உள்ளடக்கத்துக்குச் செல்

18-அம்ச உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

18-அம்ச உடன்படிக்கை (ஆங்கிலம்: 18-Point Agreement அல்லது 18-Point Memorandum; மலாய்: Perjanjian 18 perkara சீனம்: 十八点协议) என்பது 1963-ஆம் ஆண்டில், மலேசியக் கூட்டமைப்பில் சேர்வதற்கு முன்னர் பிரித்தானிய போர்னியோவின் பிரித்தானிய சரவாக் முடியாட்சி (Crown Colony of Sarawak) முன்மொழிந்த 18 விதிமுறைக் கூறுகளின் பட்டியல் (List of 18 Points) ஆகும்.

மலேசிய ஒப்பந்தத்தை (Malaysia Agreement) உருவாக்க கேமரன் கோபோல்டு பிரபு (Lord Cameron Cobbold) தலைமையிலான ஓர் ஆணையமும் (Commission of Enquiry); அரசுகளுக்கு இடையிலான (Inter-Governmental) கருத்துகளைக் கண்டறிவதற்கு தி லான்சுடவுன் குழுவும் (Lansdowne Committee) நியமிக்கப்பட்டன.

லான்சுடவுன் பிரபு (Lord Lansdowne) ஐக்கிய இராச்சியத்திற்காகவும்; துன் அப்துல் ரசாக் உசேன் (Tun Abdul Razak), மலாயா கூட்டமைப்பிற்காகவும் பொறுப்பு வகித்தார்கள். அப்போது துன் அப்துல் ரசாக் உசேன், மலாயாவின் துணைப் பிரதமராகப் பதவி வகித்தார்.[1]

பொது[தொகு]

18-அம்ச உடன்படிக்கை சரவாக் இராச்சியத்தின் வெள்ளை இராசா காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்பது முதன்மை கோட்பாடுகளின் (Nine Cardinal Principles of English Rajah) அடிப்படையில் அமைந்து இருந்தன.[2]

இதே போன்ற 20-அம்ச உடன்படிக்கை, வடக்கு போர்னியோவால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. மலேசியக் கூட்டமைப்பிற்குள் சரவாக் மாநிலத்தின் உரிமைகள் சபா மாநிலத்தைப் போல காலப் போக்கில் அரிக்கப்பட்டுவிட்டன என்று வாதம் செய்பவர்களின் மத்தியில்; இந்த 18-அம்ச உடன்படிக்கையும் ஒரு மையப் புள்ளியாகச் செயல்படுகின்றது.[3]

18-அம்ச உடன்படிக்கை[தொகு]

1963 மலேசிய ஒப்பந்தத்தில் சரவாக்கின் 18-அம்ச உடன்படிக்கை (MA63)[தொகு]

துணை ஆவணங்கள்:

கூறு 1: மதம்[தொகு]

இசுலாம் மலேசியாவின் தேசிய மதமாக இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை; என்றாலும், சரவாக்கில் அதிகாரப்பூர்வ மதம் எதுவும் இருக்கக்கூடாது. மேலும் மலாயாவின் தற்போதைய அரசியலமைப்பில் இசுலாம் தொடர்பான விதிகள் சரவாக் கூட்டமைப்புக்குள் பயன்படுத்தல் ஆகாது.

(While there was no objection to Islam being the national religion of Malaysia, there should be no official religion in Sarawak, and the provisions relating to Islam in the present Constitution of Federation Of Malaya should not apply to Federation Of Sarawak)

கூறு 2: மொழி[தொகு]

 1. மலேசியாவின் தேசிய மொழியாக மலாய் மொழி இருக்க வேண்டும்
 2. சரவாக்கின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும்
 1. (Malay should be the national language of Malaysia)
 2. (English should be the official language of Sarawak)

கூறு 3: அரசியலமைப்பு[தொகு]

மலேசியாவின் அரசியலமைப்பு தற்போதைய மலாயா கூட்டமைப்பின் அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டாலும்; மலேசியாவின் அரசியலமைப்பு முற்றிலும் புதிய ஆவணமாக இருக்க வேண்டும்.

மற்றும் கட்டுப்பாடற்ற நிலையில் அனைத்து மாநிலங்களினாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருக்க வேண்டும். முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் வெவ்வேறு மாநிலங்களால் உருவாக்கப்பட்ட மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் தொடர்ச்சியான திருத்தங்களாக இருக்கக்கூடாது. சரவாக் கூட்டமைப்பிற்கான புதிய அரசியலமைப்பு அவசியமானது.

