குரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குரோ
Kroh
高乌
குரோ - தாய்லாந்து எல்லையில் புக்கிட் பெராபிட் குடிநுழைவு (CIQS) மையம்
குரோ - தாய்லாந்து எல்லையில் புக்கிட் பெராபிட் குடிநுழைவு (CIQS) மையம்
நாடு மலேசியா
மாநிலம்Flag of Perak.svg பேராக்
உருவாக்கம்கி.பி. 1810
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mdph.gov.my/

குரோ அல்லது கெரோ (மலாய்: Kroh; Keroh) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், உலு பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இப்போது பெங்காலான் உலு (Pengkalan Hulu) என்று அழைக்கப் படுகிறது.

இந்த நகரத்திற்கு கிழக்கே கிரிக்; கோலாகங்சார் நகரங்கள்; வட மேற்கே பாலிங்; பெத்தோங் நகரங்கள் உள்ளன.

இந்த நகரம் தாய்லாந்து எல்லையில் அமைந்து உள்ள நகரம். அந்த வகையில் தாய்லாந்தின் யாலா மாநிலத்தில் உள்ள பெத்தோங் நகரம் 7 கி.மீ. அருகாமையில் உள்ளது. இங்கு மலாய்க்காரர்கள், சீனர்கள்; இந்தியர்கள் என மூவினத்தவருடன் தாய்லாந்து மக்களும் வாழ்கிறார்கள்.[1] [2]

வரலாறு[தொகு]

1900-ஆம் ஆண்டில் எடுத்த படம். ரேமான் அரசர்கள் நூற்றுக் கணக்கான யானைகளை வைத்து இருந்ததாக அறியப் படுகிறது. அவற்றைக் களத்திலும் இராணுவத்திலும் முதன்மையாகப் பயன்படுத்தினார்கள்.

குரோவின் வரலாறு கெடா மாநிலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்து இருந்த ரேமான் சிற்றரசின் (Kingdom of Reman) காலத்தில் தொடங்கியது. ரேமான் சிற்றரசின் ஆட்சிக் காலம் 1810 – 1902. அந்தக் காலக் கட்டத்தில் ரேமான் சிற்றரசு, தாய்லாந்து பட்டாணி மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தாய்லாந்து நாட்டின் ஆளுமை.[3]

இதே இந்தக் குரோவில் பிரித்தானியர்களுக்கும்; சயாமியர்களுக்கும்; பேராக் மாநில ஆட்சியாளர்களுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

கிளியான் இந்தான் படையெடுப்பு[தொகு]

1890-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநில ஆட்சியாளர்களுடன் ரேமான் சிற்றரசு தொடர்ச்சியான மோதல்களை மேற்கொண்டு வந்தது. ரேமான் மன்னர், பேராக் மாநிலத்தில் இருந்த கிளியான் இந்தான் மீது படையெடுத்தார். அந்தப் பகுதியில் இருந்த ஈயச் சுரங்கங்களைக் கைப்பற்றினார்.[4]

அது மட்டும் அல்ல. ஒரு கட்டத்தில் சயாமியக் கண்காணிப்பில் இருந்து விடுபட்டு தன்னாட்சி பெறுவதற்கான முயற்சிகளை ரேமான் சிற்றரசு மேற்கொண்டது. இதனால் சயாமிய அரசாங்கம் சினம் அடைந்தது.

ஆங்கிலோ - சயாமிய உடன்படிக்கை[தொகு]

1902-ஆம் ஆண்டில், ரேமான் அரசின் முடியாட்சியை ஒழிக்க சயாமிய அரசாங்கம் முடிவு கட்டியது. பயங்கரமான போர் நடந்தது. அந்தப் போரில் ரேமான் சிற்றரசை ஆட்சி செய்த இளவரசர் துவான் லேபே (Tuan Lebeh) கைது செய்யப் பட்டார். 20 ஆண்டுகள் பாங்காக் நகருக்கு அருகில் இருந்த சிங்கோராவில் சிறை வைக்கப் பட்டார்.[5]

1909-ஆம் ஆண்டில் ஆங்கிலோ - சயாமிய உடன்படிக்கை. அதன் பிறகு 1909 ஜூலை 16-ஆம் தேதி உலு பேராக் மாவட்டத்தின் வடக்கு பகுதி, குரோ நிலப்பகுதி மலாயா கூட்டாட்சியுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப் பட்டது.[6]

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 5°43′N 101°00′E / 5.717°N 101.000°E / 5.717; 101.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோ&oldid=3276200" இருந்து மீள்விக்கப்பட்டது