பீடோங் தீவு

ஆள்கூறுகள்: 5°37′N 103°4′E / 5.617°N 103.067°E / 5.617; 103.067
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீடோங் தீவு
உள்ளூர் பெயர்:
Bidong Island
பீடோங் கற்பாறைகள்
பீடோங் தீவு is located in மலேசியா
பீடோங் தீவு
பீடோங் தீவு
      பீடோங் தீவு
      மலேசியா
புவியியல்
அமைவிடம்தென்சீனக் கடல்
ஆள்கூறுகள்5°37′N 103°4′E / 5.617°N 103.067°E / 5.617; 103.067
தீவுக்கூட்டம்ரெடாங் தீவுக்கூட்டம்; மலேசியா
நிர்வாகம்

பீடோங் தீவு (மலாய்: Pulau Bidong அல்லது Pula Bidong; ஆங்கிலம்: Bidong Island; ஜாவி: ڤولاو بيدوڠ ) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தின், மாராங் மாவட்டத்தில், தென்சீனக் கடலில் அமைந்து உள்ள ஒரு தீவு. ஒரு சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.

மாராங் (Marang) கடற்கரை கிராமத்தில் இருந்து இந்தத் தீவிற்குச் செல்ல படகு வசதிகள் உள்ளன. மாராங் கடற்கரையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

பொது[தொகு]

1978-ஆம் ஆண்டு தொடங்கி 2005-ஆம் ஆண்டு வரையில், பீடோங் தீவு ஓர் அகதிகள் முகாமாக இருந்தது. ஒரு கட்டத்தில் 40,000 வியட்நாமிய அகதிகள் இந்தத் தீவின் முகாம்களில் தங்கி இருந்தனர். மொத்தம் சுமார் 250,000 அகதிகள் தங்கிச் சென்று உள்ளனர்.

பெரும்பாலான அகதிகள் பீடோங் தீவில் சில மாதங்கள் தங்கி, பின்னர் வெளிநாடுகளில் குடியமர்த்தப் பட்டனர்.[2]

ஏப்ரல் 30, 1975-இல், வியட்நாம் போர் ஒரு முடிவுக்கு வந்தது. அமெரிக்கா தென் வியட்நாமில் இருந்து வெளியேறியது. புதிய கம்யூனிஸ்டு ஆட்சி. மில்லியன் கணக்கான மக்கள் தென் வியட்நாமில் வெளியேற முயன்றனர்.

படகு மக்கள்[தொகு]

மே 1975-இல், 47 அகதிகளுடன் முதல் படகு வியட்நாமில் இருந்து மலேசியாவுக்கு வந்தது. அவர்கள் "படகு மக்கள்" என்று அழைக்கப்பட்டனர். வியட்நாமில் இருந்து வெளியேறிய படகு மக்களின் எண்ணிக்கை 1978-ஆம் ஆண்டு வரை குறைவாகவே இருந்தது.

1978 ஆகஸ்டு 8-ஆம் தேதி 121 வியட்நாமிய அகதிகளுடன் பீடோங் தீவு அதிகாரப் பூர்வமாக ஓர் அகதிகள் முகாமாக திறக்கப்பட்டது. முகாமின் கொள்ளளவு 4,500 என கூறப்பட்டது. ஆனால் சில சமயங்களில் 20 ஆயிரம் அகதிகள் வரை தங்கி இருக்கின்றனர்.

40,000 வியட்நாமிய அகதிகள்[தொகு]

1978-ஆண்டு பிற்பகுதியில், வியட்நாமில் இருந்து அகதிகள் படகுகள் வருவது கிட்டத்தட்ட தினசரி நிகழ்வாக இருந்தது. ஜனவரி 1979-இல், பீடோங் தீவில் 40,000 வியட்நாமிய அகதிகள் இருந்தனர்.[3]

வியட்நாமில் இருந்து தென்சீனக் கடல் வழிப்பாதை மிக மிக ஆபத்தானது. அகதிகளின் படகுகள் சிறியதாக இருந்தன. அதிக சுமை ஏற்றப் பட்டதாகவும் இருந்தன. பெரும்பாலும் கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டன.

கம்போடிய அகதிகள்[தொகு]

தென் வியட்நாமில் இருந்து தப்பி வந்த ஆயிரக்கணக்கான அகதிகள் கடலில் மூழ்கி இறந்தனர். அகதிகளாக வந்த பெண்களைப் பாலியல் வன்முறை செய்வதும்; கடத்திச் செல்வதும் வழக்கமாக இருந்தது. மலேசியாவும் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் வியட்நாமிய அகதிகள் தங்கள் கரைகளில் இறங்குவதைத் தவிர்க்க பற்பல முயற்சிகள் செய்தன.

வியட்நாமிய அகதிகளைத் தவிர, 1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கெமர் ரூச் ஆட்சியில் இருந்து தப்பித்து வெளியேறிய கம்போடிய அகதிகளுக்கும் இந்தத் தீவு அடைக்கலம் வழங்கியது.

1991-இல் பீடோங் தீவு அகதிகள் முகாம் மூடப்பட்டபோது, ​​சுமார் 250,000 அகதிகளை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு நாடுகள் ஏற்றுக் கொண்டன. மேலும் பலரை எந்த நாடும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக வியட்நாமுக்கு நாடு கடத்தப் பட்டனர்.

பீடோங் தீவு காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pulau Bidong
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீடோங்_தீவு&oldid=3715012" இருந்து மீள்விக்கப்பட்டது