உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாகங்சார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாகங்சார் (P067)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Kuala Kangsar (P067)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
கோலாகங்சார் மக்களவைத் தொகுதி

(P67 Kuala Kangsar)
மாவட்டம்கோலாகங்சார் மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை46,985 (2022)[1]
வாக்காளர் தொகுதிகோலாகங்சார் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்கோலாகங்சார், தைப்பிங், சுங்கை சிப்புட், சிம்மோர்
பரப்பளவு576 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்இசுகந்தர் சுல்கர்னாயின்
(Iskandar Dzulkarnain Abdul Khalid)
மக்கள் தொகை51,789 (2020) [4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]
2022-இல் கோலாகங்சார் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (21.0%)
  மலாயர் (71.6%)
  இதர இனத்தவர் (1.0%)

கோலாகங்சார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Kangsar; ஆங்கிலம்: Kuala Kangsar Federal Constituency; சீனம்: 瓜拉江沙 联邦选) என்பது மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P067) ஆகும்.[7]

கோலாகங்சார் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து கோலாகங்சார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

கோலாகங்சார்[தொகு]

கோலாகங்சார் நகரம் என்பது பேராக் மாநிலத்தின் அரச நகரம் ஆகும். முதன்முதலில் இந்த நகரம் கங்சார் ஆற்றுக் கரையோரம் உருவாக்கப் பட்டது. கங்சார் ஆறு பேராக் ஆற்றுடன் கலக்கிறது.

கோலாகங்சார் நகரத்தில் ஆண்டு முழுவதும்ம் மழை பெய்யும். பருவமழைக் காலங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். 1926-ஆம் ஆண்டு கடும் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் கோலாகங்சார் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

எச். என். ரிட்லி[தொகு]

18-ஆம் நூற்றாண்டில் இருந்து பேராக் சுல்தான்கள் இந்த நகரில் தங்கி தான் ஆட்சி செய்து வந்தனர். பிரித்தானியர் பேராக் மாநிலத்தை நிர்வாகம் செய்யும் போது கூட கோலாகங்சார் நகரம் தான் அவர்களின் நிர்வாகத் தளமாக விளங்கியது.

கோலாகங்சார் நகரத்தில் தான் மலேசியாவின் முதல் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் எச். என். ரிட்லி என்பவர் முதல் ரப்பர் கன்றை நட்டார்.

கோலாகங்சார் மக்களவைத் தொகுதி[தொகு]

கோலாகங்சார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1959-ஆம் ஆண்டில் சுங்கை ஈலிர் பேராக்; சுங்கை பேராக் உலு தொகுதிகளில் இருந்து கோலாகங்சார் தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது மலாயா மக்களவை P047 1959–1963 அப்துல்லா அப்துல் ரவுப்
(Abdullah Abdul Raof)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
மலேசிய மக்களவை
1-ஆவது மக்களவை P047 1963–1964 அப்துல்லா அப்துல் ரவுப்
(Abdullah Abdul Raof)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
2-ஆவது மக்களவை 1964–1969 மெகாட் ஒமார்
(Megat Khas Omar)
1969–1971 நாடாளுமன்ற
இடைநிறுத்தம்
[8]
3-ஆவது மக்களவை P047 1971–1973 கசாலி சாபி
(Mohamed Ghazali Jawi)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
1973–1974 பாரிசான் நேசனல்
(அம்னோ)
4-ஆவது மக்களவை P052 1974–1978 ஓன் சாரியா அபு பக்கர்
(Oon Zariah Abu Bakar))
5-ஆவது மக்களவை 1978–1982 யோங் பத்திமா ரசாலி
(Yong Fatimah Razali)
6-ஆவது மக்களவை 1982–1986 ரபிடா அசிஸ்
(Rafidah Aziz)
7-ஆவது மக்களவை P061 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P064 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P067 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2016 வான் முகமது காயிர்
(Wan Mohammad Khair)
2016–2018 மசுதுரா யாசிட்
(Mastura Mohd Yazid)
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–2024 இசுகந்தர் சுல்கர்னாயின்
(Iskandar Dzulkarnain)
பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
2024–தற்போது சுயேச்சை

கோலாகங்சார் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
46,985
வாக்களித்தவர்கள்
(Turnout)
36,232 77.11% - 7.97%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
35,754 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
35
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
443
பெரும்பான்மை
(Majority)
3,566 9.97% + 7.54
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[9]

கோலாகங்சார் மக்களவை வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
இசுகந்தர் சுல்கர்னாயின்
(Iskandar Dzulkarnain)
பெரிக்காத்தான் 35,754 14,380 40.22% + 40.22%
மசுலின் சாம் ரசுமான்
(Maslin Sham Razman)
பாரிசான் - 10,814 30.25% - 10.01 %
அகமது தர்மிசி ரம்லி
(Ahmad Termizi Ramli)
பாக்காத்தான் - 10,356 28.96% - 8.87%
யுசுமாலியா முகமது யூசோப்
(Yusmalia Mohamad Yusof)
தாயக இயக்கம் - 204 0.57% + 0.57%

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-04-23.
  9. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]