பத்து ராகிட்

ஆள்கூறுகள்: 5°27′0″N 103°3′0″E / 5.45000°N 103.05000°E / 5.45000; 103.05000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து ராகிட்
Batu Rakit
 திராங்கானு
Map
ஆள்கூறுகள்: 5°27′0″N 103°3′0″E / 5.45000°N 103.05000°E / 5.45000; 103.05000
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம் கோலா நெருஸ்
ஊராட்சிகோலா திராங்கானு மாநகராட்சி
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு213xx
மலேசியத் தொலைபேசி+6-09-6
மலேசியப் போக்குவரத்து எண்T
இணையதளம்mds.terengganu.gov.my

பத்து ராகிட் (ஆங்கிலம்: Batu Rakit; மலாய்: Batu Rakit) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், கோலா நெருசு மாவட்டத்தில் (Kuala Nerus District) உள்ள ஒரு நகரம் ஆகும்.

கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள படகு வடிவ பாறை (Raft-shaped Rock) அமைப்புகளில் இருந்து பத்து ராகிட் அதன் பெயரைப் பெற்றது. பத்து ராகிட் பாறைகளின் மேற்பரப்பு உயர்ந்து; கடற்கரையில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு தெப்பம் போல் தெரியும்.

பொது[தொகு]

1942-ஆம் ஆண்டில், சப்பானிய இராணுவம் மலாயா மீது படையெடுத்தபோது (Invasion of Malaya by the Japanese Army), பத்து ராகிட் பாறைகளை பிரித்தானிய போர்க்கப்பல் என்று நினைத்து அவற்றின் மீது குண்டுகளை வீசியது.

பத்து ராகிட்டில் மனிதர்கள் குடியேற்றம் எப்போது நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ பதிவுகள் எதுவும் இல்லை. ஆனால் பத்து ராகிட் கடற்கரையில் உள்ள குடியிருப்பு; 1800-களின் முற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரு குழுவினரால் திறக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[1]

கோலா நெருசு மாவட்டம்[தொகு]

திராங்கானு மாநிலத்தில் மிகப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மாவட்டம் எனும் பெருமையும் இந்தக் கோலா நெருசு மாவட்டத்திற்கு உண்டு. 2014-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. முன்பு கோலா திராங்கானு மாவட்டம்|கோலா திராங்கானு மாவட்டத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது.

இதன் தலைநகரம் கோலா நெருசு நகரம். கோங் படாக், செபெராங் தாகிர், பத்து ராகிட் மற்றும் பத்து என்னாம் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். கோலா நெருசு மாவட்டத்தில் ரெடாங் தீவுக்கூட்டம (Redang archipelago) உள்ளது. ரெடாங் தீவு மற்றும் பினாங்கு தீவு (Pinang Island) ஆகியவை இரண்டும் முக்கிய தீவுகள். மக்கள் வசிக்கும் தீவுகள்.

மற்ற சிறிய தீவுகள் லிங் தீவு, எக்கோர் தெபு தீவு (Ekor Tebu Island), லீமா தீவு, பாகு தீவு, பாக்கு கெசில் தீவு, கெரெங்கா தீவு, மற்றும் கெரெங்கா கெசில் தீவு.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "There is no official record of the exact date of the opening of the settlement at Batu Rakit but it is believed that the settlement at Batu Rakit Beach was opened in the early 1800s by a group of people who carried out fishing activities". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 June 2023.
  2. "Terengganu". Department of Marine Park Malaysia – Terengganu. 30 July 2012. Archived from the original on 9 April 2015. பார்க்கப்பட்ட நாள் 23 March 2015.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_ராகிட்&oldid=3747278" இலிருந்து மீள்விக்கப்பட்டது