பெர்கெந்தியான் தீவு

ஆள்கூறுகள்: 5°55′N 102°44′E / 5.917°N 102.733°E / 5.917; 102.733
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்கெந்தியான் தீவு
Perhentian Islands
பெர்கெந்தியான் தீவு Perhentian Islands is located in மலேசியா
பெர்கெந்தியான் தீவு Perhentian Islands
பெர்கெந்தியான் தீவு
Perhentian Islands
      பெர்கெந்தியான் தீவு
      மலேசியா
புவியியல்
அமைவிடம்தென்சீனக் கடல்
ஆள்கூறுகள்5°55′N 102°44′E / 5.917°N 102.733°E / 5.917; 102.733
தீவுக்கூட்டம்பெர்கெந்தியான் தீவுகள்
மொத்தத் தீவுகள்5
முக்கிய தீவுகள்பெர்கெந்தியான் பெசார்
(Perhentian Besar)
பெர்கெந்தியான் கெச்சில்
(Perhentian Kecil)
பரப்பளவு15.35 km2 (5.93 sq mi)
உயர்ந்த ஏற்றம்100 m (300 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை2000
பெர்கெந்தியான் கெச்சில்

பெர்கெந்தியான் தீவு (மலாய்: Pulau Perhentian; ஆங்கிலம்: Perhentian Islands) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின், பெசுட் மாவட்டத்தில், தென்சீனக் கடல் கடல்பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு.

இந்தத் தீவைச் சுற்றிலும் சில தீவுகள் இருப்பதால் பெர்கெந்தியான் தீவுகள் அல்லது பெர்கெந்தியான் தீவுக்கூட்டம் என்று அழைப்பதும் உண்டு. அவற்றுள் இரண்டு முக்கிய தீவுகள் உள்ளன.[1]


பொது[தொகு]

பெர்கெந்தியான் கெச்சில் தீவுக்கு அப்பால் சுசு டாரா (Virgin Milk), செரெங்கே (Serengeh) மற்றும் ராவா (Rawa) ஆகிய சிறிய தீவுகள் உள்ளன. இந்தத் தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை.

பெர்கெந்தியான் தீவுகள் திராங்கானு மாநிலத்தில் இருந்தாலும், இந்தத் தீவுகளில் வாழும் மக்கள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியைப் பேசுகிறார்கள். இருப்பினும் ஆங்கில மொழியும் பரவலாக பேசப் படுகிறது.

வரலாறு[தொகு]

மலாய் மொழியில் "பெர்கெந்தியான்" என்றால் "நிறுத்தும் இடம்" என்று பொருள். முன்பு காலத்தில் பாங்காக் மற்றும் மலேசியா இடையே வணிகர்களுக்கான வழிப் புள்ளியாக இந்தத் தீவுகள் விளங்கி உள்ளன.[2]

பல நூற்றாண்டுகளாக மீனவர்கள் இந்தத் தீவுகளில் வசித்து வருகின்றனர். இருப்பினும் இப்போது சுற்றுலாத் துறைதான் முக்கியப் பொருளாதார நடவடிக்கையாக விளங்குகின்றது.

ஐந்து தீவுகள்[தொகு]

பெர்கெந்தியான் தீவுக் கூட்டத்தில், பெர்கெந்தியான் பெசார் மற்றும் பெர்கெந்தியான் கெச்சில் ஆகிய இரண்டு முக்கிய தீவுகளைத் தவிர, மேலும் ஐந்து தீவுகள் உள்ளன. அந்த ஐந்து தீவுகளிலும் மக்கள் வசிக்கவில்லை.

1970-களில் வியட்நாமிய அகதிகள் எனும் படகு மக்கள் வந்து இறங்கிய தீவுகளில் பெர்கெந்தியான் தீவுக் கூட்டமும் ஒன்றாகும்.

பொருளாதாரம்[தொகு]

இயற்கைசார் சுற்றுலா, இந்தத் தீவுகளுக்கு பொருளாதார வளத்தை வழங்குகிறது. இரண்டு தீவுகளிலும் வெள்ளை பவள மணல் கடற்கரைகள் மற்றும் தெளிவான கடல்நீர்ப் பகுதிகள் உள்ளன.

பிரபலமான நீரடி நீந்தல் (Scuba Diving; Snorkelling) போன்ற கேளிக்கை நடவடிக்கைகளுக்கு சிறந்த இடமாக உள்ளது. தீவைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளுக்காக பல ஓய்வு விடுதிகள் உள்ளன.[3]

இயற்கை[தொகு]

பெரும்பாலான கடற்கரைப் பகுதிகள் ஆழமற்றவை. அதனால் திருக்கை மீன்கள், கணவாய் மீன்கள் மற்றும் கிளிமூக்கு மீன்கள் (Parrot Fish) நீந்திச் செல்வதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

பெர்கெந்தியான் தீவுகள் பல்வேறு வகையான இராட்சச உடும்புகள், விச சிலந்திகள், மரப் பல்லிகளுக்கு தாயகமாக உள்ளன. பவளப்பாறை நீர்நிலைகளில் கடல் ஆமைகள், கோமாளி மீன்கள் (Clown Fish), கணவாய் மீன்கள், நீல புள்ளித் திருக்கைகள் (Blue Spotted Rays) மற்றும் கருப்பு முனைச் சுறாக்கள் (Black Tipped Sharks) போன்றவை மிகச் சுதந்திரமாக வாழ்கின்றன.

பெர்கெந்தியான் தீவுகள் காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Perhentian Islands
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்கெந்தியான்_தீவு&oldid=3704464" இருந்து மீள்விக்கப்பட்டது