இலிம்பாங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 4°15′0.00″N 115°10′0.01″E / 4.2500000°N 115.1666694°E / 4.2500000; 115.1666694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லிம்பாங் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலிம்பாங் மாவட்டம்
Limbang District
சரவாக்
Location of இலிம்பாங் மாவட்டம்
இலிம்பாங் மாவட்டம் is located in மலேசியா
இலிம்பாங் மாவட்டம்
      இலிம்பாங் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 4°15′0.00″N 115°10′0.01″E / 4.2500000°N 115.1666694°E / 4.2500000; 115.1666694
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுஇலிம்பாங் பிரிவு
மாவட்டம்இலிம்பாங் மாவட்டம்
நிர்வாக மையம்இலிம்பாங் நகரம்
மாவட்ட அலுவலகம்இலிம்பாங்
உள்ளாட்சிலிம்பாங் மாவட்ட மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்3,978.10 km2 (1,535.95 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்90,990
 • அடர்த்தி23/km2 (59/sq mi)
இனக்குழுக்கள்
 • புரூணை மலாய்; கெடாயான்30.3%
 • இபான்24.7%
 • சீனர்கள்21.3%
 • இதர மக்கள்23.7%
மலேசிய அஞ்சல் குறியீடு98700
மலேசியத் தொலைபேசி எண்கள்+60-85
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்QL
உரிமை கோரல்புரூணை
இணையதளம்www.limbang.sarawak.gov.my

இலிம்பாங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Limbang; ஆங்கிலம்: Limbang District; சீனம்: 林梦县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; இலிம்பாங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.[1]

இந்த மாவட்டத்தின் மேற்கு மற்றும் கிழக்கில் புரூணை நாடு (Brunei Darussalam); தென்கிழக்கில் லாவாசு மாவட்டம் (Lawas District); தெற்கு மற்றும் தென்மேற்கில் மிரி மாவட்டம் (Miri District) ஆகிய நிலப் பகுதிகள் எல்லைகளாக உள்ளன.

புரூணையின் வடக்குப் பகுதியும் மற்றும் கடலோரப் பகுதிகளும் லிம்பாங் மாவட்டத்துடன் மிக நெருக்கமாக இருப்பதால், குடியேற்றச் சாவடிகளின் வழியாக மட்டுமே லிம்பாங் பகுதிகளை அணுக முடியும்.

வரலாறு[தொகு]

லிம்பாங் மாவட்டம்; புரூணை சுல்தானகத்தை இரண்டாகப் பிரிக்கின்றது. இந்த லிம்பாங் நிலப்பகுதி, புரூணை சுல்தானகத்தால் ஆளப்பட்ட போது, அதை புரூணையின் "அரிசிக் கிண்ணம்" (Rice Bowl of Brunei) என்று அழைத்தார்கள்.

இலிம்பாங் மாவட்டம்; புரூணை சுல்தானகத்திற்கு சவ்வரிசி மற்றும் அரிசியை வழங்கி வந்த ஒரு பெரிய வேளாண் பகுதியாகும். வெள்ளை ராஜா சார்லஸ் புரூக் (Charles Anthoni Johnson Brooke) என்பவர், 1890-ஆம் ஆண்டில், லிம்பாங்கைக் கைப்பற்றுவதற்கு லிம்பாங் மாவட்டத்தின் நெல் சாகுபடியே முக்கியக் காரணியாக இருந்தது.

சார்லஸ் புரூக்[தொகு]

சார்லஸ் புரூக் என்பவர் வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில் இரண்டாவது மன்னராக சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்; 1868 ஆகஸ்டு 3-ஆம் தேதி தொடங்கி 1917 மே 17-ஆம் தேதி வரையில் 49 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[2]

1853 மற்றும் 1868-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சார்லஸ் புரூக், சரவாக்கின் துவான் மூடா பதவியில் இருந்தவர். 1868-ஆம் ஆண்டில் சரவாக் ராஜா என்கிற பட்டத்தைப் பெற்றார்.

