கோலாகங்சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோலாகங்சார்
Kuala Kangsar
அரச நகரம்
Official seal of கோலாகங்சார்
Seal
Motto: Membina Kehidupan Berkualiti
தரமான வாழ்க்கை வளர்ப்போம்
கோலாகங்சார் is located in Malaysia
கோலாகங்சார்
கோலாகங்சார்
ஆள்கூறுகள்: 4°46′N 100°56′E / 4.767°N 100.933°E / 4.767; 100.933ஆள்கூறுகள்: 4°46′N 100°56′E / 4.767°N 100.933°E / 4.767; 100.933
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம் கோலாகங்சார்
அரசாங்க
 • முறை நகராண்மைக் கழகம்
 • மேயர் டத்தோ ஹாஜி முகமட் சாபி அரிபின்
 • நகராண்மைச் செயலாளர் அப்துல் காயிர் ஹாஜி அகமட்
 • சிறப்புச் செயலாளர் புவான் நோர்சாய்புல் சுராய்டா
பரப்பு
 • மொத்தம் 204.94
மக்கள் (2010)
 • மொத்தம் 39,331.
 • அடர்த்தி 752
Postal code 31050
மலர் Canna Generalis
Website www.mpkkpk.gov.my


கோலாகங்சார் மலேசியா பேராக் மாநிலத்தின் வரலாறு படைத்த அரச நகரம். இங்கேதான் மலேசியாவின் முதல் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் ஹெச்.என்.ரிட்லி முதல் ரப்பர் கன்றை நட்டு உலக ரப்பர் ஏற்றுமதியில் மலேசியாவை முதல் நிலைக்கு கொண்டு வந்தார். இந்த நகரத்தின் மக்கள் தொகை 39,331.[1]

கோலாகங்சார் நகரம் கங்சார் நதிக் கரையோரம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த நதி பேராக் பெருநதியுடன் கலக்கின்றது. 1877-1887 ஆண்டுகளில் பேராக் மாநிலத்தை ஆட்சி செய்தவர் சுல்தான் யூசுப் சரிபுடின் முசபர் ஷா. இந்தச் சுல்தான் தான் கோலாகங்சார் அரச நகரத்தை உருவாக்கினார்.

வரலாறு[தொகு]

இஸ்கந்திரியா புதிய அரண்மனை.
இஸ்தானா கெனாங்கான் பழைய அரண்மனை.
உபைதுல்லா பள்ளிவாசல்.
சாயோங் பாலம்.

பொதுவாக, மலாய் அரசர்கள் உயரமான இடங்களில் தங்களின் நகரங்களை உருவாக்கி வந்துள்ளனர். ஆனால், சுல்தான் யூசுப் ஒரு நதிக் கரையோரம் தன் நகரத்தை உருவாக்கினார். அதற்கு ஸ்ரீ சாயோங் என பெயர் சூட்டினார்.

பேராக் மாநிலக் காடுகளில் வருடம் முழுமையும் மழை பெய்யும். தவிர பருவமழைக் காலங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். 1926 ஆம் ஆண்டு கடும் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் கோலாகங்சார் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

இஸ்கந்திரியா அரண்மனை[தொகு]

அதில் பேராக் சுல்தானின் அரண்மனை பெரிதும் பாதிக்கப் பட்டது. அதனால் அந்த அரண்மனை சற்று உயரமான இடத்திற்கு மாற்றப் பட்டது. அதற்கு இஸ்கந்திரியா அரண்மனை என பெயர் சூட்டப்பட்டது.

பேராக் சுல்தான் அதிகாரப்பூர்வமாகத் தங்கும் இடம் கோலாகங்சார். 18ஆம் நூற்றாண்டில் இருந்து சுல்தான்கள் இந்த நகரில் தங்கி தான் ஆட்சி செய்து வந்தனர். பிரித்தானியர்கள் பேராக் மாநிலத்தை நிர்வாகம் செய்யும் போது கூட கோலாகங்சார் நகரம் தான் அவர்களின் நிர்வாகத் தளமாகவும் விளங்கியது.

பேராக் மாநிலத்தின் முதல் பிரித்தானிய ஆளுநர் ஜேம்ஸ் பர்ச் 1874 ஆம் ஆண்டு கோலாகங்சார் நகரத்தில் இருந்து நிர்வாகம் செய்து வந்தார். இவர் 1875 நவம்பர் 2ஆம் தேதி பாசீர் சாலாக் எனும் இடத்தில் மலாய்த் தீவிரவாதிகளால் கொலை செய்யப் பட்டார்.

சுல்தான்களின் முதல் மாநாடு[தொகு]

1897ல் மலாய் சுல்தான்களின் முதல் மாநாடு இங்கு நடைபெற்றது. 1890களில் ஈப்போ, தைப்பிங் நகரங்களில் ஈய உற்பத்தி வளர்ச்சி கண்டதும் கோலாகங்சார் நகரமும் புகழ் பெறத் தொடங்கியது. அன்றில் இருந்து இன்று வரை கோலாகங்சார் அழகு வாய்ந்த ஓர் அரச நகரமாகப் புகழ் பெற்று வளர்ச்சி கண்டு வருகிறது.

