கடவுச் சீட்டு
Jump to navigation
Jump to search
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒருவரின் அடையாளத்தையும் நாட்டையும் சான்று அளித்து ஒரு நாட்டு அரசு வழங்கும் ஆவணம் கடவுச்சீட்டு ஒலிப்பு (உதவி·தகவல்)) (passport) எனப்படும். கடவுச்சீட்டில், அதை வைத்திருப்பவர் பெயர், பால், பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய்-தந்தை பெயர், கணவன் அல்லது மனைவி பெயர், கடவுச்சீட்டு எண், வழங்கப்பட்ட நாள், வழங்கிய அலுவலகத்தின் இடம் ஆகிய தகவல்களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும், ஒருவரின் நாடும் குடியுரிமை பெற்ற நாடும் ஒன்றாக இருக்கும்.
கடவுச்சீட்டு இல்லாது வெளிநாடுகளுக்கு பயணிக்க விசா பெறமுடியாது.