உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370
காணாமல்போன 9M-MRO விமானம்,
2011ம் ஆண்டு சார்லசு டிகால் வானூர்தி நிலையத்தில்
சுருக்கம்
நாள்8 மார்ச் 2014
சுருக்கம்காணவில்லை, தேடும் பணி நடக்கின்றது[1]
இடம்கடைசித் தொடர்பு: தென்சீனக் கடலின் கோத்தா பாருவில் இருந்து 120 கடல் மைல்கள் கிழக்கே
பயணிகள்227
ஊழியர்12
வானூர்தி வகைபோயிங் 777-2H6ER
இயக்கம்மலேசியா எயர்லைன்ஸ்
வானூர்தி பதிவு9M-MRO
பறப்பு புறப்பாடுகோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், கோலாலம்பூர்
சேருமிடம்பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம், பெய்ஜிங்

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 (MH370,[2] அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ748[3][4]) என்பது 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரோடு காணாமல் போன போயிங் 777 வகை விமானம் ஆகும்.[5]

மலேசியா எயர்லைன்ஸின் போயிங் 777 வகை விமானங்களில் அதிக சேதம் விளைவித்ததும், உலகின் போயிங் 777 வகை விமானத்தினால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதும் இந்த நிகழ்வாக இருக்கும். போயிங் 777 வகை விமானம் இத்தகைய மீட்கமுடியா விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.

காணாமல் போன விவரங்கள்

[தொகு]

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 8 மார்ச் 2014 அன்று 00:41 (ம.நே) மணியளவில் இவ்விமானம் புறப்பட்டது. இருவேறு முரண்பாடான தகவல்களின்படி அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.[6] அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்துள்ளது.[7]

தேடுதல் பணிகள்

[தொகு]
பயணப் பாதை. ஆரம்பித்தது: கோலாலம்பூர், சென்றிருக்க வேண்டியது: பெய்ஜிங்.
A: அந்தமான் கடல், G: தாய்லாந்து வளைகுடா. M: மலாக்கா நீரிணை, S: தெற்கு சீனக் கடல்.
கோலாலம்பூர்
கடைசித் தொடர்பு
பெய்ஜிங்
1000 km
A
M
G
S

அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்சு, மலேசியா சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய கடற்படையினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.[1]

மார்ச் 13, 2014

[தொகு]
 • தேடும் பணியில் இந்தியாவும் இணைந்தது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 விமானங்கள் அந்தமான் கடலில் தேடுதல் பணியைத் தொடங்கின. இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் சுமார் 35,000 சதுர கி. மீட்டர் பரப்பளவுக்கு விமானத்தைத் தேடி வருகின்றன. தாய்லாந்து கடலில் முகாமிட்டுள்ள இந்தியாவின் சாகர் போர்க்கப்பலும் விரைவில் தேடுதல் பணியில் இணையும். இந்தியாவின் உளவு செயற்கைக்கோளான ருக்மணியும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.[8]

மார்ச் 14, 2014

[தொகு]
 • தேடும் பணிகள், ஏழாவது நாளில் இந்தியப் பெருங்கடலுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா தனது கண்காணிப்புக் குழுக்களை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியது. மலேசிய விமானக் கட்டுப்பாட்டு ரேடாருடனான தொடர்பினை இழந்தபிறகும் விமானம் சில மணிநேரங்கள் தொடர்ந்து பறந்ததாக நம்பப்படுவதே இந்த நடவடிக்கைக்கு காரணமென செய்திகள் தெரிவித்தன. சென்னைக் கடற்கரைக்கு அப்பால் வங்காள விரிகுடாவில், 9000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தியாவின் தேடுதல் நடப்பதாகவும் மலேசியா தெரிவித்தது[9].

மார்ச் 15, 2014

[தொகு]
 • மலேசிய அரசாங்கத்திடமிருந்து வந்த புதிய வேண்டுகோளின்படி, இந்தியா தனது தேடுதல் பணிகளை மத்திய மற்றும் கிழக்கு வங்காள விரிகுடாவில் தீவிரப்படுத்தியது. 2,50,௦௦௦ சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு அந்தமான் மற்றும் வங்காள விரிகுடா கடல்களில் தேடுதல் பணிகள் தொடர்வதாக இந்திய கடற்படை தெரிவித்தது[10].

மார்ச் 16, 2014

[தொகு]

தேடும் பணிகளில் உதவிடுமாறு 25 நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மலேசியா தெரிவித்தது[11].

