ரெடாங் தீவு

ஆள்கூறுகள்: 5°46′30″N 103°0′54″E / 5.77500°N 103.01500°E / 5.77500; 103.01500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெடாங் தீவு
உள்ளூர் பெயர்:
Redang Island
ரெடாங் கடற்கரை
ரெடாங் தீவு is located in மலேசியா
ரெடாங் தீவு
ரெடாங் தீவு
      ரெடாங் தீவு       மலேசியா
புவியியல்
அமைவிடம்தென்சீனக் கடல்
ஆள்கூறுகள்5°46′30″N 103°0′54″E / 5.77500°N 103.01500°E / 5.77500; 103.01500
தீவுக்கூட்டம்ரெடாங் தீவுக்கூட்டம்; மலேசியா
நிர்வாகம்
ரெடாங் தீவு

ரெடாங் தீவு (மலாய்: Pulau Redang; ஆங்கிலம்: Redang Island; சீனம்: 热浪岛; ஜாவி: ڤولاو رداڠ) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், கோலா நெருஸ் மாவட்டத்தில் தென்சீனக் கடலில் அமைந்து உள்ள ஒரு தீவு.

தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மிகப் பெரிய தீவுகளில் ஒன்றாகும். மேலும் இது உலகின் மிக அழகான தீவுகளில் ஒன்றாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.[1]

திராங்கானு மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்த ரெடாங் தீவு 7 கி.மீ. நீளமும் 6 கி.மீ. அகலமும் கொண்டது.

பொது[தொகு]

ரெடாங் தீவுக் கூட்டத்தில் ஒன்பது தீவுகள் உள்ளன.

  • ரெடாங் தீவு - Pulau Redang
  • லீமா தீவு - Pulau Lima
  • பாக்கு பெசார் தீவு - Pulau Paku Besar
  • பாக்கு கெச்சில் தீவு - Pulau Paku Kecil
  • கெரங்கா கெச்சில் தீவு - Pulau Kerengga Kecil
  • கெரங்கா பெசார் தீவு - Pulau Kerengga Besar
  • ஏக்கோர் தெபு தீவு - Pulau Ekor Tebu
  • லிங் தீவு - Pulau Ling
  • பினாங்கு தீவு - Pulau Pinang

ரெடாங் கடல் பூங்காவில் உள்ள அனைத்துத் தீவுகளிலும் ரெடாங் தீவு தான் மிகப் பெரியது. ரெடாங் தீவில் ஓர் உயரமான குன்று உள்ளது. அதன் பெயர் புக்கிட் பெசார் (Bukit Besar). கடல் மட்டத்தில் இருந்து 359 மீ உயரத்தில் உள்ளது.

ரெடாங் தீவுக் கூட்டம்[தொகு]

ரெடாங் தீவில் இருந்து பாசிர் பாஞ்சாங் தீவின் ஒரு காட்சி

ரெடாங் தீவுக் கூட்டம் மலேசியக் கடல் பூங்காக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு பாதுகாக்கப் படுகிறது (Gazetted and Protected as Marine Parks of Malaysia). தற்போது, ரெடாங் தீவு, லாங் தெங்கா தீவு (Lang Tengah Island), பெர்கெந்தியான் தீவு (Perhentian Island) மற்றும் கப்பாஸ் தீவு (Kapas Island) ஆகிய பெரிய தீவுகளில் மட்டுமே பார்வையாளர்களுக்கான தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

ஆமைகள் முட்டையிடுவதற்கான தளமாகவும் இந்தத் தீவு விளங்குகிறது. மேலும் ஆமைகள் முட்டையிடும் கடற்கரைப் பகுதி மென்மையான வெள்ளை மணலால் மூடப்பட்டு இருக்கும். கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரத்தில் பவளப் பாறைகளையும் மீன்களையும் தெளிவாகப் பார்க்கலாம்.

ரெடாங் கடல் பூங்கா[தொகு]

ரெடாங் கடல் பூங்கா நிர்வாக மன்றம் (Pulau Redang Marine Parks) எனும் ஒரு பாதுகாப்பு மன்றம் உள்ளது. இந்த மன்றம், சுற்றுலாப் பயணிகளின் தவறான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதில் முதன்மை காட்டுகிறது.