(Whilst accepting that the present Constitution of the Federation of Malaya should form the basis of the Constitution of Malaysia, the Constitution of Malaysia should be a completely new document drafted and agreed in the light of a free association of states and should not be a series of amendments to a Constitution drafted and agreed by different states in totally different circumstances. A new Constitution for Federation of Sarawak was of course essential.)

கூறு 4: நாட்டின் தலைவர்[தொகு]

மலேசிய நாட்டின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுவதற்கு சரவாக் இராசாவிற்கு தகுதி இல்லை)

(The Rajah of Sarawak should not be eligible for election as Head of Nation of Malaysia)

கூறு 5: கூட்டமைப்பின் பெயர்[தொகு]

சரவாக் கூட்டமைப்பு, மலேசியா

(Federation Of Sarawak, Malaysia)

கூறு 6: குடிவரவு அதிகாரம்[தொகு]

வெளியில் இருந்து மலேசியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறுவதற்கான கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருக்க வேண்டும். ஆனால் சரவாக்கிற்குள் நுழைவதற்கு சரவாக் அரசாங்கத்தின் அனுமதியும் தேவை. கடுமையான பாதுகாப்பு காரணங்களைத் தவிர; மற்ற அரசு நோக்கங்களுக்காக சரவாக்கிற்குள் நுழைவதை மத்திய அரசால் தடை செய்ய இயலாது. மலேசியாவின் பிற பகுதிகளில் இருந்து சரவாக்கிற்குள் குடிநுழைபவர்கள்; மத்திய அரசில் பணிபுரியும் நபர்களைத் தவிர; மற்ற நபர்களின் நடமாட்டத்தின் மீது சரவாக் கட்டுப்பாடற்ற கட்டுப்பாட்டைக் கொண்டு இருக்க வேண்டும்.

(Control over immigration into any part of Malaysia from outside should rest with the Central Government but entry into Sarawak should also require the approval of the Sarawak Government. The Central Government should not be able to veto the entry of persons into Sarawak for Government purposes except on strictly security grounds. Sarawak should have unfettered control over the movements of persons other than those in Central Government employ from other parts of Malaysia into Sarawak.)

கூறு 7: பிரிந்து செல்லுதல்[தொகு]

மலேசியாவில் இருந்து பிரிந்து செல்ல உரிமை இருக்க வேண்டும்.

(There should be right to secede from Malaysia)

கூறு 8: போர்னியோ மயமாக்கம்[தொகு]

பொதுப்பணித் துறையில் போர்னியோ மயமாக்கத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும்.

(Borneanisation of the public service should proceed as quickly as possible.)

கூறு 9: பிரித்தானிய அதிகாரிகள்[தொகு]

சரவாக்கில் இருந்து தகுந்த தகுதி உடையவர்கள் அரசு பணியிடங்களில் அமர்த்தப்படும் வரையில், பிரித்தானிய அதிகாரிகள் பொதுச் சேவையில் தொடர்ந்து இருக்க ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

(Every effort should be made to encourage British Officers to remain in the public service until their places can be taken by suitably qualified people from Sarawak.)

கூறு 10: குடியுரிமை[தொகு]

காபோல்டு ஆணையத்தின் அறிக்கையின் பத்தி 148(k)-இல் உள்ள பரிந்துரை பின்வரும் திருத்தங்களுக்கு உட்பட்டு சரவாக் கூட்டமைப்பில் குடியுரிமை உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும்:

 1. துணைப் பத்தி (i) ஐந்தாண்டு வசிப்பிடத்திற்கான விதியைக் கொண்டிருக்கக் கூடாது.
 2. எங்கள் சட்டத்துடன் இணைந்து செயல்படுவதற்கு, துணைப் பத்தி (ii)(a) "10 ஆண்டுகளில் 8" என்பதற்குப் பதிலாக "10 ஆண்டுகளில் 7" என்று இருக்க வேண்டும்.
 3. துணைப் பத்தி (iii) பெற்றோரின் குடியுரிமைக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கக்கூடாது - மலேசியா உருவான பிறகு சரவாக்கில் பிறந்த ஒருவர் கூட்டாட்சி குடிமகனாக இருக்க வேண்டும்.

(The recommendation in paragraph 148(k) of the Report of the Cobbold Commission should govern the citizenship rights in the Federation of Sarawak subject to the following amendments:)

 1. (sub-paragraph (i) should not contain the proviso as to five years residence.)
 2. (in order to tie up with our law, sub-paragraph (ii)(a) should read '7 out of 10 years' instead of '8 out of 10 years'.)
 3. (sub-paragraph (iii) should not contain any restriction tied to the citizenship of parents – a person born in Sarawak after Malaysia must be federal citizen.)