மார்ச் 17, 2014

[தொகு]

சுமத்ராவிலிருந்து தெற்கு இந்தியப் பெருங்கடல்வரை தேடும் பணிகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. லாவோசிலிருந்து காப்சியன் கடல்வரை தேடும் பணிகளில் சீனாவும் கசகஸ்தானும் முன்னெடுத்து வருகின்றன[12].

மார்ச் 20, 2014

[தொகு]

விமானத்தின் உடைந்த இரு பாகங்கள் என நம்பப்படும் பொருட்களை தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் தமது செய்மதிகள் கண்டுபிடித்துள்ளதாக ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்[13].

மார்ச் 21, 2014

[தொகு]

பூமியின் தொலைதூரப் பகுதியில், கடுமையான சூழலில் விமானங்கள் தொடர்ந்து தேடுதல் பணிகளை செய்தன[14].

மார்ச் 22, 2014

[தொகு]
விமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருட்கள் பற்றிய செய்மதிப் படிமங்கள் வெளியிடப்பட்டன. 1: தெற்கு சீனக் கடலில் இருப்பதாக சொல்லப்பட்டது, நிரூபிக்கப்படவில்லை (மார்ச் 12). 2: தெற்கு இந்தியப் பெருங்கடலில் காணப்பட்டதாக ஆஸ்திரேலியாவினால் சொல்லப்பட்டது (மார்ச் 20). 3: தெற்கு இந்தியப் பெருங்கடலில் காணப்பட்டதாக சீனாவால் சொல்லப்பட்டது (மார்ச் 22)

விமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருள் பற்றிய செய்மதிப் படிமத்தை சீனா ஆராய்ந்து வருவதாக மலேசியா தெரிவித்தது[15].

மார்ச் 23, 2014

[தொகு]

விமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருள் பற்றிய புதிய செய்மதிப் படிமங்களை பிரான்ஸ் தந்துள்ளதாக மலேசியா தெரிவித்தது[16].

மார்ச் 24, 2014

[தொகு]

விமானம் தெற்கு இந்துமாக்கடலில் விழுந்துள்ளதாக செய்மதிப் படிமங்கள் மற்றும் ராடார் மூலம் தெரியவந்துள்ளது.[17][18]

மார்ச் 27, 2014

[தொகு]
 • தெற்கு இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 300 பொருட்களை தாம் கண்டுள்ளதாக தாய்லாந்து நாட்டின் விண்வெளி நிறுவனம் தெரிவித்தது. 450 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பொருட்கள் பரவிக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேடுதல் பணியானது மோசமான வானிலை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 78,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணி நடப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்தது[19].

சூலை, 29, 2015

[தொகு]

காணாமல் போன இவ்விமானத்தின் வலதுபுற இறக்கையின் சிறுபகுதி மடகஸ்காருக்கு அருகில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான ரியூனியன் தீவிலிருந்து கண்டெடுக்கப்பட்டு, அச்சிறுபகுதி மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370தினுடையதே என உறுதிசெய்யப்பட்டது. இத்தகவலை மலேசியப் பிரதமர் ஆகத்து, 5, 2015 அன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.[20]

தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள்

[தொகு]
ஆஸ்திரேலிய விமானப்படையைச் சேர்ந்த AP-3C Orion எனும் விமானம் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் RSS Steadfast எனும் கப்பல் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
அந்தமான் கடலில் கப்பல் மூலம் நடந்த தேடுதல் பணி
 1.  மலேசியா
 2.  ஆத்திரேலியா
 3.  புரூணை
 4.  சீனா
 5.  இந்தியா
 6.  இந்தோனேசியா
 7.  சப்பான்
 8.  நியூசிலாந்து
 9.  பிலிப்பீன்சு
 10.  சிங்கப்பூர்
 11.  சீனக் குடியரசு
 12.  தாய்லாந்து
 13.  ஐக்கிய அமெரிக்கா
 14.  வியட்நாம்

பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்

[தொகு]

இவ்விமானத்தின் பொறுப்பாளர் (captain) சாகிரே அக்மத் ஷா ஆவார். 53 அகவையினரான இவர் மலேசியாவின் பினாங்கு நகரத்தவர். 1981இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்த இவர் 18,365 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர் ஆவார்.[21] முதல் அதிகாரியான (first officer) இபரிக் அப்துல் அகமதுவும் மலேசியராவார். 27 அகவையினரான இவர் 2007இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்து 2,763 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர். 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரின் பெயர்ப்பட்டியலை தங்களின் பதிவேட்டிலிருந்து மலேசியா எயர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. 12 பணிக்குழுவினரும் மலேசியராவர்.[22][23]

