பேராக் மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேராக் மனிதன் (Perak man) என்பது மலேசியா வின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊரில் 1938 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனித எலும்புக் கூட்டுக்கு உரிய மனிதனின் பெயராகும்.[1]

அந்த எலும்புக் கூடு உட்கார்ந்த நிலையில் இருந்தது. அதன் வயது 40 லிருந்து 45 க்குள் இருக்கும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். அதன் எலும்பு உறுப்புகள் சிதைவுகள் இல்லாமல் நல்ல நிலையில் இருந்தன. பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது.[2] அதற்கு அருகாமையில் 2004 ஆம் ஆண்டில் 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை.[3][4]

இந்த எலும்புக் கூடுகள் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களினமான ஆஸ்திரேலோ மெலனெசோயிடு (Australo-Melanesoid) இனத்துக்குரியது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த இனத்தைச் சார்ந்த மனிதர்கள் பசிபிக் மாக்கடல் தீவுகளில் வாழ்கின்றனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராக்_மனிதன்&oldid=3565358" இருந்து மீள்விக்கப்பட்டது