கூறு 11: வரி மற்றும் நிதி[தொகு]

சரவாக் அதன் சொந்த நிதி, மேம்பாடு மற்றும் நிதியின் மீதான கட்டுப்பாடுகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்; மேலும் அதன் சொந்த வரிவிதிப்பு, மற்றும் அதன் சொந்த முயற்சியில் கடன்களைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டிருக்க வேண்டும்.

(Sarawak should retain control of its own finance, development and tariff, and should have the right to work up its own taxation and to raise loans on its own credit.)

கூறு 12: அரசாங்கத் தலைவர்[தொகு]

 1. சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 2. சரவாக்கில் முறையான அமைச்சர் முறை இருக்க வேண்டும்.
 1. (The Premier should be elected by official members of Council Negri)
 2. (There should be a proper Ministerial system in Sarawak.)

கூறு 13: இடைநிலைக் காலம்[தொகு]

இது பத்தாண்டுகளாக இருக்க வேண்டும்; அத்தகைய காலக் கட்டத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் சரவாக் கூட்டமைப்புக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட வேண்டும்; மேலும் சரவாக் அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கத்தால் மட்டும் தனியாக அதிகாரம் வழங்கப்படக் கூடாது.

(This should be ten years and during such period legislative power must be left with the Federation of Sarawak by the Constitution and not be merely delegated to the Sarawak Government by the Central Government.)

கூறு 14: கல்வி மற்றும் சுகாதாரம்[தொகு]

சரவாக்கின் தற்போதைய சுகாதாரம் மற்றும் கல்வி முறை பராமரிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக அவை சரவாக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

(The existing healthcare and educational system of Sarawak should be maintained and for this reason it should be under Sarawak control.)

கூறு 15: அரசியலமைப்பு பாதுகாப்புகள்[தொகு]

சரவாக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நேரடியான ஒப்புதல் இல்லாமல் சரவாக்கிற்கு வழங்கப்பட்ட எந்தவொரு சிறப்புப் பாதுகாப்பிலும் மத்திய அரசினால் திருத்தம் அல்லது மீட்டுக் கொள்ளுதல் செய்யப்படக் கூடாது.

சரவாக் கூட்டமைப்பின் அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் சரவாக்கில் உள்ள மக்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.

(No amendment modification or withdrawal of any special safeguard granted to Sarawak should be made by the Central Government without the positive concurrence of the Government of the Federation of Sarawak.) (The power of amending the Constitution of the Federation of Sarawak should belong exclusively to the people in the Sarawak.)

கூறு 16: நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம்[தொகு]

இது சரவாக்கின் மக்கள்தொகையை மட்டுமல்ல; அதன் அளவு மற்றும் சாத்தியக் கூறுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் எந்த வகையிலும் வடக்கு போர்னியோ மற்றும் சிங்கப்பூரை விட குறைவாக இருக்கக் கூடாது.

(This should take account not only of the population of Sarawak but also of its size and potentialities and in any case should not be less than that of North Borneo and Singapore.)

கூறு 17: கூட்டமைப்பின் தலைவரின் பெயர்[தொகு]

சரவாக் இராசா

(Rajah of Sarawak)

கூறு 18: நிலம், காடுகள், உள்ளாட்சி போன்றவை[தொகு]

தேசிய அளவிலான நில மன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பாக மலேசியாவின் அரசியலமைப்பில் உள்ள விதிகள் சரவாக்கில் பொருந்தாது. அதேபோல், தேசிய அளவில் உள்ள உள்ளாட்சிக்கான மன்ற அமைப்பு முறையை சரவாக்கில் அமல்படுத்தக்கூடாது.

(The provisions in the Constitution of the Malaysia in respect of the powers of the National Land Council should not apply in Sarawak. Likewise, the National Council for Local Government should not apply in Sarawak.)

மேற்கோள்கள்[தொகு]

 1. Bastin, John Sturgus (1979). Malaysia; Selected Historical Readings. Ann Arbor, Michigan: University of Michigan Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783262012165.
 2. Rawlins, Joan (1965). Sarawak - 1839 to 1963. Macmillan & Company, (Original from the University of Michigan Press. p. 240.
 3. Sarawak Constitution

மேலும் படிக்க[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=18-அம்ச_உடன்படிக்கை&oldid=3657168" இலிருந்து மீள்விக்கப்பட்டது