உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தாங் பாடாங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 4°05′N 101°20′E / 4.083°N 101.333°E / 4.083; 101.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தாங் பாடாங் மாவட்டம்
Daerah Batang Padang
பேராக்
பத்தாங் பாடாங் மாவட்டம் அமைவிடம் பேராக்
பத்தாங் பாடாங் மாவட்டம் அமைவிடம் பேராக்
Map
பத்தாங் பாடாங் மாவட்டம் Daerah Batang Padang பேராக் is located in மலேசியா
பத்தாங் பாடாங் மாவட்டம் Daerah Batang Padang பேராக்
பத்தாங் பாடாங் மாவட்டம்
Daerah Batang Padang
பேராக்
பத்தாங் பாடாங் மாவட்டம் அமைவிடம் Malaysia
ஆள்கூறுகள்: 4°05′N 101°20′E / 4.083°N 101.333°E / 4.083; 101.333
நாடு மலேசியா
தொகுதிதாப்பா
நகராட்சிதாப்பா மாவட்ட மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிசாரூல் அபென்டி பின் பகாருடின் (Shahrul Affendi bin Baharudin)
பரப்பளவு
 • மொத்தம்1,794.18 km2 (692.74 sq mi)
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்1,23,600
 • மதிப்பீடு 
(2015)
88,800
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
35000-35600
தொலைபேசி எண்+6-05
வாகனப் பதிவெண்A
பத்தாங் பாடாங் மாவட்டத்தின் வரைபடம்

பத்தாங் பாடாங் (மலாய்: Batang Padang) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். தாப்பா மாவட்ட மன்றம் (Tapah District Council) எனும் நகராட்சி மன்றத்தினால் நிர்வாகம் செய்யப்படுகிறது. தாப்பாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் பீடோர்; தாப்பா; சுங்கை.

2016 ஜனவரி 11-ஆம் தேதி, பத்தாங் பாடாங் மாவட்டத்தில் இருந்து முவாலிம் மாவட்டம் எனும் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் முன்பு இருந்த தஞ்சோங் மாலிம் துணை மாவட்டம்; புதிய முழு மாவட்டமாக மாற்றம் கண்டது.[1]

2007 ஆகஸ்ட் மாதம், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் பெரிய நீர்நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் மாநில அரசாங்கம் அறிவித்தது. அண்டை மாநிலமான சிலாங்கூர் மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறை பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் வகையில் நீர் விற்பனைக்குத் திட்டம் வகுக்கப் பட்டது.[2]

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

பத்தாங் பாடாங் மாவட்டம் 4 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[3]

மலேசிய நாடாளுமன்றம்

[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தில் பத்தாங் பாடாங் மாவட்ட பிரதிநிதிகளின் பட்டியல் (டேவான் ராக்யாட்) (2021). மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P72 தாப்பா டத்தோ எம். சரவணன் பாரிசான் நேசனல் (ம.இ.கா)
P77 தஞ்சோங் மாலிம் சாங் லீ காங் பாக்காத்தான் ராக்யாட்‎

பேராக் மாநில சட்டமன்றம்

[தொகு]

பேராக் மாநில சட்டமன்றத்தில் பத்தாங் பாடாங் மாவட்டப் பிரதிநிதிகள் (2021)

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P72 N47 செண்டிரியாங் அகமட் பைசால் அம்சு பெரிக்காத்தான் நேசனல்
P72 N48 ஆயர் கூனிங் சம்சுடின் பின் அபு ஹசான் பாரிசான் நேசனல் (அம்னோ)
P77 N57 சுங்கை சிவநேசன் அச்சலிங்கம் பாக்காத்தான் ஹராப்பான் (ஜ.செ.க)
P77 N58 சிலிம் ரீவர் முகமட் சைடி அசீஸ் பாரிசான் நேசனல் (அம்னோ)
P77 N59 பேராங் அமினுடின் ஜுல்கிப்லி ஹராப்பான் (அமானா)

பொது போக்குவரத்து

[தொகு]

இரயில் சேவை

[தொகு]

பத்தாங் பாடாங் மாவட்டத்தில் இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளன. அவை: தாப்பா தொடருந்து நிலையம் மற்றும் சுங்கை தொடருந்து நிலையம்.


மேற்கோள்கள்

[தொகு]
  1. Shamsul Kamal Amarudin (11 January 2016). "Muallim rasmi menjadi daerah ke-11 di Perak". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 2014-09-17.
  2. {web வலை | url = http: //www.utusan.com.my/berita/nasional/ langkah-segera-atasi-banjir-di-batang-padang-1.32346 | title = Langkah segera atasi banjir di Batang Padang | first = SAYED HESHAM | last = IDRIS}}
  3. பத்தாங் பாடாங் மாவட்டத்தின் 4 துணை மாவட்டங்கள்.

மேலும் காண்க

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாங்_பாடாங்_மாவட்டம்&oldid=3995709" இலிருந்து மீள்விக்கப்பட்டது