சுக்காய்
சுக்காய் | |
---|---|
Chukai | |
திராங்கானு | |
சுக்காய், கெமாமான், திராங்கானு | |
ஆள்கூறுகள்: 4°15′N 103°25′E / 4.250°N 103.417°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | கெமாமான் |
தொகுதி | சுக்காய் |
உள்ளூராட்சி | கெமாமான் நகராண்மைக் கழகம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | சுசுமான் இப்ராகிம் (Jusman Bin Ibrahim)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 500 km2 (200 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,71,539 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 24xxx |
மலேசியத் தொலைபேசி | +6-09-8 |
மலேசியப் போக்குவரத்து எண் | T |
சுக்காய் அல்லது கெமாமான் நகரம், (ஆங்கிலம்: Chukai அல்லது Kemaman Town; மலாய்: Chukai அல்லது Bandar Kemaman; ஜாவி: چوكاي) என்பது மலேசியா, திராங்கானு, கெமாமான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். அத்துடன் இது ஒரு முக்கிம் ஆகும்.
சுக்காய் என்பது ஒரு மலாய் மொழிச் சொல். 'வரி' என்று பொருள். திராங்கானு மாநிலத்தின் தெற்குப் பகுதியில் மிகப்பெரிய நகரம் சுக்காய். இந்த நகரத்தைத் 'திராங்கானு மலாய்' (Terengganu Malay) எனும் திராங்கானு வட்டார வழக்கு மொழியில் Bando Mamang என்றும் அழைக்கிறார்கள்.
பொது
[தொகு]இந்தச் சுக்காய் நகரம், கெமாமன் ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் அமைந்து உள்ளது. முன்பு காலத்தில், குறிப்பாக பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில், கெமாமான் ஆற்றுப் போக்குவரத்துக்கு வரிகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில் இந்த நகரத்திற்கும் சுக்காய் எனப் பெயரிடப்பட்டது.
பகாங் மாநிலத்தின் தலைநகர் குவாந்தான்; மற்றும் திராங்கானு மாநிலத்தின் தலைநகர் கோலா திராங்கானு; இந்த இரு மாநிலங்களின் தலைநகரங்களுக்கு இடையே சுக்காய் நகரம் அமைந்துள்ளது.
கெமாமான் துறைமுகம்
[தொகு]எண்ணெய் நகரம் என சொல்லப்படும் கெர்த்தே நகருக்கு அருகாமையில் இருப்பதால், சுக்காய் நகரம் அந்த வட்டாரத்தின் முக்கிய வணிக மையமாக மாறியுள்ளது.
சுக்காய் நகரத்திற்கு அருகிலுள்ள கெமாமான் துறைமுகம் ஒரு மீன்பிடித் துறைமுகமாகவும்; திராங்கானு கடற்கரையில் இருந்து தென்சீனக் கடலில் உள்ள எண்ணெய்த் தளங்களுக்கான விநியோக மையமாகவும் செயல்படுகிறது.
செராத்திங் கடற்கரை
[தொகு]சுக்காய் நகரில் இருந்து, குறுகிய தூரத்தில் பல கடற்கரைகள் உள்ளன. மலேசியப் புகழ் செராத்திங் கடற்கரை (Cherating Beach) சுக்காய் நகர மையத்தில் இருந்து தெற்கே சுமார் 15 நிமிட பயணத்தில் உள்ளது. சுக்காய் நகருக்கு அருகிலுள்ள மற்ற இடங்கள்:
- மா தாயேரா ஆமைகள் சரணாலயம் (Ma’ Daerah Turtle Sanctuary Centre)[2]
- சுங்கை காக் யா மின்மினிப் பூச்சி வளாகம் (Sungai Kak Yah Firefly Watching)
- கோலா கெமாமான் மீனவக் கிராமம் (Kuala Kemaman Fishing Village)
- பக்காவ் திங்கி படகுச் சவாரி வளாகம் (Bakau Tinggi Recreational Area)
சுக்காய் காட்சியகம்
[தொகு]-
கெமாமான் நகராண்மைக் கழகம்
-
யோசுரி காசா வணிக மையம்
-
ஆய் பெங் உணவகம்
-
கெமாமான் அருங்காட்சியகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Organisation Chart of Kemaman Municipal Council".
- ↑ "The Ma' Daerah Turtle Sanctuary Centre is a hatchery and interpretation centre dedicated to the protection and conservation of sea turtles. The project aims to protect marine turtles in their natural habitat". 23 September 2008. பார்க்கப்பட்ட நாள் 17 May 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Kemaman District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.