இலுண்டு (Lundu) என்று முன்பு அழைக்கப்பட்ட கூச்சிங் பிரிவின் ஆளுநர் பதவியை (Resident at Lundu) சார்லஸ் புரூக் ஏற்றார். அதன் பின்னர் 1868-ஆம் ஆண்டில், சரவாக் இராச்சியத்தின் மன்னராக நியமிக்கப்பட்டார்.[3]

மலேசியா புரூணை எல்லை பிரச்சினை[தொகு]

லிம்பாங் மாவட்டத்தின் வரைபடம்

சரவாக்கின் இரண்டாவது மன்னரான (Rajah of Sarawak) சார்லஸ் புரூக் 1890-இல் புரூணை சுல்தானகத்தில் இருந்து லிம்பாங் நிலப்பகுதியைக் கைப்பற்றி, சரவாக்கின் ஐந்தாவது பிரிவாக (Fifth Division of Sarawak) இணைத்தார். இந்த இணைப்பு புரூணை சுல்தானகத்தால் இன்று வரையிலும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகிறது.[4]

இப்போதைய நடைமுறை புரூணை-மலேசியா எல்லை (Brunei–Malaysia Border) எல்லையானது (De Facto Boundary); லிம்பாங் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் புரூணை ஆறு, லிம்பாங் ஆறு மற்றும் கிழக்குப் பகுதியில் பாண்டருவான் ஆறு (Pandaruan River) ஆகிய ஆறுகளின் ஆற்றுப் படுகைகளில் செல்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை ஒப்பந்தங்கள் புரூணை-மலேசியா எல்லையை வரையறுத்துள்ளன.[5]

புரூணையின் உரிமை கோரிக்கை[தொகு]

1890-இல் வெள்ளை ராஜா சார்லஸ் புரூக், லிம்பாங் பகுதியை சரவாக்குடன் இணைத்தக் கட்டத்தில் இருந்து புருணை, அந்தப் பகுதியை உரிமை கோரி வருகிறது. மற்றும் அதன் ஒருங்கிணைந்த பிரதேசத்தின் ஒரு பகுதியாக 1967-ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகவும் உரிமை கோரி வருகிறது.

இலிம்பாங் மாவட்டம், புரூணையை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதால் (Limbang separates Brunei territorially into two parts), அதுவே புரூணை-மலேசியா எல்லைப் பிரச்சினைகளின் (Brunei–Malaysia Border Disputes) முக்கியப் பிரச்சினையாக விளங்குகிறது. 2009-ஆம் ஆண்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதாக புரூணை ஊடகங்கள் தெரிவித்தன.[6]

எவ்வாறாயினும், இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது இந்த பிரச்சினை ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று புரூணையின் இரண்டாவது வெளியுறவு அமைச்சர் (Bruneian Second Minister of Foreign Affairs) லிம் சொக் செங் (Lim Jock Seng) மறுத்து உள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Portal Rasmi Pentadbiran Bahagian Limbang". limbang.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
  2. "Charles Brooke, who ruled from 1868 until his death in 1917, the territory of Sarawak was extended to include Baram (1881), Limbang (1890) and Lawas (1905), and to its present boundaries". sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
  3. "Tuan Muda of Sarawak between 1853 and 1868. He gained the title of HH The Rajah of Sarawak in 1868. He held the office of Rajah of Sarawak between 1868 and 1917. He was appointed Knight Grand Cross, Order of St. Michael and St. George (G.C.M.G.)". www.thepeerage.com. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
  4. the CIA World Factbook
  5. Ahmad Fauzi, Nordin (2006). Land and River Boundary Demarcation and Maintenance – Malaysia's Experience. Working paper at International Symposium on Land and River Demarcation and Maintenance in Support of Borderland Development. http://www.dur.ac.uk/resources/ibru/conferences/thailand/malaysia.pdf. பார்த்த நாள்: 11 April 2008. 
  6. R. Haller-Trost (1994). The Brunei-Malaysia Dispute Over Territorial and Maritime Claims in International Law. IBRU. பக். 20–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-897643-07-5. https://books.google.com/books?id=ZMJYOA6g_dYC&pg=PA20. 

இவற்றையும் பார்க்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிம்பாங்_மாவட்டம்&oldid=3650294" இலிருந்து மீள்விக்கப்பட்டது