சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம்
China Southern Airlines Company Limited
中国南方航空公司
Zhōngguó Nánfāng Hángkōng Gōngsī
IATA ICAO அழைப்புக் குறியீடு
CZ CSN CHINA SOUTHERN
நிறுவல்1988
AOC #C4XF535F
மையங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்இசுகை பேர்ள் கிளப்
கூட்டணிஇசுகைடீம்
வானூர்தி எண்ணிக்கை368 (+142 ஆணைகள்)
சேரிடங்கள்200
தாய் நிறுவனம்சீனா சதர்ன் ஏர்லைன்சு நிறுவனம்.
தலைமையிடம்குவான்சூ, குவாங்டோங், சீன மக்கள் குடியரசு
RevenueCN¥ 90.395 billion (2011)[1]
இயக்க வருவாய்CN¥ 4.353 பில்லியன் (2011)[1]
நிகர வருவாய்CN¥ 5.110 பில்லியன் (2011)[1]
மொத்த சொத்துக்கள்CN¥ 129.41 பில்லியன் (2011)[1]
மொத்த சமபங்குCN¥ 32.175 பில்லியன் (2011)[1]
பணியாளர்கள்73,621 (2011)[1]
வலைத்தளம்www.csair.com
சீனா சதர்ன் ஏர்லைன்சின் ஏர்பஸ் A380-841
சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்
எளிய சீனம் 中国南方航空公司
சீன எழுத்துமுறை 中國南方航空公司

சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் (China Southern Airlines Company Limited, எளிய சீனம்: 中国南方航空公司மரபுவழிச் சீனம்: 中國南方航空公司) (SSE: 600029, SEHK: 1055, நிபசZNH) சீன மக்கள் குடியரசில் குவாங்டோங் மாகாணத்தின் குவான்சூவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஓர் வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். ஏற்றிச் செல்கின்ற பயணிகளின் அடிப்படையில் இது உலகின் ஆறாவது மிகப் பெரிய வான்போக்குவரத்து நிறுவனமாகவும் ஆசியாவில் மிகப் பெரும் நிறுவனமாகவும் விளங்குகிறது. உள்ளூர் பயணிகள் போக்குவரத்தில் உலகின் நான்காவது நிலையில் உள்ளது. தனது முதன்மை வான்சேவை மையங்களாக விளங்குகின்ற குவான்சூ, சோங்கிங் மற்றும் பெய்ஜிங் வானூர்தி நிலையங்களில் இருந்து 422 வானூர்தித் தொகுதியை உடைய சீனா சதர்ன் ஏர்லைன்சு 121 இடங்களுக்கு சேவை நல்குகிறது.

சீனாவின் குடியியல் வான்வழிப் போக்குவரத்து நிர்வாகத்தை சீரமைத்தபோது இந்த நிறுவனம் 1988, சூலை 1 அன்று உருவானது. அதுமுதல் பல உள்நாட்டு வானூர்தி சேவை நிறுவனங்களை கையகப்படுத்தியும் இணைந்தும் சீனாவின் மூன்று பெரிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக (மற்றவை:ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்) விளங்குகிறது.[2] இது இசுகைடீம் எனப்படும் வான்சேவைக் கூட்டணியில் உள்ளது.[3] இதன் இலச்சினை நீலவண்ண செங்குத்து விமான வால்பகுதியில் சிவப்பு வண்ண இலவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2010இல், சீனா சதர்ன் ஏர்லைன்சு 76.5 மில்லியன் உள்ளூர் மற்றும் பன்னாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இதே ஆண்டில் நிகர இலாபமாக CNY5.8 பில்லியன் ($883 மில்லியன்) ஈட்டியுள்ளது.[4]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]