உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய வெளியுறவு அமைச்சு

ஆள்கூறுகள்: 03°08′00″N 101°42′08″E / 3.13333°N 101.70222°E / 3.13333; 101.70222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய வெளியுறவு அமைச்சு
Kementerian Luar Negeri
Ministry of Foreign Affairs

(KLN)
விசுமா புத்ரா

மலேசிய வெளியுறவு அமைச்சகம்
துறை மேலோட்டம்
அமைப்பு1956; 68 ஆண்டுகளுக்கு முன்னர் (1956)
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்Wisma Putra, No. 1, Jalan Wisma Putra, Precinct 2, Federal Government Administrative Centre, 62602 புத்ராஜெயா
03°08′00″N 101°42′08″E / 3.13333°N 101.70222°E / 3.13333; 101.70222
பணியாட்கள்3,183 (2023)
ஆண்டு நிதிMYR 971,134,100 (2022 - 2023)[1]
அமைச்சர்
துணை அமைச்சர்
  • முகமது ஆலமின்
    (Mohamad Alamin),
    * துணை நிதியமைச்சர்
அமைப்பு தலைமை
  • முகமது சாருல் இக்ராம் யாக்கோப்
    (Muhammad Shahrul Ikram Yaakob),
    * பொதுச் செயலர்
வலைத்தளம்www.kln.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய வெளியுறவு அமைச்சு

மலேசிய வெளியுறவு அமைச்சு (மலாய்: Kementerian Luar Negeri Malaysia; ஆங்கிலம்: Ministry of Foreign Affairs Malaysia) (MOF) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசியாவின் வெளிநாட்டுக் கொள்கை (Foreign Affairs); மலேசியர்களின் புலம்பெயர்வு (Malaysian Diaspora); மலேசியாவில் உள்ள வெளிநாட்டினர் (Foreigners in Malaysia); பண்ணுறவாண்மை (Diplomacy) ஆகிய விவகாரங்களைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறது.[2]

தற்போதைய அமைச்சகம் புத்ராஜெயாவில் உள்ளது. மலேசியாவின் வெளியுறவு அமைச்சகம், விசுமா புத்ரா (Wisma Putra) என்றும் பரவலாக அறியப்படுகிறது, விசுமா புத்ரா என்பது புத்ராஜெயாவில் உள்ள அதன் தலைமையகக் கட்டடத்தின் பெயர் ஆகும்.

வரலாறு

[தொகு]

மலேசிய வெளியுறவு அமைச்சின் செயல்பாடுகள், 1956-ஆம் ஆண்டில், மலேசியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்பே தொடங்கி விட்டன. தொடக்கத்தில் இந்த அமைச்சு வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs) என அழைக்கப்பட்டது.

பதினொரு தூதர்கள் கொண்ட முதல் தொகுதி ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்றது. மலேசிய வெளியுறவு அமைச்சு பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்தை முன்மாதிரியாகக் கொண்டது.[3]

விசுமா புத்ரா வளாகம்

[தொகு]

மலேசியா தொடக்கத்தில், லண்டன், நியூயார்க் மாநகரங்களில் தூதரகங்களைக் கொண்டிருந்தது. மற்றும் வாஷிங்டன், கான்பெரா, புது டெல்லி, ஜகார்த்தா, பாங்காக் ஆகிய மாநகரங்களில் அதற்குத் தூதரக அலுவலகங்கள் இருந்தன.

1963-ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் 14 மலேசியத் தூதரகங்கள் இருந்தன. அதே வேளையில் மலேசியாவில் இருபத்தைந்து வெளிநாடுகள் தூதரகங்களைக் கொண்டு இருந்தன. 1965-ஆம் ஆண்டில், மலேசியாவின் தூதர்வழித் தொடர்புகள் பெரிய மறுசீரமைப்பைப் பெற்றன. 1966-இல், மலேசிய வெளி உறவுகள் அமைச்சு (Ministry of External Affairs) என்பது மலேசிய வெளியுறவு அமைச்சு (Ministry of Foreign Affairs) என மாற்றப்பட்டது.

சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தில் இருந்த அசல் வளாகத்தில் இருந்து விசுமா புத்ராக்கு மாற்றப்பட்டது. விசுமா புத்ரா வளாகம் (Wisma Putra Complex); பாரம்பரியக் கட்டிடக்கலை மற்றும் நவீனக் கட்டிடக்கலை இரண்டின் கலவையை அடிப்படையாகக் கொண்டது.[3]

பொறுப்புகள்

[தொகு]
  • வெளிநாட்டுக் கொள்கை (Foreign Affairs)
  • மலேசியர் புலம்பெயர்வு (Malaysian Diaspora)
  • மலேசியாவின் வெளிநாட்டினர் (Foreigners in Malaysia)
  • பண்ணுறவாண்மை (Diplomacy)
  • வெளிநாட்டு உறவுகள் (Foreign Relations)
  • பயங்கரவாத எதிர்ப்பு (Counter Terrorism)
  • இருதரப்புவாதம் (Bilateralism)
  • பன்முகச்சார்பியம் (Multilateralism)
  • ஆசியான் (ASEAN)
  • பன்னாட்டு நெறிமுறை (International Protocol)
  • தூதரக சேவைகள் (Consular Services)
  • கடல்சார் விவகாரங்கள் (Maritime Affairs)
  • இரசாயன ஆயுதங்கள் (Chemical Weapons)