கழிவுப் பொருட்களைக் கட்டுப் படுத்துதல்; பவளப் பாறைகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல் போன்ற்வை அந்த மன்றத்தின் முக்கிய இலக்குகளாக அமைகின்றன.

காலநிலை[தொகு]

ரெடாங் தீவு வெப்பமண்டல காலநிலையைக் கொண்டது. வெப்பநிலை சுமார் 30 செல்சியஸ். அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் சீனக் கடலின் வடகிழக்குப் பருவமழையால் ரெடாங் தீவு பாதிக்கப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலான ஓய்வு விடுதிகள் மூடப்படுகின்றன.

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையில் படகு போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்டு உள்ளது. மழையின் அளவு ஆண்டு முழுவதும் மாறுபடும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை அதிக மழை பெய்யும். ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை வறட்சியான காலம்.

தட்பவெப்ப நிலைத் தகவல், ரெடாங் தீவு
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.9
(91.2)
34.5
(94.1)
34.8
(94.6)
35.5
(95.9)
35.8
(96.4)
35.5
(95.9)
34.9
(94.8)
35.5
(95.9)
35.2
(95.4)
34.0
(93.2)
33.7
(92.7)
32.3
(90.1)
35.8
(96.4)
உயர் சராசரி °C (°F) 29.7
(85.5)
30.5
(86.9)
31.5
(88.7)
32.7
(90.9)
33.1
(91.6)
32.7
(90.9)
32.3
(90.1)
32.2
(90)
31.9
(89.4)
31.5
(88.7)
30.0
(86)
29.3
(84.7)
31.45
(88.61)
தினசரி சராசரி °C (°F) 26.3
(79.3)
26.6
(79.9)
27.2
(81)
27.9
(82.2)
28.0
(82.4)
27.5
(81.5)
27.3
(81.1)
27.0
(80.6)
26.9
(80.4)
26.7
(80.1)
26.3
(79.3)
26.2
(79.2)
26.99
(80.59)
தாழ் சராசரி °C (°F) 23.7
(74.7)
23.3
(73.9)
23.7
(74.7)
24.1
(75.4)
24.3
(75.7)
24.0
(75.2)
23.7
(74.7)
23.6
(74.5)
23.6
(74.5)
23.7
(74.7)
23.7
(74.7)
23.8
(74.8)
23.77
(74.78)
பதியப்பட்ட தாழ் °C (°F) 19.7
(67.5)
19.4
(66.9)
19.8
(67.6)
22.5
(72.5)
21.3
(70.3)
21.2
(70.2)
20.9
(69.6)
21.0
(69.8)
21.2
(70.2)
21.2
(70.2)
21.3
(70.3)
20.8
(69.4)
19.4
(66.9)
பொழிவு mm (inches) 124.6
(4.906)
73.5
(2.894)
162.5
(6.398)
87.0
(3.425)
104.0
(4.094)
116.5
(4.587)
105.1
(4.138)
137.5
(5.413)
188.2
(7.409)
224.3
(8.831)
732.0
(28.819)
534.8
(21.055)
2,590
(101.969)
ஈரப்பதம் 81 81 82 82 83 83 83 84 84 85 87 84 83.3
சராசரி பொழிவு நாட்கள் 16 8 10 9 10 11 10 13 15 19 23 22 166
ஆதாரம்: Malaysian Meteorological Department[2]

ரெடாங் தீவு காட்சியகம்[தொகு]

ரெடாங் தீவின் கடற்கரை

ரெடாங் தீவில் உள்ள பாசிர் பாஞ்சாங் கடற்கரை.
ரெடாங் தீவில் உள்ள ஒரு கடற்கரை மரப்பாலம்.
ரெடாங் தீவில் வெள்ளை மணல் கடற்கரை.

பாசிர் பாஞ்சாங் கடற்கரை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெடாங்_தீவு&oldid=3643847" இருந்து மீள்விக்கப்பட்டது