டுங்குன் மாவட்டம்

ஆள்கூறுகள்: 4°15′N 103°10′E / 4.250°N 103.167°E / 4.250; 103.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டுங்குன் மாவட்டம்
Dungun District
 திராங்கானு
டுங்குன் மாவட்டத்தின் கடற்கரை
Location of டுங்குன் மாவட்டம்
Map
டுங்குன் மாவட்டம் is located in மலேசியா
டுங்குன் மாவட்டம்
      டுங்குன் மாவட்டம்
ஆள்கூறுகள்: 4°15′N 103°10′E / 4.250°N 103.167°E / 4.250; 103.167
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம் டுங்குன்
மாவட்ட தகுதி1 சனவரி 1974
நகராட்சி தகுதி25 சூலை 2008
தொகுதிகோலா டுங்குன்
பரப்பளவு[1]
 • மொத்தம்2,735.03 km2 (1,056.00 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்2,15,000
 • அடர்த்தி79/km2 (200/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு23000

டுங்குன் மாவட்டம் (ஆங்கிலம்: Dungun District; மலாய்: Daerah Dungun; சீனம்: 龙运县; ஜாவி: دوڠون) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் தென்சீனக் கடலை ஒட்டிய மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா டுங்குன் (Kuala Dungun). 1940-ஆம் ஆண்டுகளில் டுங்குன் ஓர் இரும்புச் சுரங்க நகரமாக இருந்தது. மேற்கில் அமைந்துள்ள புக்கிட் பீசி (Bukit Besi) என்ற சிறிய நகரத்தில் இரும்புத் தாது எடுக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் டுங்குன் நகரமாக்ச் துறைமுகமாகச் செயல்பட்டது. அங்கு இருந்து இரும்புத் தாது கப்பல்களுக்கு மாற்றப்பட்டது.

சுரங்கத் தொழிலுக்கு பெயர் பெற்ற டுங்குன் (Dungun) மற்றும் புக்கிட் பீசி நகரங்கள், தொடருந்து பாதையால் இணைக்கப்பட்டு இருந்தன. அந்தத் தொடருந்து பாதை உள்நாட்டு கிராம மக்களுக்கும், வணிக செயல்பாடுகளுக்கும் பொது போக்குவரத்துச் சேவையை வழங்கி வந்தது.

பொது[தொகு]

1980-ஆம் ஆண்டுகளுடன் டுங்குன் நகரின் பொற்காலம் முடிந்தது. அங்கு இருந்த சுரங்கங்கள் படிப்படியாக மூடப்பட்டதால், சுரங்க நிறுவனம் அப்பகுதியை விட்டு வெளியேறியது; தொடருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. புக்கிட் பீசி இப்போது அரசாங்க நிதியுதவி பெற்ற செம்பனைத் தோட்டங்களுடன் பெயர் போடுகிறது.

பழைய பிரித்தானிய கட்டிடக்கலை (British Architecture) இப்போது இல்லை. இரும்புச் சுரங்கப் பகுதிக்கு பதிலாக பெல்டா (Felda Estate) தோட்ட வீடுகள் மற்றும் செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. டுங்குன் நகரம் இப்போது திராங்கானு மாநிலத்தில் மற்றொரு கடற்கரை நகரமாக விளங்குகிறது. ஒவ்வொரு வியாழன் தோறும் வாராந்திர இரவுச் சந்தை (Weekly Night Market) வணிகத்திற்காகத் திறக்கும் போது மட்டும் டுங்குன் நகரம் உயிர்பெறுகிறது.

டுங்குன் இரவுச் சந்தை[தொகு]

டுங்குன் இரவுச் சந்தை திராங்கானுவில் மிகப்பெரிய இரவு சந்தையாக அறியப்படுகிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள் இரவு சந்தையில் விற்கப்படுகின்றன. கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள் விலைகுறைந்த பொருட்களை வாங்குவதற்கு டுங்குன் நகரத்திற்கு வருகிறார்கள். இரவுச் சந்தை நகரின் நடுவில், பழைய தொடருந்து பாதையில் (Old Railway Line) நடைபெறுகிறது.

இப்போதைய காலக்கட்டத்தில், இன்னும் சில விவசாய குடும்பங்கள் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் டுங்குன் நகருக்கு அருகில் உள்ள கெர்த்தே (Kerteh) நகரத்தின் பெட்ரோலியத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

டுங்குன் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 • அபாங் (Abang)[2]
 • பெசோல் (Besol)
 • செங்காய் (Jengai)
 • செராங்காவ் (Jerangau)
 • கோலா டுங்குன் (Kuala Dungun)
 • கோலா பாக்கா (Kuala Paka)
 • கும்பால் (Kumpal)
 • பாசீர் ராஜா (Pasir Raja)
 • ராசாவ் (Rasau)
 • சூரா (Sura)
 • உலு பாக்கா (Hulu Paka)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டுங்குன்_மாவட்டம்&oldid=3750007" இருந்து மீள்விக்கப்பட்டது