உள்ளடக்கத்துக்குச் செல்

செத்தியூ மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°35′N 102°45′E / 5.583°N 102.750°E / 5.583; 102.750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செத்தியூ மாவட்டம்
Setiu District
 திராங்கானு
Map
செத்தியூ மாவட்டம் is located in மலேசியா
செத்தியூ மாவட்டம்
      செத்தியூ மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°35′N 102°45′E / 5.583°N 102.750°E / 5.583; 102.750
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம் செத்தியூ
தொகுதிமாராங்
ஊராட்சிசெத்தியூ ஊராட்சி[1]
பரப்பளவு
 • மொத்தம்1,304.36 km2 (503.62 sq mi)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்61,700
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
22xxx
மலேசியத் தொலைபேசி+6-09-6
மலேசியப் போக்குவரத்து எண்T

செத்தியூ மாவட்டம் (ஆங்கிலம்: Setiu District; மலாய்: Daerah Setiu; சீனம்: 士兆县; ஜாவி: ستيو) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்தின் வடக்கில் பெசுட் மாவட்டம் (Besut District); தெற்கில் கோலா திராங்கானு மாவட்டம் (Kuala Terengganu District); கிழக்கில் கோலா நெருசு மாவட்டம் (Kuala Nerus District) மற்றும் தென்சீனக் கடல் (South China Sea) ஆகியவை எல்லைகளாக உள்ளன.

செத்தியூ மாவட்டம் திராங்கானு மாநிலத்தில் இரண்டாவது புதிய மாவட்டம்; மற்றும் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டமாகும். இதன் தலைநகரமான பண்டார் பரமேசுவரி (Bandar Permaisuri). இந்த மாவட்டத்தின் பொருளாதார மற்றும் வணிக மையமாகவும் செயல்படுகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள் மற்ற நகரங்கள் சாலோக் (Chalok), சுங்கை தோங் (Sungai Tong), குந்தோங் (Guntong) மற்றும் பெனாரிக் (Penarik).

சொல் பிறப்பியல்

[தொகு]

19-ஆம் நூற்றாண்டில் டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தினால் (Dutch East Indies) இந்தோனேசிய தீவுக்கூட்டங்கள் (Indonesian archipelago) கைப்பற்றப்பட்டன. அதன் விளைவாக அந்தப் பகுதியைச் சேர்ந்த தோக் செத்தியூ (Tok Setiu) எனும் பூகிஸ் (Bugis) தலைவர் ஒருவர் திராங்கானுவிற்கு குடிபெயர்ந்தார்.

அந்தக் கட்டத்தில் திராங்கானு சுல்தான்; பூகிஸ் தலைவர் தோக் செத்தியூவிற்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கோலா திராங்கானுக்கு வடக்கே அமைந்துள்ள சமவெளியில் ஒரு கிராமத்தைத் திறக்க அனுமதி வழங்கினார்.

வரலாறு

[தொகு]

1920-களின் முற்பகுதியில், திராங்கானுவில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப நாட்களில், செத்தியூ மாவட்டம் ஒரு சிறிய நிலப்பரப்புடன் இருந்தது. 1923 தொடங்கி 1935 வரை அண்டைய மாவட்டமான பெசுட் மாவட்டத்துடன் (Besut District) இணைக்கப்பட்டது. பின்னர் செத்தியூ மாவட்டம் ஒரு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது.

1935-ஆம் ஆண்டில் பெசுட் மாவட்டத்திற்கும் மாநில தலைநகரான கோலா திராங்கானு நகருக்கும் இடையே செத்தியூ மாவட்டம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. 1985-ஆம் ஆண்டில் அதன் தற்போதைய எல்லைகளைக் கொண்ட செத்தியூ மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டது.[4][5]

செத்தியூவில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் மலாய் இனத்தவர்கள். சிறுபான்மையினர் சீனர்கள், சயாமியர்கள் மற்றும் இந்தியர்கள். செத்தியூவில் உள்ள பெரும்பாலான மலாய்க்காரர்கள்; குறிப்பாக வடக்குப் பகுதியில் உள்ளவர்கள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியைப் பேசுகிறார்கள். இருப்பினும் செத்தியூவின் தெற்குப் பகுதியில் வசிப்பவர்கள் திராங்கானு மலாய் மொழியை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

பொது

[தொகு]

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

செத்தியூ மாவட்டம் 7 முக்கிம்கள் (Mukim) எனும் துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • சாலோக் (Chaluk)
  • குந்தோங் (Guntung)
  • உலு நெருசு (Hulu Nerus)
  • உலு செத்தியூ (Hulu Setiu)
  • மேராங் (Merang)
  • பந்தாய் (Pantai)
  • தாசிக் (Tasik)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Administrator. "Laman Web Rasmi Pejabat Daerah Dan Tanah Dungun". pdtsetiu.terengganu.gov.my.
  2. Administrator. "LATARBELAKANG DAERAH SETIU". pdtsetiu.terengganu.gov.my.
  3. "Pengenalan Daerah Dungun". pdtdungun.terengganu.gov.my. பார்க்கப்பட்ட நாள் 31 January 2021.
  4. "LATARBELAKANG DAERAH SETIU". Laman Web Rasmi Pejabat Daerah dan Tanah Setiu. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.
  5. "Daerah di Terengganu". Ganupedia. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செத்தியூ_மாவட்டம்&oldid=4034488" இலிருந்து மீள்விக்கப்பட்டது