சங்காட் கெருயிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்காட் கெருயிங்
Changkat Keruing
சங்காட் கெருயிங் நகரைக் கடந்து செல்லும் டிண்டிங் ஆறு
சங்காட் கெருயிங் நகரைக் கடந்து செல்லும் டிண்டிங் ஆறு
சங்காட் கெருயிங் Changkat Keruing is located in மலேசியா
சங்காட் கெருயிங் Changkat Keruing
சங்காட் கெருயிங்
Changkat Keruing
ஆள்கூறுகள்: 4°23′N 100°41′E / 4.383°N 100.683°E / 4.383; 100.683
நாடு மலேசியா
மாநிலம்Flag of Perak.svg பேராக்
உருவாக்கம்கி.பி. 1900
ஏற்றம்56 m (183.7 ft)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mpm.gov.my/en

சங்காட் கெருயிங்' (மலாய்: Changkat Keruing; சீனம்:莫珍歪) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராம நகரம். ஆயர் தாவார் நகரத்திற்கும்; பந்தாய் ரெமிஸ் நகரத்திற்கும் இடையில் அமைந்து உள்ளது.

டிண்டிங் ஆறு இந்தக் கிராமத்தைக் கடந்து செல்கிறது. இந்த கிராமத்தில் பெரும்பான்மையான இனத்தவர்கள் சீனர்கள்.

பொது[தொகு]

எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள்[தொகு]

1990-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்தவர்களில் பெரும்பாலோர் ரப்பர் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு இருந்தார்கள். இருப்பினும் அண்மைய ஆண்டுகளில் எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள் அதிகம் காணப் படுகின்றன. வெளிநாட்டுத் தொழிலாளர்களை உள்ளூர் மக்கள் வேலைக்கு அமர்த்தி உள்ளனர்.

உள்ளூர்வாசிகள் பலர் எண்ணெய்ப் பனை அறுவடை செய்வதில் இருந்து பெரும் செல்வந்தர்களாக மாறி உள்ளனர். சங்காட் கெருயிங்கைச் சுற்றியுள்ள நிலத்தின் விலை 2000-ஆம் ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்து உள்ளது.

நடமாடும் மருத்துவமனை வாகனம்[தொகு]

இந்தக் கிராமத்திற்கு 2017-ஆம் ஆண்டில் ஒரு நடமாடும் மருத்துவமனை வாகனம் வழங்கப் பட்டது. கிராமங்களின் உட்புறத்தில் வாழும் மக்களுக்கு இந்த நடமாடும் மருத்துவமனை பேருதவியாக அமைகிறது.

கிராம மக்கள் சில இடங்களில் 20 கி.மீ. உட்புறங்களில் வாழ்கிறார்கள். அருகில் இருக்கும் ஆயர் தாவார் மருத்துவமனைக்கு வருவதற்குச் சிரமப் படுகிறார்கள். அதனால் இந்த நடமாடும் மருத்துவமனை வாகனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.[1]

மிகத் தூய்மையான கிராமம்[தொகு]

மலேசியக் கிராமங்களில் இந்தக் கிராமம் மிக அழகான மிகத் தூய்மையான கிராமங்களில் ஒன்றாகும். 1990-ஆம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்தின் தூய்மையான மற்றும் அழகான கிராமப் போட்டியில் சங்காட் கெருயிங் கிராமம் மூன்று முறை வெற்றி வாகை சூடி உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Changkat Keruing dah ada ambulans". 2021-05-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-05-10 அன்று பார்க்கப்பட்டது.
  2. Changkat Kruing New Village was three times champion in the Federal Government’s Clean and Beautiful campaign annual competition in the 1990s.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்காட்_கெருயிங்&oldid=3664096" இருந்து மீள்விக்கப்பட்டது