கோலாகங்சார் நகரத்தில் தான் மலேசியாவில் முதன் முதலில் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் ஹென்றி நிக்கலஸ் ரிட்லி என்பவர் முதல் ரப்பர் கன்றை நட்டார்.

உலக ரப்பர் உற்பத்தி ஏற்றுமதியில் மலேசியாவை முதன்மை படுத்தி முதல் நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். அவர் நட்ட அந்த ரப்பர் மரம் வளர்ந்து இன்று வரை கோலாகங்சார் நகரில் காட்சி அளிக்கின்றது. கோலாகங்சார் நகரத்திற்கு வருபவர்கள் அந்த மரத்தைப் பார்க்காமல் செல்வது இல்லை.

இந்த ரப்பர் மரம் மலேசியாவின் ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது. பார்க்க வருபவர்கள் அதைத் தொட்டுத் தடவிப் பார்ப்பதைத் தடுக்க மரத்தைச் சுற்றிலும் வேலி அமைக்கப் பட்டுள்ளது.

மலேசியாவின் இந்த முதல் ரப்பர் மரத்திற்கு இப்போது வயது 100க்கும் மேல் ஆகிறது.

மக்கள் உறுப்பினர்கள்[தொகு]

மலேசிய நாடாளுமன்றம்

 • P.067 கோலாகங்சார் - டான்ஸ்ரீ ரபீடா அசீஸ் (Barisan Nasional பாரிசான் நேஷனல்)


பேராக் மாநிலச் சட்டமன்றம்

 • N.34 புக்கிட் சாண்டான் - வான் முகமட் காயிரில் அனுவர் (Barisan Nasional பாரிசான் நேஷனல்)
 • N.35 மானோங் - டத்தோ ரம்லி ஜஹாரி (Barisan Nasional பாரிசான் நேஷனல்)

கோலாகங்சார் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

சுங்கை சிப்புட் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி
கோலாகங்சார் காந்தி நினைவு தமிழ்ப்பள்ளி.
சுங்கை சிப்புட் காந்தி கலாசாலை
 • காந்தி நினைவுப்பள்ளி, கோலாகங்சார்[1]
 • சுங்கை பூயோங் தமிழ்ப்பள்ளி, சாவுக், கோலாகங்சார்[2]
 • காத்தி தமிழ்ப்பள்ளி, காத்தி, சாவுக், கோலாகங்சார்[3]
 • காப்பிஸ் தமிழ்ப்பள்ளி, பாடாங் ரெங்காஸ், கோலாகங்சார்
 • பேராக் ரிவர் தமிழ்ப்பள்ளி, பாடாங் ரெங்காஸ், கோலாகங்சார்
 • எங்கோர் தமிழ்ப்பள்ளி, எங்கோர், கோலாகங்சார்[4]
 • மகாத்மா காந்தி கலாசாலை, சுங்கை சிப்புட்[5]
 • சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட்
 • துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட் தோட்டம், சுங்கை சிப்புட்[6]
 • எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட்[7]
 • சுங்கை ரெய்லா தமிழ்ப்பள்ளி, சுங்கை சிப்புட்

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

கோலாகங்சார் ஓர் அமைதியான நகரம். மற்ற மலேசிய நகரங்களைப் போன்று பரபரப்பு இல்லாத ஓர் அழகான நகரம். உணவுப் பொருட்களின் விலையும் குறைவு. மகிழ்ச்சியுடன் பொழுது போக்க விரும்புகிறவர்கள் இந்த நகரத்திற்கு வருகின்றனர்.

 • உபைதுல்லா பள்ளிவாசல்
 • அரச புனித சமாதி
 • இஸ்தானா கெனாங்கான் (பழைய அரண்மனை)
 • இஸ்தானா இஸ்கந்திரியா (அரச அரண்மனை)
 • விக்டோரியா பாலம் (1900ல் கட்டப் பட்டது)
 • இஸ்கந்தர் பாலம்
 • அப்துல் ஜாலில் பாலம்
 • கிரிஸ் நினைவாலயம்
 • புக்கிட் சாண்டான்
 • முதல் இரப்பர் மரம்
 • கோலாகங்சார் மலாய்க் கல்லூரி
 • கிளிபர்ட் ஆங்கிலப் பள்ளி
 • எங்கோர் கைவினை மையம்

படத் தொகுப்பு[தொகு]

சான்றுகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

 1. http://www.mpkkpk.gov.my/home
 2. http://www.asiaexplorers.com/malaysia/kuala_kangsar_travel_guide.htm
 3. http://www.journeymalaysia.com/MC_kkangsar.htm
 4. http://www.sjktgm.pkgtalang.com/
 5. http://www.ppdkualakangsar.edu.my/
 6. http://www.peraktourism.com/about/detail.cfm?select=kualakangsar
"http://ta.wikipedia.org/w/index.php?title=கோலாகங்சார்&oldid=1784849" இருந்து மீள்விக்கப்பட்டது