லெங்கோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோலகங்சார் பட்டணத்தில் இருந்து கிரிக் பட்டணத்திற்குப் போகும் வழியில் லெங்கோங் பட்டணம் இருக்கிறது.

மலேசியா வின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் (Lenggong) பட்டணம் இருக்கிறது. இது ஒரு சிறிய கிராமப் புறப் பட்டணம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 100 கி.மீ. வடக்கே உள்ளது. கோலகங்சார் பட்டணத்தில் இருந்து கிரிக் பட்டணத்திற்குப் போகும் வழியில் இந்தப் பட்டணம் அமைந்து இருக்கிறது. தீபகற்ப மலேசியாவில் அகழ்வாராய்ச்சிக்கு மிகவும் புகழ் பெற்ற இடம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இங்கே வாழ்ந்து இருக்கிறார்கள். அந்த மனிதர்களின் எலும்பு கூடுகளில் சில கிடைத்து உள்ளன. ஓர் எலும்புக் கூட்டிற்குப் பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைக்கப் பட்டு உள்ளது. அது 11,000 ஆண்டுகள் பழமையானது.

இந்தப் பட்டணத்தைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்பு குன்றுகளும் மலைகளும் உள்ளன. ரப்பர் செம்பனைத் தோட்டங்களும் உள்ளன. இங்குள்ள காடுகள் 90 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை. இங்கே சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

லெங்கோங் நகரை ஒரு திறந்த வெளி கண்காட்சியகம் என்று அழைப்பதும் உண்டு. பழங்காலத்தில் பயன் படுத்தப் பட்ட மண் பாண்டங்கள், ஆயுதங்கள், கல் ஆயுதங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டு உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 5°06′N 100°58′E / 5.100°N 100.967°E / 5.100; 100.967

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெங்கோங்&oldid=2481648" இருந்து மீள்விக்கப்பட்டது