உள்ளடக்கத்துக்குச் செல்

கபாசு தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபாசு தீவு
Pulau Kapas
கபாசு தீவின் நில அமைப்பு
புவியியல்
அமைவிடம்திராங்கானு
ஆள்கூறுகள்5°21′10.5″N 103°26′05″E / 5.352917°N 103.43472°E / 5.352917; 103.43472
மொத்தத் தீவுகள்2
நிர்வாகம்
மலேசியா

கபாசு தீவு (ஆங்கிலம்: Kapas Island; மலாய்: Pulau Kapas; ஜாவி: ڤولاو كاڤس<) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்திலுள்ள மாராங் நகருக்கு கிழக்கே 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். புலாவ் இயெமியா (Pulau Gemia) என்ற ஒரு சிறிய தீவு இதன் வடக்கில் அமைந்துள்ளது.[1]

தீவின் அளவு தோராயமாக 1.5 X 2.5 கி.மீ. (0.93 X 1.55 மைல்) ஆகும்.[2] மலாய் மொழியில் பருத்தித் தீவு (Cotton Island) என்ற பொருள் கொண்ட பெயரான புலாவ் காபாசு தீவு என்பது வெள்ளை கடற்கரைகளைக் குறிக்கிறது.

பொது[தொகு]

உலகின் அழகான தீவுகளில் கபாசு தீவும் ஒரு தீவாக அறியப்படுகிறது. பச்சை வெப்பமண்டல காடுகள், தெளிவான கடல் நீர், வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் சுற்றியுள்ள நீரில் பவளப் பாறைகள் போன்றவை கபாசு தீவின் ஈர்ப்பு அம்சங்களாகும். சிலவகையான கடல்நீர் விளையாட்டுகளுக்கு இந்தத் தீவு ஒரு சொர்க்கம் என்றும் அறியப்படுகிறது. மாராங் நகரத்தில் இருந்து படகு மூலம் இந்தத் தீவை அடையலாம்.[1]

கபாஆம்பிட்ரோமசு நத்தைகள் (Amphidromus Snails) பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் இடமாகவும் இந்தத் தீவு விளங்குகிறது. மற்ற அனைத்து நத்தைகளைப் போல் அல்லாமல், ஆம்பிட்ரோமசு அல்லது ஆம்பிட்ரோமைன் நத்தைகளின் (Amphidromine Snails) அமைப்பு பொதுவாக கடிகார திசையிலும் எதிர் எதிர்த் திசையிலும் அமைந்ததாக இருக்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Emmons, Ron (2013) [Originally published 2008]. DK Eyewitness Travel Guide: Malaysia & Singapore. DK. p. 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4093-8650-6.
  2. Damian Harper (December 2006). Malaysia, Singapore & Brunei. Ediz. Inglese. Lonely Planet. pp. 309–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74059-708-1.
  3. Schilthuizen, M., P. G. Craze, A. S. Cabanban, A. Davison, E. Gittenberger, J. Stone & B. J. Scott, 2007. Sexual selection maintains whole-body chiral dimorphism. Journal of Evolutionary Biology, 20: 1941-1949.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கபாசு தீவு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபாசு_தீவு&oldid=3746894" இலிருந்து மீள்விக்கப்பட்டது