அமைப்பு

[தொகு]
  • வெளியுறவு அமைச்சர்
  • துணை வெளியுறவு அமைச்சர்
      • பொதுச் செயலாளர்
        • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • சட்டப் பிரிவு (Legal Division)
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (இருதரப்பு விவகாரங்கள்) (Bilateral Affairs)
          • ஐரோப்பா பிரிவு (Europe Division)
          • அமெரிக்கா பிரிவு (Americas Division)
          • ஆப்பிரிக்கா பிரிவு (Africa Division)
          • மேற்கு ஆசிய பிரிவு (West Asia Division)
          • கிழக்கு ஆசிய பிரிவு (East Asia Division)
          • தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவு (South and Central Asia Division)
          • கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம், ஓசியானியா பிரிவு
          • தென் கிழக்கு ஆசிய பிரிவு (South East Asia Division)
          • தொடர்பு மற்றும் பொது பண்ணுறவாண்மை பிரிவு (Communications and Public Diplomacy Division)
          • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
        • துணைப் பொதுச் செயலாளர் (பலதரப்பு விவகாரங்கள்) (Multilateral Affairs)
          • மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான பிரிவு (Human Rights and Humanitarian Division)
          • இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு பிரிவு
          • பலதரப்பு பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு (Multilateral Economics and Environment Division)
          • பலதரப்பு அரசியல் பிரிவு (Multilateral Political Division)
          • பலதரப்பு பாதுகாப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பிரிவு (Multilateral Security and International Organizations Division)
          • பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (International Cooperation and Development Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை சேவைகள்) (Management Services)
          • நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பிரிவு (Administration and Security Division)
          • மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
          • நிதிப் பிரிவு (Finance Division)
          • மேம்பாட்டுப் பிரிவு (Development Division)
          • ஆய்நர் பிரிவு (Inspectorate Division)
          • தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப பிரிவு (Information and Communication Technology Division)
          • கணக்கு பிரிவு (Account Division)
        • ஆசியான்-மலேசியா தேசிய செயலகத்தின் தலைமை இயக்குனர் (Director-General of Asean-Malaysia National Secretariat)
          • ஆசியான் அரசியல்-பாதுகாப்பு சமூகப் பிரிவு (Asean Political-Security Community Division)
          • ஆசியான் பொருளாதார சமூகப் பிரிவு (Asean Economic Community Division)
          • ஆசியான் சமூக-கலாச்சார சமூகப் பிரிவு (Asean Socio-Cultural Community Division)
          • ஆசியான் வெளிவிவகாரப் பிரிவு (Asean External Relation Division)
        • நடப்பொழுங்கு மற்றும் தூதரகத்தின் தலைவர் (Chief of Protocol and Consular)
          • நடப்பொழுங்கு பிரிவு Protocol Division)
          • தூதரக பிரிவு Consular Division)
        • கொள்கை திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு தலைமை இயக்குநர் (Director-General of Policy Planning and Coordination)
          • கொள்கை மற்றும் உத்திசார் திட்டமிடல் பிரிவு (Policy and Strategic Planning Division)
          • ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மதிப்பீட்டுப் பிரிவு (Coordination and Performance Evaluation Division)
        • கடல்சார் விவகாரங்களுக்கான தலைமை இயக்குநர் (Director-General of Maritime Affairs)
        • தூதர் வழி மற்றும் வெளிநாட்டு உறவுகள் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் (Director-General of Institute of Diplomacy and Foreign Relations)
        • தீவிரவாத எதிர்ப்புக்கான தென்கிழக்கு ஆசிய பிராந்திய மையத்தின் தலைமை இயக்குநர் (Director-General of Southeast Asia Regional Centre for Counter-Terrorism)
        • இரசாயன ஆயுத மாநாட்டிற்கான தேசிய ஆணையத்தின் தலைவர் (Chairman of National Authority for Chemical Weapons Convention)
        • தூதர்கள் (112 தூதர்கள்) (Heads of Mission) (112 Missions)

கூட்டரசு துறைகள்

[தொகு]

அமைச்சு சார்ந்த சட்டங்கள்

[தொகு]
  • தூதரக மற்றும் தூதரக அதிகாரிகள் (சத்தியங்கள் மற்றும் கட்டணம்) சட்டம் 1959 (திருத்தப்பட்டது 1988)
    • Diplomatic and Consular Officers (Oaths and Fees) Act 1959 (Revised 1988) [Act 348]
  • தூதர்வழி சலுகைகள் (வியன்னா மாநாடு) சட்டம் 1966
    • Diplomatic Privileges (Vienna Convention) Act 1966 [Act 636]
  • தூதரக உறவுகள் (வியன்னா மாநாடு) சட்டம் 1999
    • Consular Relations (Vienna Convention) Act 1999 [Act 595]
  • வெளிநாட்டுப் பிரதிநிதி (சலுகைகள் மற்றும் தடைகள்) சட்டம் 1967 (திருத்தப்பட்டது 1995)
    • Foreign Representative (Privileges and Immunities) Act 1967 (Revised 1995) [Act 541]
  • பன்னாட்டு நிறுவனங்கள் (சலுகைகள் மற்றும் வழக்குத்தடுப்பு) சட்டம் 1992
    • International Organisations (Privileges and Immunities) Act 1992 [Act 485]
  • இரசாயன ஆயுதங்கள் மாநாடு சட்டம் 2005
    • Chemical Weapons Convention Act 2005 [Act 641].

அமைச்சு சார்ந்த அரசு துறைகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "KEMENTERIAN LUAR NEGERI" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
  2. "Functions". Ministry of Foreign Affairs, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 20 September 2008.
  3. 3.0 3.1 "Brief History of Wisma Putra". Ministry of Foreign Affairs, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 20 September 2008.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]