தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°18′N 100°10′E / 5.300°N 100.167°E / 5.300; 100.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்மேற்கு
பினாங்கு தீவு மாவட்டம்
Southwest Penang Island District
பினாங்கு
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
Map
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் is located in மலேசியா
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
      தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°18′N 100°10′E / 5.300°N 100.167°E / 5.300; 100.167
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்தென்மேற்கு பினாங்கு தீவு
தொகுதிபாலிக் புலாவ்
பெரிய நகரம்பாயான் லெப்பாஸ்
அரசு
 • உள்ளூராட்சிபினாங்கு தீவு மாநகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்175 km2 (68 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்1,97,131
 • அடர்த்தி1,126.5/km2 (2,918/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு110xx, 119xx
மலேசியத் தொலைபேசி எண்கள்+604
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்P

தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் (ஆங்கிலம்: Southwest Penang Island District; மலாய்: Daerah Barat Daya Pulau Pinang; சீனம்: 西南县); ஜாவி: دايره بارت داي ڤولاو) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் பெரும் நகரமாக பாயான் லெப்பாஸ் நகரம் உள்ளது.

இந்த மாவட்டம் பினாங்குத் தீவின் தென்மேற்குப் பகுதியில் பாதியை உள்ளடக்கியது; மற்றும் கிழக்குப் பகுதியில் வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் எல்லையாக உள்ளது.

இது 175 km2 (68 sq mi) பரப்பளவைக் கொண்ட மாநிலம். மற்றும் 2010-ஆம் ஆண்டு நிலவரப்படி இதன் மக்கள்தொகை 197,131. இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக பாலிக் புலாவ் நகரம் உள்ளது. பாயான் லெப்பாஸ் நகரம் இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும்.[2]

வரலாறு[தொகு]

1786-ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (British East India Company), பினாங்குத் தீவின் கட்டுப்பாட்டைத் தன்னகப் படுத்தியது. பினாங்குத் தீவின் வடகிழக்கு முனையில் ஜார்ஜ் டவுன் நகரத்தை நிறுவியது.[3][4]

அதன் பின்னர் பல பத்தாண்டுகளாக, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து பினாங்குத் தீவு நேரடியாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அந்தக் கட்டத்தில், பினாங்கில் எந்த ஒரு நிர்வாகப் பிரிவும் அமைக்கப்படவில்லை.

பாலிக் பூலாவ்[தொகு]

1888-ஆம் ஆண்டில், பினாங்குத் தீவின் தென்மேற்கில் உள்ள பாலிக் புலாவ் பகுதியில் ஒரு மாவட்டமும்; ஒரு நில அலுவலகமும் நிறுவப்பட்டது. இவ்வாறு தான், தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அந்த வகையில், அப்போதையக் காலக்கட்டத்தில், பினாங்கு தீவு இரண்டு பெரும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இரண்டு மாவட்டங்களும் 1890-ஆம் ஆண்டுகளில் பினாங்கின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் காட்சிப்படுத்தபட்டு இருந்தன.[5]

புவியியல்[தொகு]

இந்தத் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்; பினாங்குத் தீவின் தெற்குப் பகுதியையும் மற்றும் பினாங்குத் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள மத்திய மலைத் தொடர்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. மாவட்டத்தின் கீழ் பின்வரும் நகரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

நகரங்கள்[தொகு]

குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராமங்கள்[தொகு]


தென்மேற்கு பினாங்குத் தீவு மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

மலேசியா; பினாங்கு; தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (North Seberang Perai District); 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 201 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD3031 பாயான் லெப்பாஸ் SJK(T) Bayan Lepas[7][8] பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி 11900 பாயான் லெப்பாஸ் 89 14
PBD3032 சுங்கை ஆரா SJK(T) Sungai Ara[9] சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி 11900 பாயான் லெப்பாஸ் 111 14

பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profil Daerah". ptj.johor.gov.my. Archived from the original on 2021-10-19. பார்க்கப்பட்ட நாள் 2022-04-16.
  2. "George Town meliputi 'pulau', jelas Datuk Bandar". Buletin Mutiara. 1 May 2015. http://www.buletinmutiara.com/download/2015/BuletinMutiaraMay12015-BM.pdf. 
  3. "Latar Belakang". dbd.penang.gov.my. Archived from the original on 2018-01-25. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
  4. Mohd Nasser bin Malim. "Perubahan Pentadbiran Daerah dan Tanah di Balik Pulau, Pulau Pinang 1888 - 1956". University of Science, Malaysia. http://eprints.usm.my/31804/1/MOHD_NASSER_BIN_MALIM_24(NN).pdf. 
  5. "Map of Pinang Island and Province Wellesley,1897". nas.gov.sg. Archived from the original on 2021-11-30. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
  6. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
  7. "SPBT SJKT BAYAN LEPAS - பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
  8. KumaraN, குமரன். "பினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீனப் புத்தாண்டு அன்பளிப்பு - அநேகன்". பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.
  9. "BAYAN LEPAS: SJKT Sungai Ara's efforts to instill United Nations Sustainable Development Goals in its various school activities has earned it a recognition from the Education Ministry". பார்க்கப்பட்ட நாள் 15 April 2022.

வெளி இணைப்புகள்[தொகு]