பண்டார் செரி பாண்டி

ஆள்கூறுகள்: 4°22′49.1736″N 103°19′37.524″E / 4.380326000°N 103.32709000°E / 4.380326000; 103.32709000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டார் செரி பாண்டி
Bandar Seri Bandi
 திராங்கானு
Map
பண்டார் செரி பாண்டி is located in மலேசியா
பண்டார் செரி பாண்டி
      பண்டார் செரி பாண்டி
ஆள்கூறுகள்: 4°22′49.1736″N 103°19′37.524″E / 4.380326000°N 103.32709000°E / 4.380326000; 103.32709000[1]
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம்கெமாமான்
நகரம் செத்தியூ
தொகுதிகெமாமான் மக்களவை தொகுதி
ஊராட்சிகெமாமான் நகராண்மைக் கழகம்[2]
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு24200
மலேசியத் தொலைபேசி+6-09
மலேசியப் போக்குவரத்து எண்T
இணையதளம்mds.terengganu.gov.my

பண்டார் செரி பாண்டி; (ஆங்கிலம்: Bandar Seri Bandi; மலாய்: Bandar Seri Bandi) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், கெமாமான் மாவட்டத்தில் (Kemaman District) உள்ள ஒரு நகரம் ஆகும்.[3]

திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 152 கி.மீ. தொலைவில் தெற்கில் உள்ளது. ஆனால் பகாங் மாநிலத்தின் தலைநகரமான குவாந்தான் மாநகரில் இருந்து 89 கி.மீ. தொலைவில் சற்று நெருக்கத்தில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஓர் அமைதியான கிராமப்புற நகரமாகும்.

பொது[தொகு]

பண்டார் செரி பாண்டி நகரத்திற்கு வடக்கில் பாக்கா, கோலா டுங்குன், மாராங் நகரங்கள் உள்ளன. தெற்கில் சுக்காய், பாலோக், குவாந்தான் நகரங்கள் உள்ளன.

இந்த நகரத்திற்கு அருகில், ஏறக்குறைய 9 கி.மீ. தொலைவில் பெனித்தி அருவி (Penitih Waterfalls) உள்ளது. இது ராசாவ் - கெர்த்தே (Rasau/Kertih) நிரந்தர வனப் பகுதியில் உள்ளது. சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரை மிகவும் பொருத்தமான பருவம் ஆகும்.

இங்குள்ள சுவாரசியமான நடவடிக்கைகளில் மகிழ்வுலா (Picnics) மற்றும் முகாமிடல் (Camping) ஆகியவை அடங்கும். பெனித்தி நீர்வீழ்ச்சியில் எட்டு நிலை நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒவ்வொரு தளத்திற்கும் வெவ்வேறு விவரக் குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு தளமும் வெவ்வேறு ஆழம் கொண்டது.

கெமாமான் மாவட்டம்[தொகு]

திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். கெமாமான் மாவட்டத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கில் டுங்குன் மாவட்டம் (Dungun District); தெற்கிலும் மேற்கிலும் பகாங் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தெற்கு நுழைவாயிலாக அமைகின்றது.

கெமாமான் மாவட்டத்தின் நிர்வாக மையம் மற்றும் முக்கியப் பொருளாதார மையம் சுக்காய் நகரம். திராங்கானு - பகாங் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார்_செரி_பாண்டி&oldid=3747224" இருந்து மீள்விக்கப்பட்டது