நாடு பயணிகள்
 ஆத்திரேலியா 6
 ஆஸ்திரியா 1[a][b]
 கனடா 2
 சீனா 153[a]
 பிரான்சு 4
 ஆங்காங் 1
 இந்தியா 5
 இந்தோனேசியா 7
 இத்தாலி 1[a][c]
 மலேசியா 38[a] (+12 பணிக்குழுவினர்)
 நெதர்லாந்து 1[a]
 நியூசிலாந்து 2
 உருசியா 1
 சீனக் குடியரசு 1
 உக்ரைன் 2[a]
 ஐக்கிய அமெரிக்கா 3
மொத்தம் (15 நாட்டினர்) 239
 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி ஏழு பயணிகள் தம்மிடம் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அவர்கள் முறையே: சீனா 1, உக்ரைன் 2, ஆஸ்திரியா 1, இத்தாலி 1, நெதர்லாந்து 1, மலேசியா 1.[24]
 2. ஆசுதிரிய வெளியுறவு அமைச்சகம் இந்த ஆசுதிரியர் இவ்விமானத்தில் பயணிக்கவில்லை என செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இவரின் கடவுச் சீட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.[6][25]
 3. இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் இந்த இத்தாலியர் உயிருடன் இருக்கிறார் என செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இவரின் பெயர் பயனியர் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுருந்தாலும், இவரின் கடவுச் சீட்டு திருடப்பட்டது எனவும் இவர் தாய்லாந்திலிருந்து தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொன்டார் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[6][25]

புலனாய்வு

[தொகு]

இவ்விமானத்தில் பயணம் செய்த இருவர் திருடப்பட்ட கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து, விமானம் காணாமல் போனமை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் அமெரிக்க, மலேசிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.[26][27]

மார்ச் 15, 2014

[தொகு]

விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பானது வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக மலேசியா அறிவித்தது. கோலாம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடார்கள் தந்துள்ள ஆதாரங்களின்படி, இவ்விமானம் தனது பாதையினை மாற்றியிருப்பதோடு ஏறத்தாழ ஏழு மணி நேரம் வானத்தில் பறந்துள்ளதாக தெரிவித்தார். விமானத்திலிருந்த ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக தெரியவருகிறது எனவும் நஜிப் ரசாக் தெரிவித்தார் [28].

மார்ச் 18, 2014

[தொகு]

தன்னுடைய ரேடார் ஒரு விமானத்தைக் கண்டுள்ளதாகவும், அவ்விமானம் காணாமல்போன மலேசிய விமானமாக இருக்கக்கூடும் எனவும் தாய்லாந்து இராணுவம் தெரிவித்தது[29].

மார்ச் 02 2016

[தொகு]

ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் கடற்கரையில் போயிங் வகை விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது இனிமேல்தான் தெளிவாகும்.[30].

விமானத்தின் விவரங்கள்

[தொகு]
9M-MRO விமானத்தின் கட்டுப்பாட்டு அறை (2004ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒளிப்படம்)
 • வகை: போயிங் 777 – 2H6ER
 • வரிசை எண்: 28420
 • பதிவு எண்: 9M-MRO
 • தயாரிப்பு விவரம்: போயிங் 777 வகையில் 404ஆவது விமானம்[31]
 • முதல்முறையாக பறந்த நாள்: 14 மே 2002
 • மலேசிய ஏர்லைன்சுக்கு விற்கப்பட்ட நாள்: 31 மே 2002
 • என்ஜின்கள்: இரண்டு Rolls-Royce Trent 892[32]
 • விமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282 (35 பிசினசு, 247 எகோனோமி)[33]

