உள்ளடக்கத்துக்குச் செல்

பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசிர் சாலாக் (P073)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Pasir Salak (P073)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி

(P73 Pasir Salak)
மாவட்டம்பேராக் தெங்கா மாவட்டம்
ஈலிர் பேராக் மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை174,761 (2022)[1]
வாக்காளர் தொகுதிபாசிர் சாலாக் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்பாசிர் சாலாக், கம்போங் காஜா, ஆயர் தாவார், தஞ்சோங் துவாலாங், லங்காப், தெலுக் இந்தான்
பரப்பளவு1,064 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்சமாலுதீன் யாகயா
(Jamaluddin Yahya)
மக்கள் தொகை80,485 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (12.2%)
  மலாயர் (81.7%)
  இதர இனத்தவர் (2.0%)

பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Salak; ஆங்கிலம்: Pasir Salak Federal Constituency; சீனம்: 巴西沙叻国会议席) என்பது மலேசியா, பேராக், பேராக் தெங்கா மாவட்டம் (Perak Tengah District); ஈலிர் பேராக் மாவட்டம் (Hilir Perak District) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P073) ஆகும்.[7]

பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பாசிர் சாலாக்[தொகு]

பாசிர் சாலாக் நகரம், பேராக், பேராக் தெங்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமப்பகுதி; மற்றும் ஒரு வரலாற்று வளாகமாகவும் அறியப்படுகிறது.

இந்தக் கிராமத்திதான் பிரித்தானிய முதல்வர் ஜேம்ஸ் பர்ச் (James Birch); மகாராஜா லேலா என்பவரால் 1875 நவம்பர் மாதம் 2-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஜேம்ஸ் பர்ச் பேராக் மாநிலத்தின் முதல் பிரித்தானிய முதல்வராக அனுப்பப்பட்டவர். அதன் பின்னர் பேராக் போர் நடந்தது.[8]

உள்ளூர் மலாய்த் தலைவர்கள் மகாராஜா லேலா மற்றும் செபுண்டம் ஆகியோரின் சதியின் விளைவால் அந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பிரித்தானிய இராணுவத் தலையீட்டின் மூலம் பிரச்சினை தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்வு மலாயா மக்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.[9]

குறிப்பிடத்தக்க இடங்கள்[தொகு]

  • ஜேம்ஸ் பர்ச் நினைவுச்சின்னம்
  • செபுண்டம் நினைவகம்
  • டத்தோ மகாராஜா லேலா நினைவிடம்
  • ஜேம்ஸ் பர்ச் கொலை நடந்த இடம்
  • பாசிர் சாலாக் வரலாற்று சுரங்கப்பாதை
  • பேராக் மந்திரி பெசார் கலைக்கூடம்

பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி[தொகு]

பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் ஈலிர் பேராக் தொகுதியில் இருந்து
பாசிர் சாலாக் தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P067 1986–1990 மெகாட் ஜூனிட் மெகாட் அயூப்
(Megat Junid Megat Ayub)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P070 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 ரம்லி நிகா தாலிப்
(Ramli Ngah Talib)
11-ஆவது மக்களவை P073 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 தஜுடின் அப்துல் ரகுமான்
(Tajuddin Abdul Rahman)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் சமாலுதீன் யாகயா
(Jamaludin Yahya)
பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)

பாசிர் சாலாக் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
74,761
வாக்களித்தவர்கள்
(Turnout)
58,217 76.27% + 5.14%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
57,023 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
309
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
885
பெரும்பான்மை
(Majority)
5,003 8.77% - 8.98
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[10]

பாசிர் சாலாக் மக்களவை வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
சமாலுதீன் யாகயா
(Jamaludin Yahya)
பெரிக்காத்தான் 57,023 24,897 43.66% + 43.66%
கைருல் அசுவான் அருன்
(Khairul Azwan Harun)
பாரிசான் - 19,894 34.89% - 11.15 %
நிக் உமர் நிக் அப்துல் அசீஸ்
(Nik Omar Nik Abdul Aziz)
பாக்காத்தான் - 11,693 20.51% - 7.78%
சைரோல் இசாம் சகாரியா
(Zairol Hizam Zakaria)
தாயக இயக்கம் - 549 0.95% + 0.95%

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. "Pasir Salak Historical Complex". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
  9. "Kompleks Sejarah Pasir Salak". பார்க்கப்பட்ட நாள் 12 January 2024.
  10. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]