64) 2 ஆண்டுகள், 214 நாட்கள்
2 சுல்தான் இசாமுதீன் ஆலாம் சா சிலாங்கூர்14 ஏப்ரல் 1960 – 1 செப்டம்பர் 196013 மே 1898 1 செப்டம்பர் 1960(1960-09-01) (அகவை 62) 0 ஆண்டுகள், 140 நாட்கள்
3 பெர்லிஸ் புத்ரா பெர்லிஸ்21 செப்டம்பர்1960 – 20 செப்டம்பர் 196525 நவம்பர் 1920 16 ஏப்ரல் 2000(2000-04-16) (அகவை 79) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
4 சுல்தான் இசுமாயில் நசிருதீன் திராங்கானு21 செப்டம்பர் 1965 – 20 செப்டம்பர் 197024 சனவரி 1907 20 செப்டம்பர் 1979(1979-09-20) (அகவை 72) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
5 சுலதான் அப்துல் ஆலிம்
(1-ஆவது முறை)
கெடா21 செப்டம்பர் 1970  – 20 செப்டம்பர் 197528 நவம்பர் 1927 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 89) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
6 சுல்தான் யாகயா பெட்ரா கிளாந்தான்21 செப்டம்பர் 1975 – 29 மார்ச் 197910 திசம்பர் 1917 29 மார்ச்சு 1979(1979-03-29) (அகவை 61) 3 ஆண்டுகள், 189 நாட்கள்
7 சுல்தான் அகமட் சா பகாங்26 ஏப்ரல் 1979 – 25 ஏப்ரல் 198424 அக்டோபர் 1930 22 மே 2019(2019-05-22) (அகவை 88) 4 ஆண்டுகள், 365 நாட்கள்
8 சுல்தான் இசுகந்தர் ஜொகூர்26 ஏப்ரல் 1984 – 25 ஏப்ரல் 19898 ஏப்ரல் 1932 22 சனவரி 2010(2010-01-22) (அகவை 77) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
9 சுல்தான் அசுலான் சா பேராக்26 ஏப்ரல் 1989 – 25 ஏப்ரல் 199419 ஏப்ரல் 1928 28 மே 2014(2014-05-28) (அகவை 86) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
10 துவாங்கு ஜபார் நெகிரி செம்பிலான்26 ஏப்ரல் 1994 – 25 ஏப்ரல் 199919 சூலை 1922 27 திசம்பர் 2008(2008-12-27) (அகவை 86) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
11 சுல்தான் சலாவுதீன் சிலாங்கூர்26 ஏப்ரல் 1999 – 21 நவம்பர் 20018 மார்ச்சு 1926 21 நவம்பர் 2001(2001-11-21) (அகவை 75) 2 ஆண்டுகள், 209 நாட்கள்
12 துவாங்கு சையத் சிராஜுதீன் பெர்லிஸ்13 டிசம்பர் 2001 – 12 டிசம்பர் 200617 மே 1943 (1943-05-17) (அகவை 83)4 ஆண்டுகள், 364 நாட்கள்
13 சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் திராங்கானு13 டிசம்பர் 2006 – 12 டிசம்பர் 201122 சனவரி 1962 (1962-01-22) (அகவை 64)4 ஆண்டுகள், 364 நாட்கள்
14 சுல்தான் அப்துல் அலீம்
(2-ஆவது முறை)
கெடா13 டிசம்பர் 2011 – 12 டிசம்பர் 201628 நவம்பர் 1927 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 89) 4 ஆண்டுகள், 365 நாட்கள்
15 சுல்தான் முகமது V கிளாந்தான்13 டிசம்பர் 2016 – 6 சனவரி 20196 அக்டோபர் 1969 (1969-10-06) (அகவை 56)2 ஆண்டுகள், 24 நாட்கள்
16 சுல்தான் அப்துல்லா பகாங்31 சனவரி 2019 – இன்று வரையில்30 சூலை 1959 (1959-07-30) (அகவை 66)7 ஆண்டுகள், 160 நாட்கள்
17 சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் ஜொகூர்31 சனவரி 2024 – Incumbent2 ஆண்டுகள், 160 நாட்கள்22 நவம்பர் 1958 (1958-11-22) (அகவை 67)

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Act 269 – Civil List Act 1982" (PDF). Attorney-General Chamber. AGC Malaysia. Retrieved 23 January 2019.
  2. 1 2 3 The Consort of the Yang di-Pertuan Agong (to be called the Raja Permaisuri Agong)
  3. "Malaysian democrats pin their hopes on the country's royals". The Economist. 26 January 2017 இம் மூலத்தில் இருந்து 4 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170204110337/http://www.economist.com/news/asia/21715699-they-make-unlikely-saviours-malaysian-democrats-pin-their-hopes-countrys-royals.
  4. "List of His Majesty the Yang Di-Pertuan Agong". www.parlimen.gov.my.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_அரசர்&oldid=4582187" இலிருந்து மீள்விக்கப்பட்டது