முடிவு

[தொகு]
mini
mini

இந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதற்கான காரணத்தை ஆராய்ந்த அந்த நாட்டின் உளவுத்துறை முற்றுப்பெறாத பிங் (partial ping) தகவலை காரணம் காட்டியுள்ளது.[34] இந்த பிங்கிங் என்பது விமானத்திற்கும் செயற்கைக்கோளுக்குமான தொடர்பு பிரதிபலிப்பு ஆகும்.[35] விமானத்தின் எந்த ஒரு பகுதியையும் கண்டுபிடிக்காத நிலையில் அதன் கருப்புப்பெட்டியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.[36] 2015ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி இதுவரை இந்த விமானம் பற்றிய தகவல் எதுவுமே கிடைக்கவில்லை.[37]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 "Malaysia Airlines denies crash report, says plane still missing.". Reuters. 8 மார்ச் 2014 இம் மூலத்தில் இருந்து 2014-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140308015839/http://www.reuters.com/article/2014/03/08/us-malaysiaairlines-flight-idUSBREA2701720140308. பார்த்த நாள்: 8 மார்ச் 2014. 
 2. CBC News, "Malaysia Airlines jet missing, 2 Canadians among 239 on board", 7 மார்ச் 2014
 3. China Southern flight CZ 748: Kuala Lumpur - Capital, Beijing, FlightMapper.net. Retreived 7 மார்ச் 2014.
 4. "Beijing-bound flight from Malaysia missing". USA TODAY. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 5. "Malaysia Airlines 'loses contact with plane'". பிபிசி. 8 மார்ச் 2014. http://www.bbc.com/news/world-asia-26492748. பார்த்த நாள்: 8 மார்ச் 2014. 
 6. 6.0 6.1 6.2 "Crash: Malaysia B772 over Gulf of Thailand on Mar 8th 2014, aircraft missing". The Aviation Herald. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 7. விழுந்தது மலேசிய விமானம்: 239 பேர் பலி?
 8. "India joins search for Malaysian jetliner". பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 9. "Lost Malaysia plane 'may have flown on for five hours'". பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 10. "Questions remain as India continues search". பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 11. "Malaysia seeks international assistance". பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 12. "Co-pilot last to speak from jet". பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 13. "Australia plane searchers investigate debris". பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 14. "Search plane fails to find Malaysia jet debris". பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 15. "Malaysia plane search: China checks new 'debris' image". பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 16. "Malaysia flight MH370: New images of 'possible debris'". பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 17. http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140324_malaysiabreaking.shtml
 18. http://www.bbc.com/news/world-asia-26591056
 19. "More objects spotted in MH370 search". பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 20. "MH370 search: Plane debris arrives in France". BBC News. 1 August 2015. http://www.bbc.com/news/world-europe-33739851. பார்த்த நாள்: 9 August 2015. 
 21. "Missing MAS flight: Captain piloting MH370 a Penang boy." The Straits Times. 8 March 2014. Retrieved on 9 March 2014.
 22. "MH370 Flight Incident". மலேசியா எயர்லைன்ஸ். 8 March 2014. Archived from the original on 8 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 23. "MH 370 PASSENGER MANIFEST" (PDF). Malaysia Airlines. 8 March 2014. Archived from the original (PDF) on 8 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 24. 新华网 (8 March 2014). [新华网 (8 March 2014). "初步认定马航失联班机有7名南航方面旅客". Archived from (சீனம்) the original on 2014-03-08. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014. {{cite web}}: Check |url= value (help) (சீனம்) "初步认定马航失联班机有7名南航方面旅客"]. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014. {{cite web}}: Check |url= value (help); templatestyles stripmarker in |url= at position 1 (help)
 25. 25.0 25.1 "Passengers on Malaysia Airlines plane come from 14 countries, airline says". சிஎன்என். Turner Broadcasting System. 8 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 March 2014.
 26. "Passengers with stolen passport board Malaysian Airlines Flight "a major focal point for investigators is now the identity of the two passengers and whether the plane has been targeted as a terrorist attack". Malaysiasun.com. Archived from the original on 2014-03-09. பார்க்கப்பட்ட நாள் 2014-03-08.
 27. DiBlasio, Natalie and Kevin Johnson (8 மார்ச் 2014). "Reports: U.S. investigating terror concerns in missing jet". யூஎஸ்ஏ டுடே. Archived from the original on 2014-03-09. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 28. "Missing Malaysia Airlines plane 'deliberately diverted'". பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 29. "Thailand may have detected MH370 pass". பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 30. for MH370: 'High possibility' debris from Boeing 777[தொடர்பிழந்த இணைப்பு] பிபிசி 03 மார்ச் 2016
 31. Pither, Tony (1998). The Boeing 707 720 and C-135. England: Air-Britain (Historians) Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85130-236-X.
 32. "Malaysia Airlines 9M-MRO (Boeing 777 – MSN 28420)". Airfleets. பார்க்கப்பட்ட நாள் 7 March 2014.
 33. "Boeing 777-200 – Fleet". Malaysia Airlines. பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
 34. கடலில் மூழ்கி 239 பேரும் பலியாகிவிட்டனர்: மலேசிய பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு
 35. http://www.whoneedslight.net/page/484095582
 36. எம்.எச்.370: கருப்புப் பெட்டியை கடலுக்கு அடியில் தேடும் பணி தொடங்கியது
 37. எம்.எச்-370: யாருக்கும் இப்போது அக்கறை இல்லை!

வெளியிணைப்புகள்

[தொகு]