செலுபு மாவட்டம்

ஆள்கூறுகள்: 3°0′N 102°05′E / 3.000°N 102.083°E / 3.000; 102.083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செலுபு மாவட்டம்
Jelebu District
நெகிரி செம்பிலான்
செலுபு மாவட்டம் உட்பிரிவுகள்
செலுபு மாவட்டம்
உட்பிரிவுகள்
செலுபு மாவட்டம் is located in மலேசியா மேற்கு
செலுபு மாவட்டம்
செலுபு மாவட்டம்
செலுபு மாவட்டம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°0′N 102°05′E / 3.000°N 102.083°E / 3.000; 102.083
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
தொகுதிகோலா கிளவாங்
உள்ளூராட்சிசெலுபு உள்ளூராட்சி மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிசாருனிசாம் சாவன்[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்1,349.89 km2 (521.20 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்37,287
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு71600 - 71650
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N
இணையதளம்கோலா பிலா நகராண்மைக் கழகம்

செலுபு மாவட்டம் அல்லது ஜெலுபு மாவட்டம் என்பது (மலாய்: Daerah Jelebu; ஆங்கிலம்: Jelebu District; சீனம்: 日叻务县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.

செலுபு மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா கிளவாங் (Kuala Klawang) நகரம். இந்த மாவட்டத்தை ஜொலுபு மாவட்டம் (Jolobu District) என்று அழைப்பதும் உண்டு. இந்தச் செலுபு மாவட்டம், செம்போல் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நெகிரி செம்பிலான் மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய மாவட்டமாகும். விவசாயத் துறையை முதன்மையாகக் கொண்ட மாவட்டம்.

சிரம்பான் மாவட்டம்; செம்போல் மாவட்டம்; கோலா பிலா மாவட்டம்; பகாங் மாநிலம்; மற்றும் சிலாங்கூர் மாநிலம்; ஆகியவை செலுபு மாவட்டத்தின் எல்லைகளாக உள்ளன. செலுபு ஒரு புறநகர் மாவட்டம் ஆகும்.

வரலாறு[தொகு]

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் சுங்கை முன்தோ (Sungai Muntoh) எனும் செழிப்பான ஒரு ஈயச் சுரங்க நகரம் இருந்தது. அண்மையில் இங்கு விலைமதிப்பற்ற காலனித்துவ கலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கலைப் பொருட்கள் தற்போது அரசு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தச் செலுபு மாவட்டம், சில சோகமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உள்ளது. பிரித்தானியர் காலனித்துவ காலத்திலும்; ஜப்பானியர் ஆட்சிக் காலத்திலும்; இந்த மாவட்டத்தில் படுகொலைகள் நடந்து உள்ளன.

தித்தி படுகொலை[தொகு]

சுங்கை முன்தோ; தித்தி (Titi) ஆகிய இரு இடங்கள், செலுபு மாவட்டத்திலேயே சுரங்கத் தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்றவையாகும். 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கு ஈயம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சீனர்கள் பலர் கூலி வேலைகள் செய்ய அழைத்து வரப் பட்டனர்.

வேலைக்கு வந்தவர்கள் அங்கு ஒரு சிறிய கிராமத்தை நிறுவினார்கள். அதுதான் தித்தி கிராம நகரம். 1940-ஆம் ஆண்டுகளில், தித்தி நகரத்தில் ஈயச் சுரங்கத் தொழிலில் போட்டி, பகைமைகள். பல முறை குண்டர் வன்முறைகள் நிகழ்ந்து உள்ளன.

துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது, பல கிராமவாசிகள் படுகொலை செய்யப் பட்டனர். அந்தத் துயர் நிகழ்ச்சி தித்தி படுகொலை என்று அழைக்கப் படுகிறது.

ஜப்பானிய இராணுவத்தின் கொடுங்கோன்மை.[தொகு]

அந்தப் படுகொலையில் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலோர் சீனர்கள். சுமார் 1,474 பேர் கொல்லப்பட்டனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பாகுபாடு இல்லாமல் கொல்லப் பட்டனர். ஜப்பானியர் ஆட்சியில் ஜப்பானிய இராணுவத்தின் கொடுங்கோன்மை.[3]

நிர்வாகம்[தொகு]

செம்புல் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்[தொகு]

செல்பு மாவட்டம், செலுபு உள்ளூராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது. செலுபு மாவட்டத்தில் 8 முக்கிம்கள் உள்ளன.

 1. கிளாமி லெமி (Glami Lemi)
 2. கெனபாய் (Kenaboi)
 3. கோலா கிளவாங் (Kuala Klawang)
 4. பெராடோங் (Peradong)
 5. பெர்த்தாங் (Pertang)
 6. திரியாங் ஹீலிர் (Triang Hilir)
 7. உலு கிளவாங் (Ulu Klawang)
 8. உலு திரியாங் (Ulu Triang)

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோலா பிலா மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கட்சி
P129 ஜெலுபு சலாலுடின் அலியாஸ் பாரிசான் நேசனல் (அம்னோ)

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தில் செலுபு மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[4][5]

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P126 N1 சென்னா லோக் சியூ பூக் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P126 N2 பெர்த்தாங் நோர் அசுமி யூசோப் பாரிசான் நேசனல் (அம்னோ)
P126 N4 கிளவாங் பக்ரி சவிர் பாக்காத்தான் ஹரப்பான் (அமானா)

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்[தொகு]

கோலா பிலா மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

நெகிரி செம்பிலான்; செலுபு மாவட்டத்தில் (Jelebu District) ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 58 மாணவர்கள் பயில்கிறார்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[6]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD0024 பெர்த்தாங் தோட்டம் SJK(T) Ldg Pertang[7] பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72300 சிம்பாங் பெர்த்தாங் 58 14

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://jelebu.ns.gov.my/pdtjel/my/. 
 2. "Laman Web Rasmi Pejabat Daerah Dan Tanah Jelebu - Profil Daerah Jelebu". http://jelebu.ns.gov.my/pdtjel/my/profil-daerah-jelebu/book/3/1?page=2. 
 3. "Massacre in Titi - On 18 March 1942 (Lunar calendar Feb 2) the Japanese army massacred 1,474 men, women and children from the village then burnt down all the houses.". http://www.atrocityinns.net/masacretiti.html. பார்த்த நாள்: 15 December 2021. 
 4. "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் - 2018". http://www.spr.gov.my/. 
 5. "Federal Government Gazette - Notice of Polling Districts and Polling Centres for the Federal Constituencies and State Constituencies of the States of Malaya [P.U. (B) 197/2016"]. Attorney General's Chambers of Malaysia. 29 April 2016. http://www.federalgazette.agc.gov.my/outputp/pub_20160429_P.U.(B)197.pdf. 
 6. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file. பார்த்த நாள்: 2021-12-06. 
 7. "பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ldg Pertang" (in en). https://www.facebook.com/SJKT-Ladang-Pertang-199697633895659/. பார்த்த நாள்: 28 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=செலுபு_மாவட்டம்&oldid=3710815" இருந்து மீள்விக்கப்பட்டது